ரவை தோசையை இப்படி செய்தால் 2 நிமிஷத்துல ரொம்ப சூப்பரான, மொறு மொறுன்னு டேஸ்டியா செய்யலாம். வாங்க இதை எப்படி செய்றதுன்னு தெரிஞ்சிக்கலாம்.

- Advertisement -

இந்த டிபன் வகைகளில் நாம் அதிகமாக செய்வது இட்லி தோசை தான். இதற்கு மாவை முன்னமே தயார் செய்து வைக்க வேண்டும். இப்போது எல்லாம் கடைகளில் ரெடிமேட் மாவு கிடைக்கிறது. எப்போதுமே தோசை, இட்லி என்று செய்து கொண்டிருக்காமல் கொஞ்சம் வித்தியாசமாக அதே நேரத்தில் நல்ல சுவையான உணவாக இந்த ரவை தோசையாக சாப்பிடலாம். இந்த தோசை காலையில் வேலைக்கு செல்லும் போது சட்டென்று செய்து விடக் கூடிய ஒரு சிம்பிள் ரெசிபி தான். இதை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

ரவை – 1 கப், அரிசி மாவு – 1 கப், கோதுமை மாவு – 1/4 கப், தயிர் – 2 டேபிள் ஸ்பூன், வெங்காயம் -1(பொடியாக நறுக்கியது) தக்காளி -1 (பொடியாக நறுக்கியது) மிளகாய்த் தூள் -1/2 டீஸ்பூன், மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன், உப்பு – 1/4 கால் டீஸ்பூன், மிளகு -10, கறிவேப்பிலை – 1கொத்து.

- Advertisement -

செய்முறை

ரவை தோசை செய்ய முதலில் ஒரு பவுலில் ரவை, அரிசி மாவு (இதற்கு பச்சரிசி மாவு, இடியாப்ப மாவு என உங்களிடம் எந்த அரிசி மாவு இருந்தாலும் அதை சேர்த்து கொள்ளுங்கள் ). இத்துடன் தயிர், மிளகு இரண்டையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து வெங்காயம், தக்காளி, கருவேப்பிலை என இவை அனைத்தையும் பொடியாக நறுக்கி இதில் சேர்த்த பிறகு மிளகாய் தூள், மஞ்சள், உப்பு எல்லாம் சேர்த்து மாவை கலந்து நன்றாக கொள்ளுங்கள். இந்த மாவு தோசை மாவின் பதத்தை விட சற்று அதிகமாகவே தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த மாவை ஊற வைக்க வேண்டிய அவசியம் கூட இல்லை, இவையெல்லாம் கலந்த பிறகு அடுப்பை பற்ற வைத்து தோசை கல்லை வைத்து சூடானதும், மாவை எடுத்து தோசை ஊற்ற வேண்டியது தான். இந்த தோசை திருப்பி போட்டு எடுக்க வேண்டியது இல்லை. அப்படியே ஊற்றி எடுத்து விடலாம். நல்ல மொறு மொறுவென்று இருக்கும்.

இதையும் படிக்கலாமே: இந்த சட்னியை எதைக்கொண்டு அரைத்தீர்கள் என்று ஆராய்ச்சி செய்தாலும் யாராலும் கண்டுபிடிக்க முடியாது. ஆரோக்கியம் நிறைந்த இந்த சட்னி ரெசிபி உங்களுக்கும் வேணுமா?

இந்த ரவை தோசைக்கு தேங்காய் சட்னி, கார சட்னி என எதுவாக இருந்தாலும் இதற்கு நல்ல காம்பினேஷன் தான். அவரச நேரத்திற்கு சட்னு செய்ய கூடிய இந்த ரவை தோசையை நீங்களும் கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க. ரொம்பவே டேஸ்ட் இருக்கும் சீக்கிரத்தில் வேலையும் முடியும். இந்த ரவா தோசையை குழந்தைகள் கூட மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

- Advertisement -