தோனியை பற்றி பேசவில்லை என்றால் தூக்கம் வராதா ? தோனிக்கு ஆதரவாக பேசிய மேக்ஸ்வெல் – என்ன பேசினார் தெரியுமா ?

Maxwelll
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நேற்று (24-02-2019) விசாகப்பட்டினத்தில் நடந்து முடிந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங் செய்ய தேர்வு செய்தது. அதன்படி விளையாடிய இந்திய விளையாடத்துவங்கியது.

Toss

இந்திய அணி தனது இன்னிங்க்ஸை 20 ஓவர்களில் வெறும் 126 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்திய அணி சார்பில் ராகுல் மட்டுமே அரைசதம் 50 அடித்து ஆறுதல் அளித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். பிறகு ஆடிய ஆஸ்திரேலிய அணி ஆட்டத்தின் கடைசி ஓவரில் 2 பவுண்டரி அடித்து வெற்றி பெற்றது. அந்த அணி சார்பாக மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி 56 ரன் குவித்தார்.

- Advertisement -

போட்டிக்கு பிறகு இந்த ஆட்டத்தை பற்றி பேசிய மேக்ஸ்வெல் : இந்திய அணியின் வீரரான தோனி பொறுமையாக ஆடியதாக செய்திகள் வெளியாகி வருகிறது. ஆனால், இந்த ஆடுகளத்தில் பந்தில் பவுன்ஸ் இல்லை. மேலும், பந்து நின்று வந்ததால் இரு அணி வீரர்களும் ரன் எடுக்க கஷ்டப்பட்டோம். இன்றைக்கு தோனியால் பந்துகளை சரியாக கனெக்ட் செய்ய முடியவில்லை. இது அனைவர்க்கும் நாடாகும் ஒரு விடயம் தான்

அதனை ஏன் பெரியதாக்குகிறீர்கள் ஆஸ்திரேலிய அணியின் பின்ச் சிறந்த பிளேயர் என்பது நமக்கு தெரியும். ஆனால், அவர் கூட எளிய இலக்கினை துரத்தி தோல்வி அடைந்தார். அதற்காக அவர் நல்ல பிளேயர் இல்லையா ? அதைப்போன்று இன்றய போட்டியில் தோனிக்கு சிறப்பாக அமையவில்லை ஆகையால் அவரை குறைவாக மதிப்பிட வேண்டாம். என்று மேக்ஸ்வெல் கூறினார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

உதாசினப்படுத்திய பும்ரா, கோலி. கண் கலங்கியபடி நகரமுடியாமல் நின்ற ரோஹித் – வைரல் வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -