சப்பாத்திக்கு கிரேவி செய்ய போறீங்களா? முட்டைகோஸ் கிரேவி செய்முறை

gravy cabbage
- Advertisement -

தக்காளி விற்கிற விலைக்கு சப்பாத்தி, பூரி, பிரியாணி இதற்கெல்லாம் கிரேவி செய்ய முடியாமல் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. தக்காளி சேர்க்காமல் அதே சமயம் ரொம்ப டேஸ்ட்டாவும் இருக்கக்கூடிய அற்புதமான க்ரேவி ஒன்று இருக்கிறது. இந்த கிரேவியை செய்து கொடுத்தால் கிரேவியோட டேஸ்டில் எத்தனை சப்பாத்தி சாப்பிட்டோம் என்ற அளவு தெரியாமல் சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட இந்த கிரேவியை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

கிரேவி என்றதும் அதற்கு நிறைய தக்காளி வேண்டும் என்றுதான் நாம் முதலில் நினைப்போம். ஆனால் தக்காளியே இல்லாமல் மிகவும் அருமையான சுவையில் ஒரு கிரேவி செய்ய முடியும் என்றால் அதை செய்து பார்ப்பதில் எந்த தவறும் இல்லையே. இந்த கிரேவியை நாம் சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை, பிரியாணி போன்றவற்றிற்கு சைடிஷ் ஆக பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

முட்டைகோஸ் கிரேவி செய்முறை:
இந்த கிரேவிக்கு முதலில் நாம் ஒரு பேஸ்ட்டை தயார் செய்ய வேண்டும். அந்த பேஸ்ட்டை தயார் செய்வதற்கு ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் சீரகம், 2 பட்டை, 2 கிராம்பு, ஒரு ஏலக்காய், ஒரு டீஸ்பூன் மிளகு, துருவிய தேங்காய் 1/4 கப், இரண்டு ஸ்பூன் தயிர் இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல அரைத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைக்க வேண்டும். கடாய் நன்றாக சூடானதும் அதில் இரண்டு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் அரை டீஸ்பூன் கடுகு சேர்க்க வேண்டும். கடுகு நன்றாக வெடித்ததும் கீறிய பச்சை மிளகாய் ஒன்றை சேர்க்க வேண்டும்.

- Advertisement -

அத்துடன் கருவேப்பிலை ஒரு கொத்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒன்றை சேர்க்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்த பிறகு அதில் ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்க்க வேண்டும். அதை இரண்டு முறை கிளறிவிட்டு பிறகு பொடியாக நறுக்கிய அல்லது துருவிய கோஸ் 1/4 கிலோவை சேர்க்க வேண்டும்.

இரண்டு உருளைக்கிழங்கை தோல் சீவி துருவி அதனுடன் சேர்க்க வேண்டும். இதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக கிளறி விட்டு மூடி போட்டு ஐந்து நிமிடம் வேக வைக்க வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து மூடியை திறந்து அதில் ஒரு ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்க்க வேண்டும்.

- Advertisement -

இவை இரண்டையும் நன்றாக கிளறி விட்ட பிறகு அரைத்து வைத்திருக்கும் விழுதை அதில் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். பிறகு 11/2 கப் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பை சேர்த்து ஒரு முறை கிளறி விட வேண்டும். 15 நிமிடம் அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி போட்டு வேக விட வேண்டும். அடுப்பில் இருந்து இறக்குவதற்கு முன்பாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தலையை அதன் மேல் தூவி இறக்கி விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பூண்டு மிளகு குழம்பை நல்ல தரமா கிராமத்து கை பக்குவத்துல இப்படி மசாலா வறுத்து அரைத்து வச்சு பாருங்க. சுவையும் மணமும் நாக்கில் எச்சில் ஊற வைக்கும்.

தக்காளி சேர்க்காமல் அருமையான, ருசியான முட்டைகோஸ் உருளைக்கிழங்கு கிரேவி தயாராகி விட்டது.

- Advertisement -