உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் முக்கிய வீரராக இவரே திகழ்வார் – டேனி மோரிசன்

danny

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது. இந்த ஆண்டு உலகக்கோப்பை தொடர் போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் மே மாதம் போட்டிகள் தேதி துவங்குகிறது. இதற்கான இந்திய அணி கிட்டத்தட்ட தயாராகிவிட்டது என்றே கூறவேண்டும். அணி கோலி தலைமையிலான இந்திய அணி இப்போது சுப்ரீம் பார்மில் உள்ளது.

indian-team

இந்த 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெறுகின்றன. இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கூறிவருகின்றனர். இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் முக்கிய வீரர் குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார் பிரபல வர்ணனையாளரான டேனி மோரிசன்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியின் ஆட்டம் சில ஆண்டுகளாகவே சிறப்பாக உள்ளது. எந்த அணியையும் அவர்களது நாட்டில் வீழ்த்தும் திறன் இப்போது இந்திய அணிக்கு உள்ளது. இந்திய அணியின் பேட்டிங் வரிசை மிகப்பிரமாதமாக உள்ளது. துவக்க வீரர்களில் துவங்கி பின்வரிசை வரை அணைத்து பேட்ஸ்மேன்களும் சிறப்பாக ஆடிவருகின்றனர்.

bumrah

ஆனால், இம்முறை பேட்டிங் வரிசையை விட பவுலிங் யூனிட் சிறப்பாக உள்ளது. ஷமி, குமார் மற்றும் பும்ராஹ் வேகப்பந்து வீச்சில் மிரட்டுகின்றனர். குறிப்பாக பும்ரா அவரது வேகம் மற்றும் சரியான அளவிலான யார்க்கர் போன்றவைகள் மூலம் இவர் எதிரணியை நிச்சயம் திணறடிப்பார். எனவே, உலகக்கோப்பை தொடரில் பும்ரா இந்திய அணியின் முக்கிய வீரராக திகழ்வார் என்று மோரிசன் கூறினார்.

இதையும் படிக்கலாமே :

ஆஸ்திரேலியாவில் காயமடைந்தது வருத்தமளிக்கிறது. உலககோப்பைக்கு முன் நான் நிச்சயம் இதை செய்வேன் – பிரிதிவி ஷா

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்