ஜோதிடம் : 12 ராசியினரின் இல்வாழ்க்கை சிறக்க இதை செய்யுங்கள்

12-rasi-thirumanam

ஆணும், பெண்ணும் உடல் மற்றும் மனதளவில் வேறுபாடுகள் நிறைந்தவர்கள். அப்படிப்பட்ட இந்த இருவரையும் இணைக்கும் ஒரு பந்தமாக திருமணம் எனும் இல்வாழ்க்கை பந்தம் இருக்கிறது. அந்த வகையில் 12 ராசியினரும் எத்தகையவரை தங்களின் வாழ்க்கை துணையாக அமைத்து கொள்ள வேண்டும் என்பதை பற்றி ஜோதிட சாஸ்திரம் கூறுவதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்:

Mesham Rasi

செவ்வாயின் ஆதிக்கம் அதிகமுள்ள மேஷ ராசியினர் எதையும் எதிர்த்து நிற்கிற, சளைக்காமல் செயல்படுகின்ற நபரை தங்கள் வாழ்க்கை துணையாக்கி கொள்ள அதிகம் விரும்புவார்கள். அதே நேரத்தில் தன்னம்பிக்கை குணமும் உங்களின் செயல்பாடுகளில் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் வகையிலான நபர்களை நீங்கள் வாழ்க்கை துணையாக்கி கொள்வது நல்லது.

ரிஷபம்:

Rishabam Rasi

- Advertisement -

காதல், அன்பு போன்ற உணர்வுகள் அதிகம் நிரம்பிய ரிஷப ராசியினர் எளிதில் எதற்காகவும் பணிந்து போகாத நபர்களை உங்கள் வாழ்க்கை துணையாக்கி கொள்ள விரும்புவீர்கள். பிறர் மீது அதிக அக்கறை கொண்ட நீங்கள் உங்கள் மீது அதிக அன்பும், அக்கறையும் கொண்ட நபர்களை வாழ்க்கை துணையாக பெறும் பாக்கியம் பெற்றவர்களாவர்.

மிதுனம்:

midhunam

பல விடயங்களை அறிந்து வைத்திருக்கும் நீங்கள் பிறரால் எளிதில் புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருப்பீர்கள். அப்படியிருப்பதை நீங்களும் மிகவும் விரும்புவீர்கள். உங்கள் எண்ண ஓட்டங்களை புரிந்து கொள்ள கூடிய, உங்களுடன் அதிகம் பேச விரும்பும் நபர்களை வாழ்க்கை துணையாக கொள்வதால் உங்கள் இல்வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

கடகம்:

Kadagam Rasi

பிறரின் மீது அதிக அக்கறை கொண்ட நீங்கள் உங்களுடன் நேரத்தை செலவிடும் எவரையும் உங்களை பிடிக்குமாறு செய்து விடும் சக்தி பெற்றவர்கள் ஆவர். உங்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான, உங்களுடன் நேரத்தை செலவிடுவதில் அதிக விருப்பம் கொண்ட நபர்களை உங்கள் வாழ்க்கை துணையாக ஏற்றுகொள்வதால் உங்கள் வாழ்க்கை சிறக்கும்.

சிம்மம்:

simmam

கம்பீர தன்மை அதிகம் கொண்ட நீங்கள் உங்கள் எதிரியையும் மதிக்கும் பண்பு கொண்டவர்கள். உங்களை எதிர்ப்பவர்களால் உத்வேகம் மிக சிறப்பான காரியங்களை நீங்கள் செய்ய கூடியவர்கள். எனவே உங்களின் அனைத்து செயல்பாடுகளிலும் உங்களை எதிர்த்து கேள்விகேட்கும் அதே நேரத்தில் நீங்கள் தொடர்ந்து செயல்பட உற்சாகப்படுத்தும் நபர்களை வாழ்க்கை துணையாக கொண்டாள் வாழ்க்கை சிறக்கும்.

கன்னி:

Kanni Rasi

அனைத்திலும் சிறந்தவற்றை தேர்ந்தெடுக்கும் திறன் கொண்ட நீங்கள் சமயங்களில் பிறரின் அன்பிற்காக ஏங்குவீர்கள். எனவே உங்களின் அனைத்து விடயங்களிலும் உங்களை ஊக்குவிக்கவும், உங்களை மிக ஆழமாக புரிந்து கொண்டிருக்கும் நபர்களை வாழ்க்கை துணையாக கொள்வதால் உங்களின் திருமண வாழ்க்கை சிறக்கும்.

