உங்களுக்கு திடீர் செல்வ சேர்க்கை ஏற்பட செய்வது எது தெரியுமா?

yogam

ஜோதிட கலை என்பது மிகவும் நுணுக்கனமாக ஒரு வானியல் சார்ந்த கணிதம் மற்றும் விஞ்ஞானம் ஆகும். ஒரு நபர் பிறக்கின்ற நேரத்தில் வானில் இருக்கும் கிரகங்கள், நட்சத்திரம், நேரம், திதி போன்ற பல விடயங்களை அடிப்படையாக வைத்து பலன்களை கணிக்கும் போது சரியாக இருக்கும். இங்கு சில லக்னங்களில் புதன், சூரியன் கிரகங்கள் இருப்பதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

Lord sooriyan

“மிதுனம், கன்னி, தனுசு, மீனம்” ஆகிய லக்னங்களில் பிறந்த ஜாதககர்களுக்கு அவர்களின் லக்னத்திற்கு 10 ஆம் இடத்தில் புதன் மற்றும் சூரியன் கிரகங்கள் சேர்ந்திருந்து, செவ்வாய் மற்றும் சனி கிரகங்களின் பார்வை மற்றும் சேர்க்கை ஏற்படாமல் இருக்கும் பட்சத்தில் மேற்கூறிய லக்னங்களில் பிறந்தவர்களின் வாழ்வில் நன்மையான பலன்கள் ஏற்படும்.

மேற்கண்ட ஜாதக அமைப்பை கொண்ட நபர்கள் யாருக்கும், எதற்கும் அடிமையாக இருக்க மாட்டார்கள். எந்த ஒன்றிற்கும் அடிமையாக மாட்டார்கள். இந்த ஜாதகர்கள் உணவு பொருட்கள் சம்பந்தமான வேலை, தொழில் போன்றவற்றிலும், பல வகையான வணிகங்களிலும் ஈடுபட்டிருப்பார்கள். திடீர் செல்வ யோகம் ஏற்பட்டு ஆடம்பர வீடு, கார், சொகுசு வாழ்க்கை போன்றவற்றை பெறும் நபர்களாக இருப்பார்கள்.

இத்தகைய ஜாதக அமைப்பை கொண்ட சிலர் மது, புகையிலை போன்ற போதை வஸ்துகளை விற்பனை செய்பவர்களாகவும், அதன் மூலம் மிகுந்த லாபம் ஈட்டும் நபர்களாகவும் இருப்பார்கள். இவற்றில் தனுசு லக்னத்தார்களுக்கு அந்த லக்னத்திற்கு 10 ஆம் இடத்தில் சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்களின் சேர்க்கை ஏற்படுமானால் அந்த ஜாதகர் சமுதாயத்தில் மிகவும் உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பார்.

இதையும் படிக்கலாமே:
ஜாதகத்தில் புதன் பகவான் தரும் பலன்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Budhan suryan palangal in Tamil. It is also called as Lagna palangal in Tamil or Jathagam palangal in Tamil or Jothidam lagnam in Tamil or Lagnangal palan in Tamil.