நாளை(22/9/2021) கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் பெயரும் புதன் பகவான்! அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யாரெல்லாம்? – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

budhan-astro-sign
- Advertisement -

மாதாமாதம் இடம் பெயரும் புதன் பகவான் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடம் பெயரும் பொழுது 12 ராசிக்காரர்களுக்கும் சில அதிர்ஷ்ட பலன்களை வழங்குவார். கிரகங்களின் இளவரசனாக இருக்கும் புத பகவான் நாளை செப்டம்பர் 22, 2021 புதன் கிழமை அன்று காலை 8:42 மணிக்கு கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர்கிறார். இதனால் அதிர்ஷ்டம் பெறப் போகும் ராசிகள் யாரெல்லாம்? என்பதை நீங்களும் அறிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி மன உளைச்சலில் இருந்து விடுதலை பெற செய்யும். இவ்வளவு நாட்கள் மனதில் தேக்கி வைத்திருந்த கஷ்டங்களை எல்லாம் யாரிடமாவது சொல்லி தீர்த்துக் கொள்வீர்கள். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் சாதகப் பலனை கொடுப்பார். ஆடம்பரத்தை குறைத்து விடா முயற்சி எடுத்தால் வெற்றி நிச்சயம்.

- Advertisement -

ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி ஆடம்பரமான வாழ்க்கையை கொடுப்பார். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் வந்து சேரும். நிலுவையிலிருந்த பழைய பாக்கிகள் வசூலாகும். உங்கள் திறமைகளை வெளி உலகிற்கு கொண்டு வரக்கூடிய அற்புதமான நாட்களாக இருக்கும். எனவே கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் வெற்றி நிச்சயம்.

மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி கணக்கு கணிதம் தொடர்பான தொழில் புரிபவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகளை கொடுக்க இருக்கிறார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தந்திரமும் சாமர்த்தியமும் தகுந்த சமயத்தில் கை கொடுக்கும் படி செய்வார். அழகிலும் அறிவிலும் வல்லவர்களாக இருக்கும் நீங்கள் ராஜ தந்திரத்தை கையாண்டால் வெற்றி நிச்சயம் உங்களுக்கு தான்.

- Advertisement -

கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி வியாபார விஷயங்களில் வாடிக்கையாளர்களின் திருப்தியை சம்பாதிக்கும் படி செய்வார். கலை கல்விகளில் ஆர்வத்துடன் இருக்கும் உங்கள ராசியினருக்கு சாதகமான மற்றும் அனுகூலமான பலன்களை கொடுக்க இருக்கிறார். கடுமையாக இருந்தால் உங்களை மென்மையாக மாற்றும் நாட்களாக இருக்கும்.

சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி பேச்சுத் திறமையால் பலவற்றை சாதிக்க செய்யும். பேச்சை பிரதானமாகக் கொண்ட தொழில்களில் இருப்பவர்களுக்கு வெற்றி அமோகமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு லாபம் பெருகும். வீண் ஆராய்ச்சிகளில் ஈடுபடாமல் தங்கள் பொறுப்புணர்ந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம் உண்டாகும்.

- Advertisement -

கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி சகோதர சகோதரிகளுக்கு இடையே இருக்கும் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும். தேவையற்ற மன குழப்பங்களை உண்டாக்கி கொள்ளாமல் எந்த ஒரு முடிவையும் தீர்க்கமாக எடுப்பது நல்லது. திருமணமான பெண்கள் மாமனார், மாமியார் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருப்பது நல்லது. பிள்ளைகளுடைய எதிர்காலத் திட்டமிடல் மேலோங்கும்.

துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி மனைவிவழி உறவினர்கள் மூலம் ஆதாயத்தைக் கொடுக்கும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய பொறுப்புகள் உங்களுக்கு கிடைத்திருக்கிறது. இதனால் தேவையற்ற மனக் குழப்பங்களுக்கு ஆட்படாமல் எதையும் பெரிதாக நினைக்க பேசி தீர்த்துக் கொள்வது நல்லது.

விருச்சகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி தகவல் தொழில்நுட்பத் துறையில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கும். வீடு நிலம் போன்ற விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான அம்சம் இருப்பதால் அவற்றில் தாராளமாக அடி எடுத்து வைக்கலாம். வழக்கு தொடர்பான விஷயங்களில் வெற்றியைப் பெறுவீர்கள். புதன்கிழமையில் புத பகவானை வழிபடுங்கள் நன்மைகள் நடக்கும்.

தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி அற்புதமான பலன்களைக் கொடுக்க இருக்கிறது. புத்திகாரகனாக இருக்கும் புதன் உங்களுடைய மந்த புத்தியை மாற்றி சுறுசுறுப்புடன் இருக்க செய்யும். இதுவரை முடங்கிக்கிடந்த அனைத்து விஷயங்களும் உயிர்த்தெழும் அற்புதம் நிகழும். கிடைக்கின்ற வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி முன்னேறுவது நல்லது.

மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி வருமானத்தில் ஏற்பட்ட தடைகளை அகற்றும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய விஷயங்களை முன்னடத்திச் செல்ல வைக்கும். பெரிய மனிதர்களுடைய ஆதரவு பெறுவீர்கள். குடும்பத்தில் சகோதர, சகோதரிகளுக்கு இடையே நடந்து வந்த பிரச்சனைகளை தீர்த்து வைக்கும். புதிய வரவால் உளம் மகிழ்வீர்கள்.

கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி லாபகரமான பலன்களை கொடுக்க இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் கடினமான சூழ்நிலையை கூட மாற்றி உங்களுக்கு அனுகூல பலன் கொடுக்கும் வகையில் வருமானத்தில் ஏற்றத்தைத் தரும். இழந்த பொருட்களை எல்லாம் திரும்பப் பெறும் யோகம் ஒரு சிலருக்கு வாய்க்கும். குடும்பத்தில் அமைதியை கடைபிடித்தால் நல்லது.

மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி கடல் தாண்டி நடக்கும் சில விஷயங்களுக்கு சாதகப் பலன் கொடுக்கும். ஆடம்பரமான பொருட்கள் வாங்கும் விஷயங்களில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். வீண் வம்பு வழக்குகளில் சாதகப் பலன்களைப் பெறுவீர்கள். கூடுமானவரை நேர்மையான வழியில் சென்றால் முன்னேற்றம் நிச்சயம். பல தடைகளை தாண்டி உங்கள் திறமைகளை வெளி உலகிற்கு கொண்டுவரக்கூடிய அற்புத வாய்ப்பாக அமையக்கூடும்.

- Advertisement -