நாளை (2/10/2021) துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்குப் பெயர்ச்சியாகும் புத பகவான்! இதனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யாரெல்லாம்? 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

budhan-astro-sign
- Advertisement -

புத்திகாரகனாக இருக்கும் புத பகவான் அவர் இருக்கும் இடத்தை பொறுத்து பலன்களையும் வழங்குவார். கிரக சுழற்சியின் பொழுது ஒரு கிரகத்திலிருந்து இன்னொரு கிரகத்திற்கு இடம் பெயரும் புத பகவான் நாளை சனிக்கிழமை அன்று அதிகாலை 2:32 மணிக்கு துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கு இடம் பெயர்கிறார். இதனால் 12 ராசிகளுக்கும் கொடுக்க இருக்கும் பலன்கள் என்ன? புதன் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யாரெல்லாம்? என்பதை அறிய தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி அதிர்ஷ்டமான பலன்களை கொடுக்க இருக்கிறது. இதுவரை வந்த நிலையில் இருந்து வந்த தொழில் மீண்டும் வளர்ச்சியுறும். வேகத்தை விட விவேகம் சிறந்தது என்பதை உணர்ந்து செயல்பட்டால் வெற்றி உங்கள் பக்கம். பொருளாதார ரீதியான ஏற்றம் காணப்படுவதால் குடும்பத்தில் இருப்பவர்கள் உடைய தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். ஆரோக்கிய ரீதியான சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும் எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

- Advertisement -

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி நீங்கள் நினைத்ததை விட இரட்டிப்பு பலன்களைக் கொடுக்க இருக்கிறது. புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் யோகமுண்டு. பொருளாதார ரீதியான முன்னேற்றம் சீராக இருக்கும். உங்களுக்கு தெரியாத விஷயங்களை கூட கற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். குடும்பத்தில் இருக்கும் மூத்த சகோதரர்களுடன் ஆன பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி நீங்கள் எதை செய்யவேண்டும் என்கிறாய் தெளிவான முடிவை எடுக்கும் திறனை அதிகரிக்க செய்யும். மற்றவர்களை நம்பி எந்த ஒரு பொறுப்பையும் ஒப்படைப்பதற்கு முன் ஒரு முறைக்கு பலமுறை ஆலோசனை செய்து கொள்வது நல்லது. நீங்கள் புதிதாக தொடங்க இருக்கும் செயல் ஒன்று அனுகூல பலன் கொடுக்கும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வீர்கள். பிள்ளைகள் வழியே பெருமைகள் வந்து சேரும்.

- Advertisement -

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி இனிய பலன்களை கொடுக்க இருக்கிறது. பூர்வீக சொத்துக்கள் மூலம் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் உங்களுக்கு இருந்து வந்த இழுபறி நிலை மாறும். எந்த ஒரு முடிவையும் தீர்க்கமாக. எடுப்பது நல்லது. செய்யலாமா? வேண்டாமா? என்கிற குழப்பம் இருந்தால் அதனை தவிர்த்து விடுவது நல்லது. குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடைபெறும். புதன் கிழமையில் புதன் வழிபாடு செய்து வாருங்கள் நன்மைகள் நடக்கும்.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி அற்புத பலன்களை கொடுக்க இருக்கிறது. நீங்கள் நினைத்ததை நினைத்தபடியே நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளை இணைத்துக் கொள்ளும் வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் மனைவி வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணலாம். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட சில நீண்டநாள் காரியங்கள் முடிவுக்கு வரும். கூடுமானவரை இம்மாதம் மவுனம் காப்பது நல்லது. ஒரு முறை விட்டுவிட்ட வார்த்தைகளை மீண்டும் அழித்துவிட முடியாது. ஆரோக்கியம் மேம்படும்.

- Advertisement -

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி ஓரளவுக்கு நன்மைகளை செய்ய கூடியதாக அமைந்துள்ளது. பிள்ளைகள் மீதான அக்கறை அதிகரிக்கும். அவர்களுடைய எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். குடும்பத்தில் இருக்கும் வரவு செலவு சரியாக போய்விடும். வரவுக்குள் செலவை கட்டுப்படுத்துவது நல்லது. தேவையற்ற கடன்கள் வாங்குவதை தவிர்க்கவும். குடும்பத்தில் திடீர் மகிழ்ச்சி படுத்த கூடிய விஷயங்கள் நடைபெறும். எதிலும் வெற்றி காண தன்னம்பிக்கையுடன் செயல்படுவது நல்லது.

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி அனுகூலமான பலன்களை கொடுக்க இருக்கிறது. புத பகவான் உங்கள் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு இடம் பெயர்வதால் சிறுசிறு குழப்பங்கள் வந்து நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் பெருகும். உடன் பணிபுரியும் பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களை சுற்றி இருக்கும் பகைவர்களுடைய சூழ்ச்சிகள் முறியடிக்கும் வாய்ப்புகளை கொடுப்பார். ஆரம்பத்தில் இருந்து வந்த குறைகள் நீங்கும்.

விருச்சகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி அதிர்ஷ்டமான பலன்களை கொடுக்க இருக்கிறது. சாதகம் உள்ள அமைப்பு என்பதால் நீங்கள் தொடங்கவிருக்கும் புதிய முயற்சிகளுக்கு பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைக்கும். இதுவரை வசூலாகாத கடன் பாக்கிகள் வசூலாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் சாமர்த்தியமாகச் செயல்பட்டால் பன் மடங்கு லாபத்தை காணலாம். ஆரோக்கியம் படிப்படியான முன்னேற்றம் பெறும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி சிரமமான வேலைகளை கூட எளிதாக செய்யக் கூடிய வகையில் உங்களுக்கு நல்ல பலன்களை வழங்க இருக்கிறார். தொழில் மற்றும் வியாபார ரீதியான பிரச்சனைகள் தீர்ந்து லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு.. உங்களுடைய விடாமுயற்சிக்கு உரிய விஸ்வரூப பலன்கள் கிடைக்க கூடிய அற்புத நாட்களாக இருக்கும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கசப்பு நீங்கும். நீண்ட தூரப் பயணங்கள் மூலம் அனுகூல பலன் பலன் உண்டாக செய்யும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி நீங்கள் நினைத்ததை சாதிக்க கூடிய ஆற்றலை கொடுப்பார். எந்த அளவிற்கு உங்களுடைய முயற்சி இருக்கிறதோ! அந்த அளவிற்கு சூழ்நிலையும் உங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொடுப்பார். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சுற்றியிருக்கும் பகைவர்களுடைய தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும் படி செய்து விடுவார். உங்கள் புதிய யுத்திகளை தைரியமாக கையாண்டு வருவதன் மூலம் முன்னேற்றம் காணலாம். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் மறையும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி நன்மைகளை செய்யக்கூடிய வகையில் அமைந்துள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அதிக பொறுமை தேவை. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து சமயோசிதமாக செயல்படுவது வெற்றியைக் கொண்டு வந்து சேர்க்கும். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் அனுகூல பலனை கொடுக்கும். எந்த ஒரு முடிவையும் இந்த காலகட்டத்தில் குடும்பத்தில் மூத்தவர்கள் உடைய ஆலோசனை கேட்டு முடிவெடுப்பது நல்லது.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி நீண்ட நாள் நினைத்த ஒரு விஷயத்தை சாதித்துக் காட்டும் பலனைக் கொடுக்கும். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த குழப்பங்கள் தீரும். குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியங்கள் மீண்டும் முன் நடத்தி செல்லகூடிய வாய்ப்புகளை கொடுப்பார். தொழில் ரீதியான முன்னேற்றம் அற்புதமான பலன்களைக் கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு போன்றவற்றை சாதக பலனை கொடுப்பார். ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும் என்பதால் எச்சரிக்கை தேவை.

- Advertisement -