ஆகஸ்ட் 26 வியாழக்கிழமை சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு இடம் பெயரும் புதன் பகவான்! இதனால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள் யாரெல்லாம்? 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

budhan-bagawan
- Advertisement -

நம் ஜாதகத்தில் நமக்கு நன்மைகளை செய்யக்கூடிய சுப கிரகமாக விளங்கும் புதன் பகவான் புத்தி காரகனாக திகழ்கின்றார். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியில் இடம் பெயர்ந்து கொண்டிருக்கும் புதன் பகவான் இந்த மாதம் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டமான பலன்களை கொடுக்க இருக்கிறார்? புத பகவான் பெயர்ச்சியின் பொழுது நடக்கக் கூடிய நன்மைகள் என்னென்ன? என்பதை நீங்களும் அறிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி சிறப்பான பலன்களைக் கொடுக்க இருக்கிறது. உங்கள் திறமைகளை வெளிக் கொணர வேண்டிய முக்கியமான தருணமாக இந்த பெயர்ச்சி காலம் உங்களுக்கு அமைய இருக்கிறது. கிடைக்கின்ற வாய்ப்புகளை எல்லாம் பற்றிக் கொண்டு முன்னேறுவது உத்தமம். வருமானத்தில் ஏற்பட்டிருந்த தடைகள் அகலும். ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றி மறையும்.

- Advertisement -

ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி இனிய பலன்களை கொடுக்க இருக்கிறது. பேச்சில் இனிமையும், எளிதாக கவரும் திறமையும் உண்டாகும். நீங்கள் எப்போதோ செய்த புண்ணியம் இன்று உங்களை காக்கும் சந்தர்ப்பங்கள் உருவாகும். புதிய முயற்சிகளில் உங்களுடைய முழு ஈடுபாட்டை காண்பித்தால் ஏற்றம் காணலாம். பெரிய மனிதர்களின் ஆதரவை பெறுவீர்கள். குடும்ப பெரியோர்களிடம் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்டு எந்த ஒரு முயற்சியையும் செய்யுங்கள் நல்லதே நடக்கும்.

மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி அதிகமான வளர்ச்சியை கொடுக்க இருக்கிறது. இதுவரை மந்த நிலையில் செயல்பட்டுக் கொண்டிருந்த எல்லா விஷயங்களிலும் சுறுசுறுப்பு உண்டாகும். வருமானம் ஈட்டக்கூடிய விஷயங்களில் எதிர்பார்க்கும் லாபத்தை விட இரட்டிப்பாக கிடைக்கும். குடும்பத்தில் புதிய வரவு ஒன்று உற்சாகத்தை கொடுக்கும். ஆரோக்கியத்தில் எந்த குறையும் இல்லாமல் இருக்கும்.

- Advertisement -

கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி உங்கள் திறமைக்கு தீனி போடுவது போல அமைய இருக்கிறது. புதிய புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் ஆர்வம் அதிகரித்து காணப்படும். தடைபட்ட சில விஷயங்களில் லாபகரமான பலன்கள் உண்டாகும். வருமானத்தில் எதிர்பார்க்கும் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மற்றவர்களுடைய எதிர்பார்ப்புகளை எளிதாக நிறைவேற்றி விடுவீர்கள். கடினமான சூழ்நிலையையும் உங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்வீர்கள்.

சிம்மம்:
சிம்ம ராசியிலிருந்து பெயர்ச்சியாக போகும் புத பகவான் உங்களுக்கு அடுத்ததாக இருக்கும் கன்னி ராசிக்கு அதிர்ஷ்டமான பலன்களை கொடுப்பார். எனினும் உங்கள் ராசிக்கு இதுவரை அவர் விட்டு சென்ற சாதக சூழ்நிலைகளை மேலும் அதிகரிக்க செய்வார். பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். வெளியூர் வெளிநாடு தொடர்பான விஷயங்களில் வெற்றி காண்பீர்கள். ஆரோக்கியத்தை சற்று கவனித்துக் கொள்வது உத்தமம்.