துலாம்:

Thulam Rasi

சுகமான அனுபவங்களை மிகவும் விரும்பும் நீங்கள் பிறரை காதலிப்பதை விட நீங்கள் பிறரால் காதலிக்கப்படுவதை மிகவும் விரும்புவீர்கள். அவர்களின் கட்டற்ற அன்பிற்காக ஏங்குவீர்கள். எனவே உங்கள் மீது அதிக பிரியமும், அன்பும் செலுத்தும் நபர்களை வாழ்க்கை துணையாக்கி கொள்வதால் உங்களின் இல்வாழ்க்கை இன்பமயமானதாக இருக்கும்.

விருச்சிகம்:
virichigam

எதையும் நேர்பட பேசும் குணம் கொண்ட விருச்சிக ராசியினர் நீங்கள் உங்களின் தகுதிக்கு எட்டாத உயரத்தில் இருக்கும் நபர்களோடு தான் உறவு ஏற்படுத்திக்கொள்ள விரும்புவீர்கள். நீங்கள் நீங்களாக இருப்பதை எவர் ஏற்றுக்கொள்கிறாரோ அவரையே உங்கள் வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொள்வதால் உங்கள் வாழ்நாள் முழுக்க இன்பம் நீடிக்கும்.

தனுசு:

Dhanusu Rasi

உயர்ந்த எண்ணங்களும் சிந்தனைகளும் கொண்ட நீங்கள் பிறரும் அவ்வாறு இருந்தால் மிகுந்த மகிழ்ச்சியடைவீர்கள். சுதந்திர மனப்பான்மையும், உங்களின் குறைகளை ஈடு செய்கின்ற குணாதிசயங்கள் கொண்ட நபரை வாழ்க்கை துணையாக அமைத்து கொண்டால் நீங்கள் மேலும் பல நன்மைகளையும், மகிழ்ச்சியையும் வாழ்வில் கிடைக்கப்பெறுவீர்கள்.

மகரம்:

Magaram rasi

எதிலும் சற்று வேகமாக செயல்படும் நீங்கள் மற்றவரின் மீது அன்பை வெளிப்படையாக காட்டுவதில் சற்று கூச்சம் கொண்டவர்களாக இருப்பீர்கள். உங்களின் எண்ணங்கள், செயல்கள் போன்றவற்றை பிரதிபலிக்கும் நபர்கள் உங்களை கவரக்கூடும். மேலும் உங்களை சற்றும் சோர்ந்திருக்காமல் தொடர்ந்து செயல்பட ஊக்குவிக்கும் நபரை வாழ்க்கை துணையாக கொள்வது சிறந்தது.

கும்பம்:
Kumbam Rasi

எதிலும் நிதானமாக செயல்படும் தன்மை கொண்ட கும்ப ராசிகாரர்கள் பிறர் செய்யும் தவறுகளை பொறுத்து அவர்களை நல்வழிக்கு கொண்டுவரும் திறன் கொண்டவர்கள் ஆவர். உங்களுக்கு உங்களிடம் இல்லாத திறமைகளை கொண்ட நபர்கள் உங்கள் வாழ்க்கையை முழுமையடைய செய்பவர்களாக இருப்பதால் அத்தகைய நபர்களை வாழ்க்கை துணையாக்கி கொள்வது நன்மை தரும்.

மீனம்:
meenam

உயர்ந்த குணங்கள் பலவற்றை கொண்ட நீங்கள் பிறருக்காக எதையும் விட்டுக்கொடுக்க தயங்கமாட்டீர்கள். உங்களுக்கு எப்போதும், எதிலும் உடனிருந்து உங்கள் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ளும் நபர்களை மிகவும் விரும்புவீர்கள். அப்படிப்பட்ட நபர்களை உங்களின் வாழ்க்கை துணையாக அமைத்து கொள்வதால் உங்களின் வாழ்க்கை மிகவும் சிறப்பானதாக மாறும்.

இதையும் படிக்கலாமே:
சூரிய பெயர்ச்சி பலன்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have 12 rasi marriage advice in Tamil. It is also called as 12 rasi in Tamil or 12 rasigal in Tamil or Thirumana palan in Tamil or 12 rasi thirumana porutham in Tamil.