முதல் பந்திலே தவறான எல்.பி மூலம் வெளியேறிய ஆஸி கேப்டன். விஜய் ஜெர்ஸியுடன் ஆடிய பும்ரா – வைரல் வீடியோ

Bumrah
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நேற்று (24-02-2019) விசாகப்பட்டினத்தில் நடந்து முடிந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங் செய்ய தேர்வு செய்தது. அதன்படி விளையாடிய இந்திய விளையாடத்துவங்கியது.

Toss

இந்திய அணி தனது இன்னிங்க்ஸை 20 ஓவர்களில் வெறும் 126 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்திய அணி சார்பில் ராகுல் மட்டுமே அரைசதம் 50 அடித்து ஆறுதல் அளித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். பிறகு ஆடிய ஆஸ்திரேலிய அணி ஆட்டத்தின் கடைசி ஓவரில் 2 பவுண்டரி அடித்து வெற்றி பெற்றது. அந்த அணி சார்பாக மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி 56 ரன் குவித்தார்.

- Advertisement -

இந்த போட்டியில் 127 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தனது முதல் விக்கெட்டை 5 ரன்களுக்கு இழந்தது. பிறகு, பின்ச் களமிறங்கினார் அவர் சந்தித்த முதல் பந்தை காலில் வாங்கினார். அதனை பும்ரா அவுட் கேட்க அம்பயரும் அவுட் என்று அறிவித்தார். பிறகு ரீபிளேவில் பந்து இடது ஸ்டம்பை கடந்தவாறு உரசியது தெரிந்தது. இருப்பினும், அம்பயரின் முடிவு இறுதி என்பதால் மீண்டும் அம்பயர் அவுட் கொடுத்தார். இதோ அந்த வீடியோ இணைப்பு :

- Advertisement -

மேலும், இந்த போட்டியில் பும்ரா விஜய் ஷங்கரின் ஜெர்ஸியோடு ஆடியுள்ளது தெரிகிறது. ஏன் இவ்வாறு ஆடுகிறார்கள் என்று தெரியவில்லை. நியூசிலாந்து தொடரின் போது ரோஹித் கூட விஜய் ஷங்கரின் ஜெர்ஸி அணிந்து விளையாடியது வைரலானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

தோனியை பற்றி பேசவில்லை என்றால் தூக்கம் வராதா ? தோனிக்கு ஆதரவாக பேசிய மேக்ஸ்வெல் – என்ன பேசினார் தெரியுமா

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -