ப்ரோக்கோலி பொரியல் செய்வது இவ்வளவு ஈசியா? இது தெரியாம இத்தனை நாள், இந்த காயை பார்த்தால் கூட வாங்காமல் விட்டுட்டோமே.

broccoli-fry
- Advertisement -

காலிஃப்ளவர் போலவே பச்சை நிறத்தில் இருக்கக்கூடிய இந்த ப்ரோக்கோலியை பார்த்தால் யாரும் வாங்க மாட்டாங்க. இதை எப்படி சமைப்பது என்று தெரியாமலே இதை நிறைய பேர் வாங்கவே மாட்டாங்க. ஆனால் இந்த ப்ரோக்கோலி உடம்புக்கு ரொம்ப ரொம்ப ஆரோக்கியம் நிறைந்தது. கண் பார்வை நன்றாக தெரிய, எலும்புகள் வலுப்பெற, இதய நோய் பாதிப்புகள் வராமல் தடுக்க, செரிமான கோளாறுகளை சீர் செய்ய, கொலஸ்ட்ராலை குறைக்க, கேன்சரை அழிக்க, இளமையை தக்க வைக்க, இப்படி நன்மைகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இதோடு மட்டுமல்லாமல் விட்டமின் ஏ, சி சத்துக்களும் இதில் அதிகமாக நிறைந்துள்ளது. இனி கடையில் இந்த ப்ரோக்கோலியை பார்த்தால் விடாதீங்க. உடனே வாங்கிட்டு வந்துடுங்க. ரொம்ப ரொம்ப சுலபமான ப்ராக்கோலி ப்ரை ரெசிபி இதோ உங்களுக்காக.

இந்த பிரக்கோலியை எப்படி சமைப்பது என்பதை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு சில விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பிரக்கோலியை வாங்கி வீட்டில் வைத்து சமைக்காமல் விட்டு விட்டால் அது மஞ்சள் நிறத்தில் மாறிவிடும். அப்படி நிறம் மாறிவிட்டால் அதை சமைத்து சாப்பிட வேண்டாம். வாங்கியவுடன் கூடுமானவரை ஃப்ரிட்ஜில் கூட ஸ்டோர் செய்யாமல் அப்போதே சமைப்பது நல்லது.

- Advertisement -

அதே சமயம் இதை ரொம்ப நேரம் வேக வைக்க கூடாது. அப்படி ரொம்ப நேரம் சமைக்கும்போது இதில் இருக்கும் சத்துகள் குறைந்து போவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. (இதனால்தான் சுடுதண்ணீரில் போட்டு, ஐந்து நிமிடங்கள் வேக வைத்த பிரக்கோலியை அப்படியே வெஜிடபிள் சாலடில் போட்டு சாப்பிடுவார்கள்.)

செய்யும் முறை

இந்த ப்ரோக்கோலியை காலிபிளவர் போலவே தான் சுத்தம் செய்ய வேண்டும். ப்ரோக்கோலிக்கு கீழே இருக்கக்கூடிய தண்டுகளை எல்லாம் நீக்கிவிட்டு, உங்களுக்கு தேவையான சைஸில் நறுக்கி வெந்நீரில் உப்பு போட்டு, 2 நிமிடம் கழித்து தண்ணீரை வடிகட்டி எடுத்து விட வேண்டும். மீண்டும் ஒருமுறை சாதாரண தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சுத்தம் செய்த பிரக்கோலி ஒரு 250 கிராம் அளவு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

செய்முறை

அடுப்பில் ஒரு கடாயை வைத்து 3 ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் சீரகம் – 1/2 ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1, கருவேப்பிலை – 2 கொத்து போட்டு, வதக்குகள். வெங்காயம் பிரவுன் கலர் வந்ததும் இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன், சேர்த்து மீண்டும் வதக்க வேண்டும்.

அடுத்தபடியாக சுடுதண்ணீரில் போட்டு வைத்திருக்கும் பிரக்கோலியை இதோடு சேர்த்து ஒரு முறை கலந்து விட்டு மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன், தனியாத்தூள் அரை – 1 ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு போட்டு எல்லா பொருட்களையும் நன்றாக கலந்து விட்டு, லேசாக மிகக் குறைந்த அளவில் தண்ணீர் தெளித்து, மூடி ஐந்திலிருந்து ஆறு நிமிடங்கள் இந்த ப்ரோக்கோலியை வேக வைத்து எடுத்தால் சூப்பரான பிரக்கோலி வருவல் தயார். ரொம்பவும் தண்ணீர் ஊற்றி கொழகொழவென வேக வைத்தால் ப்ரோக்கோலி சுவை தராது. அதில் இருக்கும் சத்துகளும் வீணாகிவிடும்.

இதையும் படிக்கலாமே: ரவை தோசையை இப்படி செய்தால் 2 நிமிஷத்துல ரொம்ப சூப்பரான, மொறு மொறுன்னு டேஸ்டியா செய்யலாம். வாங்க இதை எப்படி செய்றதுன்னு தெரிஞ்சிக்கலாம்.

ஒரு மூடி போட்டு வேக வச்சுக்கோங்க. இடை இடையே மூடியை திறந்து கலந்து விட்டுக் கொண்டே இருங்க. அதாவது ரோஸ்ட் போல டிரை ஆக ஃப்ரை ஆகி வரவேண்டும். இதை சுடச்சுட சப்பாத்தியோடு தொட்டு சாப்பிடலாம். அப்படி இல்லை என்றால் சாம்பார் சாதம், ரசம் சாதத்தோடு தொட்டு சாப்பிடவும் சுவையாக தான் இருக்கும். மிக எளிமையான முறையில் ப்ரோக்கோலியை இப்படி சமைத்து ருசித்து ஆரோக்கியமாக இருங்க.

- Advertisement -