ஜாதகத்தில் புதன் பகவான் தரும் பலன்கள் பெற பரிகாரம் இதோ

budhan

விலங்குகளிடம் இருந்து மனிதர்கள் நாம் வேறுபட்டிருப்பதற்கு காரணம் நமது சிந்தனை திறன் தான். ஜோதிட சாஸ்திரத்தின் படி மனிதர்களின் சிந்தனை திறன் மற்றும் அறிவாற்றலுக்கு காரணம் நவகிரகங்களில் புதன் கிரகத்தின் தாக்கம் தான். மற்ற கிரகங்களை போலவே புதன் கிரகமும் பல நன்மையான பலன்களை தர வல்லதாகும். அப்படிப்பட்ட பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Budhan

நவகிரகங்களில் செவ்வாய் கிரகத்திற்கு அடுத்தபடியாக வருகிற கிரகமாக புதன் கிரகம் இருக்கிறது. இந்த புதன் கிரகத்தின் அம்சமாக திருமால் கருதப்படுகிறார். ஒரு மனிதனுக்கு சிறந்த சிந்தனை திறன், எழுத்து மற்றும் பேச்சாற்றல், செல்வ சேர்க்கை, கலைகளில் தேர்ச்சி, சிறந்த ஞாபக திறன், ஞானம் ஆகியவற்றிற்கு புதன் பகவான் காரகனாக இருக்கிறார். புதன் கிரகம் பாதி சுபம், பாதி அசுப தன்மை கொண்ட கிரகமாக இருக்கிறார்.

ஜாதகத்தில் மிதுனம், கன்னி ராசிகள் புதன் பகவானுக்குரிய ராசிகளாகும். கன்னி ராசி புதன் உச்சமடைகின்ற ராசியாகும். ஒருவரின் ஜாதகத்தில் இந்த இரு ராசிகளில் ஏதேனும் ஒன்றில் புதன் இருந்து, அந்த புதன் சுப கிரகங்களின் பார்வை பெறும் பட்சத்தில் புதன் பகவானின் யோகம் பெறும் நிலை உண்டாகிறது. அதிலும் கன்னி ராசியில் புதன் இருக்கப்பெற்றால் அந்த ஜாதகர் சமர்த்தியசாலியாக இருப்பார். அவர் தொட்ட காரியங்கள் அனைத்தும் பொன்னாகும். தனது சொந்த முயற்சியால் மிகுந்த செல்வங்களை சேர்ப்பார்.

சிறந்த கணித திறன் இருக்கும். எனவே ஜோதிட கலையில் ஒருவர் சிறந்து விளங்குவார்கள். புத்தக பதிப்பாளர், விளம்பரம், எழுத்தாளர், ஓவியம், சிற்பம்,தகவல் தொடர்பு துறைகளில் ஈடுபட்டு பொருளீட்டுவார்கள். ஜாதகத்தில் சூரியன் கிரகத்தோடு புதன் கிரகம் சேர்ந்து இருப்பதால் புத – ஆதித்ய யோகம் ஏற்படுகிறது. இதனால் ஜாதகர் தனது சொந்த திறமையால் சமூகத்திலும், அரசாங்கத்திலும் உயர்ந்த நிலையை அடைவார். ஜாதகத்தில் புதன் பாதகமான நிலையில் இருந்தாலும், புதன் பகவானின் அருளை பெற புதன் கிழமைகளில் பெருமாள், ஹயக்ரீவர் தெய்வங்களை வணங்கி வர நன்மைகள் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய கோயில்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Budhan bhagavan palangal in Tamil. It is also called as Budan jathagam palan in Tamil or Budha aditya yogam in Tamil or Budhan graham in Tamil or Budhan gragam patri in Tamil.