புதன் பெயர்ச்சி பலன்கள் 2019

budhan

புதன் பகவான் அக்டோபர் 23 ஆம் தேதி இரவு 11.33 மணி அளவில் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகி உள்ளார். இதனால் 12 ராசிக்கார்களுக்கும் ஏற்படும் முழுமையான பலன்கள் என்ன என்பதை இந்த பதிவில் காண்போம் வாருங்கள்.

மேஷம் ராசி:
Aries zodiac sign

பேச்சிற்கு அதிபதியான புதன் உங்கள் ராசிக்கு 8வது வீட்டில் மறைகின்றார். 8ல் புதன் மறைவது நல்லதாக இருந்தாலும், பேச்சின் அதிபதியாக உள்ள புதனின் மறைவினால் உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை. தேவையில்லாத வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. சில சமயம் மௌனதில் சம்மதத்தையும் கூறலாம்.
பணவரவு சீராக இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் முன்னேற்றம் அடைவீர்கள்.

ரிஷபம்:
Taurus zodiac sign

உங்கள் ராசிக்கு 7வது இடமான களஸ்திர ஸ்தானத்தில் புதன் இருக்கின்றார். இதனால் கணவன் மனைவி இடையே பிரச்சனைகள் வர வாய்ப்பு உண்டு. தொழிலில் வெற்றி பெறலாம். வாகனங்கள் வாங்க இது நல்ல நேரம் ஆகும். உடல் நலனில் கவனம் கொள்வது நல்லது. தேவையில்லாத மருத்துவ செலவுகள் வந்து பண விரையம் ஆகும் காலம் இது.

மிதுனம்:
Gemini zodiac sign

- Advertisement -

உங்கள் ராசியின் அதிபதி புதன் 6வது இடத்தில் இருக்கின்றார். இதனால் உங்களுக்கு தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வரலாம். உங்கள் பேச்சின் திறமையினால் உங்களுக்கு புகழ் அதிகரிக்கும். பணவரவு சீராக இருக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக சந்திக்க முடியாமல் இருந்த நண்பரை சந்திப்பீர்கள்.

கடகம்:
zodiac sign

உங்கள் ராசிக்கு 5வது இடத்தில் புதன் இருக்கின்றார். இது உங்களுக்கு வெற்றியைத் தரக்கூடியது. உங்களின் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் மேல் அதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்குவதற்கான காலம் இது. நிறைய பணம் வரும். அதற்கான சுப செலவுகளும் பின்தொடர்ந்து வரும். சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்:
Leo zodiac sign

உங்கள் ராசிக்கு 4வது இடத்தில் புதன் இருக்கின்றார். நல்ல வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான நேரம் இது. வேலைவாய்ப்பில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் பேச்சிற்கு ஒரு தனி மரியாதையும் வரும். உடல்நலம் சீராக இருக்கும். மன அமைதி கிடைக்கும். வாகனங்களைப் பராமரிக்க அதிக செலவு ஆகும் வாய்ப்பும் உள்ளது.

கன்னி:
Virgo zodiac sign

உங்கள் ராசிக்கு 3வது இடத்தில் புதன் இருக்கின்றார். நீங்கள் புதியதாக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் வெற்றி அடையும். உங்கள் சகோதரர்களின் உடல்நலனில் அக்கறை கொள்வது நல்லது. உறவினர்களிடம் சண்டை ஏற்பட்டு மனக்கசப்புகள் உண்டாகும். வெளிநாடு செல்ல முயற்சி செய்பவர்களுக்கு விசா கிடைக்க வாய்ப்பு உண்டு.

துலாம்:
Libra zodiac sign

நேற்று வரை உங்கள் ராசியில் இருந்த புதன் இப்பொழுது உங்கள் ராசியிலிருந்து 2ஆம் இடத்திற்கு செல்கின்றார். இரண்டாவது இடம் வாக்கு ஸ்தானம் என்பதால் உங்கள் பேச்சு திறமை அதிகரிக்கும். உங்கள் பேச்சு இனிமையாகும். உங்கள் உடல் நலத்தில் அக்கறை கொள்வது நல்லது. பணவரவு சீராக இருக்கும்.

விருச்சிகம்:
Scorpius zodiac sign

உங்கள் ராசியில் புதனும் குருவும் ஒன்றாக இணைக்கின்றார்கள். இதனால் கணவன் மனைவி இடையேயானை உறவு பலம் பெறும். உடல்நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான நல்ல நேரம் இது.

தனுசு:
Sagittarius zodiac sign

உங்கள் ராசிக்கு 12ம் இடமான விரைய ஸ்தானத்தில் புதன் இருக்கின்றார். இதனால் கணவன் மனைவி இடையே சின்ன சின்ன சண்டைகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. இருவரும் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உடல் நல நலனில் பிரச்சனைகள் ஏற்படும். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் உடன் சிறுசிறு மனக்கசப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு. கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டிய காலம் தான் இது.

மகரம்:
Magaram rasi

உங்களுக்கு 11வது இடமான லாப ஸ்தானத்தில் குரு இருக்கின்றார். இது உங்களுக்கு யோகமான காலம் தான். பண வரவு அதிகரிக்கும். இதன் காரணமாக புதியதாக பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்புகளும் உண்டு. அதிர்ஷ்டத்தை அள்ளித் தரக்கூடிய காலம் இது.

கும்பம்:
Aquarius zodiac sign

உங்கள் ராசிக்கு 10ஆம் இடத்தில் புதன் இருக்கின்றார். நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களது திறமை வெளிப்படும். பணவரவு சீராக இருக்கும். உறவினர்களின் உதவியை பெறலாம். கணவன் மனைவி இடையேயான ஒற்றுமை அதிகரிக்கும். சீரான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள நல்ல காலம் இது.

மீனம்:
Pisces zodiac sign

உங்கள் ராசிக்கு புதன் 9வது இடத்தில் இருக்கிறார்.  பணவரவு அதிகரிக்கும். புதிய வேலைவாய்ப்புகள் பெற வாய்ப்பு உள்ளது. சம்பள உயர்வுடன், பதவி உயர்வும் கிடைக்கும். பதவி உயர்வுடன் வேறு இடத்திற்கு மாற்றலாகி செல்வதற்கான வாய்ப்புகளும் உண்டு. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைய வாய்ப்பு உள்ளது.