ஆஸ்திரேலியாவில் காயமடைந்தது வருத்தமளிக்கிறது. உலககோப்பைக்கு முன் நான் நிச்சயம் இதை செய்வேன் – பிரிதிவி ஷா

prithvi-shaw

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது. இந்த ஆண்டு உலகக்கோப்பை தொடர் போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் மே மாதம் போட்டிகள் தேதி துவங்குகிறது. இதற்கான இந்திய அணி கிட்டத்தட்ட தயாராகிவிட்டது என்றே கூறவேண்டும். அணி கோலி தலைமையிலான இந்திய அணி இப்போது சுப்ரீம் பார்மில் உள்ளது.

worldcup

தற்போது இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்திற்காக நியூசிலாந்து சென்று தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அந்த தொடரில் இடம்பெறாத இந்திய அணியின் இளம் வீரரான பிரிதிவி ஷா பெங்களுருவில் உள்ள ட்ரைனிங் அகாடெமியில் பிட்னஸ் பயிற்சியில் இருக்கிறார் . தற்போது அவர் இந்திய அணியில் இடம் பிடிப்பது குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

பிரிதிவி ஷா கூறுகையில் : ஆஸ்திரேலியாவில் முதன் முதலாக கிரிக்கெட் விளையாட போகிறோம் என்று மகிழ்ச்சியில் இருந்தேன். ஆனால், எதிர்பாராமல் ஏற்பட்ட காயம் காரணமாக தொடர் முழுவதும் என்னால் விளையாட முடியாமல் போனது . இதற்காக நான் இப்போது பெங்களுருவில் உள்ள தேசிய அகாடெமியில் பயிற்சி செய்து வருகிறேன்.

shaw

உலகக்கோப்பை தொடருக்கு முன் நடக்கும் ஐ.பி.எல் தொடரில் என் திறமையினை நிரூபிப்பேன். அது தேரவாளர்களின் கண்களில் படும் எனவே, நிச்சயம் நான் சிறப்பான ஆட்டத்தை உலகக்கோப்பை போட்டிக்கு முன் ஆடுவேன் அதன் மூலம் உலகக்கோப்பை தொடரில் இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று கூறினார் பிரிதிவி ஷா.

இதையும் படிக்கலாமே :

விராட் கோலியை மட்டுமே டார்கெட் செய்வது தவறு. இந்த ஜோடி கோலியை விட ஆபத்தானது – ராஸ் டெய்லர்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்