நாளை 2/11/2021 கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடம் பெயரும் புத பகவான்! இதனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யாரெல்லாம்? 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

budhan-astro-sign
- Advertisement -

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட நாட்களில் அல்லது காலங்களில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடம் பெயர்வது ஜோதிட சாஸ்திரமாகும். இதன் அடிப்படையில் பிலவ வருடம் நாளை செவ்வாய்க்கிழமை அன்று காலை 10:05 மணி அளவில் கன்னி ராசியில் இருந்து வந்த புதன் பகவான் துலாம் ராசிக்கு இடப் பெயர்ச்சி அடைகிறார். இதனால் 12 ராசிக்காரர்களுக்கும் கிடைக்க இருக்கும் அதிர்ஷ்ட பலன்கள் என்னென்ன? என்பதை நீங்களும் அறிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி அதிர்ஷ்டமான பலன்களை கொடுக்கும். புத்தி காரகனாக இருக்கும் புத பகவான் உங்கள் மந்த நிலையை போக்கி சுறுசுறுப்பான சூழ்நிலையை உண்டாக்குவார். தொழில் வளம் சிறப்பாக அமையும், இதனால் பொருளாதார ரீதியான முன்னேற்றம் பெறுவீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைத்து, சில முக்கிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகளை பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.

- Advertisement -

ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி நல்ல பலன்களை கொடுக்க இருக்கிறது. உங்கள் அறிவுத்திறன் மேலும் உங்களுக்கான முன்னேற்ற பாதையை நோக்கி பயணிக்க செய்யும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி அதிக லாபம் காணும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய புதிய வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். கும்பத்தில் ஒற்றுமை நிலவும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி சிறப்பான பலன்களைக் கொடுக்க இருக்கிறது. உங்களை சுற்றி இருக்கும் பொய்யான நண்பர்களை உங்களுக்கு வெளிக்காட்டக் கூடிய சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொடுக்க இருக்கிறார். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களின் கை ஓங்கி இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் சில ராஜ தந்திரங்களை கையாண்டு உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரங்களை பெறுவீர்கள். மேன்மையான விஷயங்களில் உங்களை முன்னிலைப்படுத்தி கொள்வீர்கள்.

- Advertisement -

கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி நல்ல பலன்களைக் கொடுக்க இருக்கிறது. சுப கிரகமாக இருக்கும் புத பகவான் உங்கள் ராசிக்கு மாமனார் வாழ்க்கையில் சில அனுகூலமான பலன்களைக் கொடுக்க இருக்கிறார். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வர்த்தக ரீதியான சிறப்பான லாபம் உண்டாக இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவற்றில் சாதகமான பலன்களைக் கொடுக்க இருக்கிறார். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.

சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி சில மென்மையான விஷயங்களை உங்களுக்கு பெற்றுக் கொடுக்க இருக்கிறது. ஆடம்பரப் பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட சிறப்பான லாபத்தை காண இருக்கிறீர்கள். கொடுக்கல், வாங்கல் தொடர்பான பிரச்சினைகள் நீங்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்புடைய விஷயங்களில் அனுகூலப் பலனை பெறுவீர்கள். கழுத்து தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டு மறையும்.

- Advertisement -

கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி நல்ல பலன்களைக் கொடுக்க இருக்கிறது. எதையும் போராடித் தான் பெற வேண்டியிருக்கும் ஆனால் எவ்வளவு தடைகளையும் தாண்டி வெற்றி உங்களுக்குத் தான் கிடைக்கப் போகிறது. இளைய சகோதரர்கள் வழியில் சில மனக்கசப்புகள் வந்து மறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வாசிப்பு திறன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். நிலம் தொடர்பான விஷயங்கள் சாதக பலன் கொடுக்கும்.

துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி சிறப்பான பலன்களை கொடுக்க இருக்கிறது. குடும்பத்துடன் வெளியில் செல்ல வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்பதை விட நல்ல பலன்கள் உண்டாகும் என்பதால் பெரிய தொகையை தாராளமாக ஈடுபடுத்தி நல்ல லாபம் காணலாம். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதகப்பலன் உண்டாகும். குறிப்பாக ஜோதிடம், வழக்கறிஞர், பெயிண்டிங் போன்ற தொழில்களில் அனுகூல பலன் உண்டு.

விருச்சகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி சிறப்பான பலன்களை கொடுக்க இருக்கிறது. நிலம் தொடர்பான விஷயங்களில் நீங்கள் சாதக பலன் பெறப் போகிறீர்கள். புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் ஆர்வம் அதிகரிக்கும். அழகு மற்றும் கலை தொடர்பான தொழில்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு சிறப்பான பலன்கள் உண்டாகப் போகிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகம் பொறுமை தேவைப்படக்கூடிய நாட்களாக இருக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வது அனுகூல பலன் கொடுக்கும்.

தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி ஆரோக்கிய ரீதியான பாதிப்புகளை கொடுக்கப் போகிறது எனவே கூடுதல் அக்கறையுடன் இருப்பது நல்லது. தோள்பட்டை, கைகள், தொண்டை போன்ற பகுதிகளில் பாதிப்புகள் வந்து மறையும். ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள், விஞ்ஞானிகள், மளிகை கடை வைத்திருப்பவர்கள் எதிர்பார்க்கும் லாபத்தை பெறப் போகிறீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்து வந்த போட்டி, பொறாமைகள் குறைந்து உங்கள் கை ஓங்கி, மேலதிகாரிகளின் ஆதரவையும் பெறுவீர்கள்.

மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி அற்புத பலன்களை கொண்டிருக்கிறது. மனைவி வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காண்பீர்கள். கதை, கவிதை எழுதுபவர் உங்களுக்கு சாதகமான நாட்களாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு புதிய விஷயங்களை கையாளக் கூடிய பக்குவம் பிறக்கும். உங்களை சுற்றி இருப்பவர்கள் உடைய பொய் முகமூடிகளை இனம் கண்டு கொள்ளக் கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் பழிகள் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி சிறப்பான பலன்களைக் கொடுக்க இருக்கிறது. தொழில் மற்றும் வியாபார ரீதியான எதிர்பார்ப்புகளை பூர்த்தி அடைய செய்யும். குடும்ப தேவைகளை பூர்த்தி அடைய செய்யக்கூடிய அளவிற்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்க போகிறது. நிலம், வீடு வாங்கும் யோகம் உண்டு. கல்வி தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உங்களுடைய எண்ணங்கள், செயல்பாடுகள் நேர்மறையான சிந்தனை கொண்டிருக்கும்.

மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி அறிவாற்றலை கொடுக்க இருக்கிறது. தகவல் மற்றும் பேச்சு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்பதை விட திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். பணவரவு கிடைப்பதில் இருந்து வந்த தடை, தாமதங்கள் விலகும். ராஜ தந்திரங்களை கையாண்டால் உங்கள் முன்னேற்றத்திற்கு எவ்வளவு தடைகளையும் உங்களால் தகர்த்து எறிந்து வீர நடை போட முடியும். மாமனார் வழியில் அனுகூலப் பலனை பெறுவீர்கள். வேற்று மதத்தவர் உடைய ஆதரவு கிடைக்கும்.

- Advertisement -