ஜூலை 7, 2021 அன்று ரிஷபத்திலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகும் ‘புத பகவான்! அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள் யாரெல்லாம்? 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

budhan-peyarchi
- Advertisement -

ஒவ்வொரு ராசியில் இருந்து ஒவ்வொரு மாதமும் பெயர்ச்சியாகி கொண்டே இருக்கும் புத பகவான் புத்தி காரகனாக விளங்குகிறார். தோல்வியை வெற்றியாக மாற்றிக் காட்டும் சாதுர்யம் பெற இவரின் அருள் நமக்கு தேவை. இந்த வகையில் வரும் ஜூலை 7ஆம் தேதி 2021 புதன் கிழமை அன்று ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பகல் 11:26 மணிக்கு புத பகவான் பெயர்ச்சியாக இருக்கிறார். அவரால் நன்மைகளையும், தீமைகளையும் பெறப்போகும் ராசிக்காரர்கள் யாரெல்லாம்? என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

மேஷம்:
மேஷ ராசிக்கு மூன்றாம் இடமாக இருக்கும் மிதுனத்தில் குரு பகவான் பெயர்ச்சியாக இருக்கிறார். இதனால் அவர்களுக்கு கிடைக்க இருக்கும் நன்மைகள் தொழில் ரீதியாகவும், உத்தியோக ரீதியாகவும் ஏராளம் என்று கூறலாம். புதிதாக தொழில் துவங்க நினைப்பவர்கள், வேலை தேடி அலைபவர்களுக்கு நல்ல காலமாக அமையும். ஆனால் ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்துங்கள், தேவையில்லாத மருத்துவ ரீதியான வீண் செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கும். அதுபோல் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதும் உத்தமம்.

- Advertisement -

ரிஷபம்:
ரிஷப ராசியில் இருந்து இரண்டாம் வீட்டில் புத பகவான் பெயர்ச்சியாக இருப்பதால் நல்ல பலன்களை காண இருக்கிறீர்கள். இதுவரை உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுக்காதவர்கள் இனி மதிப்பும், மரியாதையும் கொடுக்க துவங்குவார்கள். உற்றார், உறவினர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சாதக பலன்களை காணலாம். ஆரோக்கியத்தில் வீண் விரயங்கள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. புதனுக்கு உரிய பச்சை நிற உடைகளை உடுத்தி வாருங்கள் நன்மைகள் நடக்கும்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி சிறப்பான பலன்களை கொடுக்கும். புதன் புத்தி காரகனாக இருக்கின்றார். உங்களுடைய சாதுர்யமான திறமை வெளி உலகிற்கு வெளிக் கொணர வேண்டிய தருணமாக அமையும். புத்தி மந்தம் நீங்கி நல்ல ஒரு தெளிவு பிறக்கும். எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றியைக் காண்பீர்கள். வருமானம் உயர கூடிய வாய்ப்புகள் உண்டு. பெரிய மனிதர்களை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது உத்தமம். உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அப்படி கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால் சற்றும் எதிபார்க்காத முன்னேற்றம் காணலாம்.

- Advertisement -

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி வீண் விரயங்களை ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டு. பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதில் சற்று கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். தேவையற்ற கடன்கள் வாங்குவதை தவிர்க்கவும். தொழில் மற்றும் வியாபார ரீதியான வெளியிட போக்குவரத்துகளில் கவனத்துடன் இருப்பது உத்தமம். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்க ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்து செல்வது நல்லது. ஸ்ரீராமரை வழிபடுங்கள் நன்மைகள் பிறக்கும்.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சியால் நிறைய நன்மைகளை செய்யக்கூடிய அற்புதமான பலன்கள் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைப்பதில் சாதகப் பலன்கள் உண்டு. வருமானம் உயரக் கூடிய யோகம் உண்டாகும். சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு இதுவரை இருந்து வந்த போட்டிகள் குறைந்து நல்ல ஒரு முன்னேற்றமான சூழ்நிலை நிலவும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் வெற்றியை தரும். அனுமனை வழிபடுங்கள் நன்மைகள் நடக்கும்.

- Advertisement -

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றத்தை கொடுக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் யோகம் உண்டு. புதிய மற்றும் பழைய சொத்துக்கள் வாங்க மற்றும் விற்க வேண்டிய விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். இதுவரை வீண் விரயங்கள் செய்து வந்த நீங்கள் இனி சிக்கனத்தை மேற்கொள்ள பழகிக் கொள்வீர்கள். பிள்ளைகள் வழியில் இருந்து வந்த தொல்லைகள் நீங்கும்.

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி நல்ல ஒரு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய பெயர்ச்சியாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய பங்களிப்பு மென்மேலும் அதிகரித்து நல்ல ஒரு முன்னேற்றம் காண இருக்கிறீர்கள். விடாமுயற்சிக்கு விஸ்வரூப பலன் கிடைக்கக் கூடிய நேரமாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. புதன் கிழமையில் புதன் வழிபாடு செய்து வாருங்கள் நன்மைகள் நடக்கும்.

விருச்சிகம்:
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி திடீர் அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தரும். ஆடை, அணிகலன்கள் சேர்வதற்கு வாய்ப்புகள் உண்டு. பெண்களுக்கு புதிய பொருட்கள் அதிகம் சேரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய விடாமுயற்சிக்கு உரிய நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். இதுவரை இருந்து வந்த போட்டிகள் குறையும். திறமைக்கு உரிய பாராட்டுகளைப் பெறுவீர்கள். குடும்பம் செழிப்பாக இருக்க வெள்ளிக்கிழமையில் வீட்டில் தவறாமல் பூஜை செய்து வாருங்கள் நன்மைகள் நடக்கும்.

தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்கள் இந்த புதன் பெயர்ச்சிக்கு பிறகு எடுக்கும் முயற்சிகளில் நல்ல ஒரு முன்னேற்றத்தை காணலாம். தடைப்பட்ட அத்துணை காரியங்களும் நல்ல ஒரு முடிவுக்கு வரும் யோகமுண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகம் பொறுமை தேவைப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய கூட்டாளிகளின் ஆதரவு பெருகும் வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கிய ரீதியான விஷயத்தில் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருந்து கொள்வது நல்லது.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பெயர்ச்சியாகும் புதன் பகவான் கொடுக்கக்கூடிய நன்மைகளை விட தீமைகள் அதிகம் உண்டு. எதையும் எதிர்கொள்வதற்கான தைரியம் உண்டானாலும், தேவையற்ற வம்பு வழக்குகளில் சிக்குவது, குடும்ப பொறுப்புகளை சுமப்பது, சொத்துக்கள் விஷயத்தில் பிரச்சினை ஆகியவையும் நிகழும் என்பதை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். கூடுமானவரை மற்றவர்கள் பிரச்சினையில் தலையிடாமல் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உண்டாகும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு புதன் பகவான் பணத்தை பல வழிகளில் இருந்தும் கொண்டு வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்புவார். பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்கள் சீராகி வரும். வீட்டுத் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் அளவிற்கு லாபம் நிச்சயம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளுடன் இணக்கம் ஏற்படும். சக பணியாளர்களிடம் இருந்து வந்த போட்டிகள் நீங்கும். உங்களுடைய திறமைக்கு உரிய பாராட்டுகளைப் பெறுவீர்கள். புத பகவான் வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். பச்சை பயறு தானம் செய்து வர புண்ணியம் சேரும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சியால் கிடைக்கக் கூடிய நன்மைகள் ஏராளம். சுக ஸ்தானத்தில் அமர இருக்கும் புத பகவான் உங்களுடைய மருத்துவ ரீதியான வீண் விரயங்களை குறைக்க செய்யும். ஆரோக்கியத்தை படிப்படியாக முன்னேற்றம் காண செய்யும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் வரவு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எல்லாவற்றிலும் சாதகமான பலன்களை கொடுப்பார்கள். கணவன் மனைவி அன்பு பெருகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் கிடைக்கும்.

- Advertisement -