- Advertisement -

கன்னி:
உங்கள் ராசிக்கு பெயர்ச்சியாக இருக்கும் புத பகவான் உங்களுக்கு அதிர்ஷ்டமான, அற்புதமான பலன்களைக் கொடுக்க இருக்கிறார். கன்னி லக்னகாரர்களுக்கு அசுப பலன்களை கொடுக்கும் புத பகவான் நினைத்ததை எல்லாம் நிறைவேற்றிக் கொடுக்க இருக்கிறார். மேலும் உங்கள் ராசிக்கு நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். புதிய பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். வருமானம் பன்மடங்கு பெருகும். வழக்கு தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை.

துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த புதன் பெயர்சியானது சிறப்பான முடிவுகளை எடுக்கக் கூடிய வல்லமையை கொடுப்பார். கலைத்துறையில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியை கொடுக்க இருக்கிறது. புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் யோகம் உண்டு. எதிர்பாராத திடீர் நன்மைகள் திக்கு முக்காடச் செய்யும்.

விருச்சகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கும் புதன் பெயர்ச்சி சிறப்பான பலன்களைக் கொடுக்கும். கடினமான காலத்தில் கூட கிடைக்க வேண்டிய உதவிகளை கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்க செய்வார். உங்களுடைய மன வலிமைக்கும் பல இடையூறுகள் ஏற்பட்டாலும் அனைத்திலும் இறுதியில் வெற்றியைக் கொடுப்பார். மனோதிடம் அதிகரிக்க கூடிய நாட்களாக இனிவரும் காலங்கள் உங்களுக்கு அமைய இருக்கிறது. எதிலும் பொறுமையுடன் செயல்படுங்கள் நல்லதே நடக்கும்.

தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி தொழில் ரீதியான புதிய நபர்களின் அறிமுகங்களை நிறையவே கொடுக்க இருக்கிறது. புதிய கூட்டாளிகளை இணைத்துக் கொள்வதில் சாதகமான பலன்களைக் கொடுப்பார். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு கூட அற்புதம் உண்டாகும். குடும்பத்தில் அமைதி மற்றும் நிம்மதி இருக்கும். பிள்ளைகளுடைய எதிர்காலம் பற்றிய திட்டமிடலில் வெற்றி காண்பீர்கள். மற்றவர்களை அனுசரித்து பொறுமை காப்பது உத்தமம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு புதன் பெயர்ச்சி ஏற்றத்தை கொடுக்க இருக்கிறது. இதுவரை உங்களை நெருக்கிக் கொண்டிருந்த கடன் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சுபயோக வைபவங்கள், பேச்சு வார்த்தைகள் தடைகளில் இருந்து நீங்கி வெற்றியைக் காணும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய மதிப்பு பன்மடங்கு உயர வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு கீழ் பணிபுரியும் பணியாளர்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவதால் ஏற்றம் காணலாம்.

கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு புத்தி காரகன் புத்தியைக் கொடுக்க இருக்கிறார். தவறான பாதையில் செல்ல இருக்கும் உங்களை நேர்வழியில் நடத்தி கொண்டு செல்வார். எது சரி? எது தவறு? என்கிற மன பக்குவத்தை வரவழைப்பார். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலையை நீக்கி புதிய உத்திகளை கையாள செய்வார். குடும்பத்தில் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்து சென்று ஒற்றுமையுடன் இருப்பீர்கள். புதன் கிழமை தோறும் புதபகவான் வழிபாடு செய்து வாருங்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம்.

மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு புதன் பகவான் சில குழப்பமான சூழ்நிலைகளை உருவாக்கி இறுதியில் வெற்றியை கொடுப்பார். எதிலும் ஒன்றுக்கு பலமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. சமயோஜிதமாக செயல்பட்டால் அதிர்ஷ்டமான பலன்களை பெறலாம். புதன் பகவான் வழிபாடு செய்து வர எதிலும் சிறந்த முன்னேற்றம் உண்டாகும். திடீரென நடக்கும் மாற்றங்கள் உங்களுக்கு சாதகமாக மாறும். எதை கண்டும் அஞ்சாமல் தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள் நல்லது நடக்கும்.

- Advertisement -