நாளை புதன்கிழமை! மதியம் என்ன உணவு சமைத்தால், நம்முடைய வீட்டிற்கு நல்லது என்று சாஸ்திரம் சொல்கிறது. தெரிந்து கொள்ளலாமா?

pudan-bagava
- Advertisement -

புதன் கிரகத்திற்கு உரியது, இந்த புதன்கிழமை. புதன்கிழமை வழக்கமாக, உங்கள் வீட்டில் என்ன சமைத்தாலும் சரி, அந்த சமையலோடு சேர்த்து, பின்வரும் குறிப்புகளையும் கொஞ்சமாக பின்பற்றி வந்தீர்கள் என்றால், உங்கள் குடும்பத்திற்கு நல்லது என்று, நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. எந்த கிழமையில் என்ன சமைக்க வேண்டும்? அந்தக் கிழமைக்கு உண்டான சமையலை, சமைப்பதன் மூலம் கட்டாயம் நம் வீட்டில் சுபிட்சம் உண்டாகும் என்பது நிதர்சனமான உண்மை. சரி, புதன் கிழமை என்ன சமைக்கலாம்? தெரிந்து கொள்ளலாமா?

pudhan-bagavan

புதன்கிழமை அன்று நம்முடைய வீடுகளில் கீரை சேர்த்த பதார்த்தங்களை சமைக்கலாம். கீரை கூட்டு, கீரை பொரியல், செய்வது மிகவும் நல்லது. அதிலும் குறிப்பாக, முருங்கைக் கீரை பொரியல் நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது. துவரம் பருப்பு அல்லது பாசிப் பருப்பு போட்டு கீரை கூட்டை செய்துகொள்ளலாம். உங்களால் முடிந்தால் வேப்பம்பூவை சிறிதளவு எடுத்து சமையலில் சேர்த்துக் கொள்ளலாம். வெந்தயம் சேர்த்த குழம்பு செய்யலாம்.

- Advertisement -

வேப்பம்பூவை 2 பறித்து எண்ணெயில் போட்டு வதக்கி, ரசத்தில் கொட்டி விட்டால் கூட, போதும். இதேபோல் பாகற்காயை சமைப்பது மிகவும் நல்லது. பாகற்காய் தொக்கு செய்யும் போது, சில பேர் அதில் வெங்காயம் சேர்ப்பார்கள். புதன்கிழமை அன்று, உங்கள் வீட்டில் பாகற்காய் செய்தால், அதில் வெங்காயம் சேர்க்காமல் சமைப்பது மிகவும் நல்லது.

Murungai keerai

பாசிப்பருப்பு, செய்யப்பட்ட பாயாசத்தை சமைக்கலாம். முடிந்தவரை பால் சேர்த்து எந்த ஒரு பொருளையும் சமைக்காமல் இருப்பது புதன்கிழமை அன்றைக்கு மிகவும் நல்லது. புதன்கிழமை பச்சை வாழைப்பழத்தை வீட்டிற்கு வாங்கி வருவது மிகவும் சிறப்பு என்று சொல்லப்பட்டுள்ளது. தயிர் சாதம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

- Advertisement -

புதன்கிழமை அன்று, பூஜை அறையில் பச்சை வாழைப்பழத்தை நிவேதனமாக இறைவனுக்கு படைத்து, தீபமேற்றி வழிபடும் பட்சத்தில் நம்முடைய இல்லறம் என்றும் சுபிட்சமாக இருக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. உங்களால் முடிந்தால் வாரம் தோறும் வரும் புதன் கிழமைகளில், பச்சை வாழைப்பழத்தை தானமாகக் கொடுப்பது மேலும் சிறப்பினை தேடித்தரும்.

banana

புதன்கிழமை என்றால், மேல் குறிப்பிட்டுள்ள பொருட்களை மட்டும் தான் வீட்டில் சமைக்க வேண்டும் என்று சொல்லப்படவில்லை. இந்த பொருட்களில் உங்களால் சமையலில் ஏதாவது ஒன்றை மட்டும் சேர்க்க முடிந்தால் கூட, அதுவே போதும். புதன் பகவானின் அனுக்கிரகத்தைப் பெற்று, நாம் சமைக்கும் பொருட்கள் வீணாகாமல் இருக்க, சில சாஸ்திர குறிப்புகளை பின்பற்றி, சமைத்து தான் பாருங்களேன்!

- Advertisement -

samayal

சம்பிரதாயங்கள் தெரியாமல் இதுவரை சமைத்தது என்பது வேறு. புதன்கிழமை இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து சமைத்தால்,  நல்லது என்பதை, குடும்பத் தலைவிகள் மனதில் நினைத்துக் கொண்டு, இப்படி ஒரு முறை சமைத்து பாருங்கள், உங்களின் மனநிறைவுக்கு அளவே இருக்காது. உங்கள் வீட்டில் சாப்பிடுபவர்களின் மன நிலைமை எப்படி இருக்கிறது? என்பதில் நிச்சயம் வித்தியாசத்தை தெரிந்துகொள்ள முடியும். சமைப்பவர்களும் மனநிறைவோடு சமைக்க வேண்டும். அதை சாப்பிடுபவர்களின் வயிறோடு சேர்த்து, மனநிறைவும் ஏற்படவேண்டும் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
இதையெல்லாம் கூடவா நல்ல சகுனம்னு சொல்லுவாங்க? சில கேள்விபடாத சகுன சாஸ்திரத்தின் வியக்க மற்றும் சிந்திக்க வைக்கும் தகவல்கள் இதோ!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -