முட்டைக்கோஸில் இதைவிட ஈசியான, சூப்பரான ஒரு ஸ்னாக்ஸ் இருக்கவே முடியாது. 10 நிமிடம் ஒதுக்கி இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணித்தான் பாருங்களேன்.

cabbage-tikki
- Advertisement -

முட்டைக்கோசை வைத்து நம்முடைய வீட்டில் ஈஸியான இந்த ஸ்நாக்ஸ் ரெசிபியை வெறும் 10 நிமிடத்தில் செய்துவிடலாம். அதுவும் வீட்டில் இருக்கும், சில சமையல் பொருட்களை வைத்தே. வெளியில் சென்று எந்த ஒரு பொருளையும் வாங்க வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. இந்த யம்மி ரெசிபியை எப்படி செய்வது என்பதை பற்றி உங்களுக்கு தெரிந்து கொள்ள ஆசையாக உள்ளதா. வாருங்கள் பார்ப்போம். இந்த ரெசிப்பியை பார்ப்பதற்கு முன்பும் இதனுடைய பெயரையும் நாம் தெரிந்துகொள்வோம். Cabbage Tikkis என்பது தான் இதனுடைய பெயர். இதனுடைய பெயர்தான் வித்தியாசமாக உள்ளது. ஆனால் வடை சுடுவதை விட இது ரொம்ப ரொம்ப ஈஸி.

cabbage-tikki4

முதலில் 250 கிராம் அளவு முட்டைக்கோசை எடுத்து மிகவும் பொடியாக நறுக்கி, கழுவி சுத்தமாக தண்ணீரை வடித்து தயாராக வைத்துக் கொள்ளவும். சிறிய உரலில் 1 ஸ்பூன் வரமல்லியை போட்டு இடித்து இதையும் ஒரு ஓரமாக வைத்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 1, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – 1 கைப்பிடி அளவு, சோம்பு – 1 ஸ்பூன், இடித்து வைத்திருக்கும் வர மல்லித் தூள் – 1 ஸ்பூன், அரிசி மாவு – 1 டேபிள்ஸ்பூன், கடலை மாவு – 3/4 கப், மிளகுத்தூள் – 1/4 ஸ்பூன், மிளகாய்தூள் – 1 ஸ்பூன், தேவையான அளவு உப்பு இறுதியாக ஆம்சூர் பவுடர் இருந்தால் – 1/2 ஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம். ஆம்சூர் பவுடர் இல்லாதவர்கள் எலுமிச்சை பழ சாறு – 1 ஸ்பூன் அளவு ஊற்றி கொள்ளவும்.

cabbage-tikki1

இப்போது இந்த எல்லாப் பொருட்களையும் சேர்த்து உங்கள் கைகளை கொண்டு நன்றாக பிசைய வேண்டும். ஒரு கட்லெட் மாவு பக்குவத்திற்கு இது வரவேண்டும். தண்ணீரே கட்டாயம் சேர்க்கக்கூடாது. வெங்காயம், முட்டைகோஸ், உப்பில் சேரும் போது தானாகவே தண்ணீர் விட்டு இந்த கலவை ஒரு மாவு பக்குவத்திற்கு வந்து விடும்.

- Advertisement -

உங்களுடைய உள்ளங்கைகளில் கொஞ்சம் எண்ணெயை தொட்டு இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து, தட்டி தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வட்ட வடிவில் சிறிய கட்லெட் போல தட்டி வைத்துக் கொள்ளவும்.

cabbage-tikki2

தோசைக் கல்லில் இரண்டு ஸ்பூன் எண்ணெயை ஊற்றி இந்த கட்லெட்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து தோசைக்கல்லில் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து எடுத்து பரிமாறினால் சூப்பரான சுவையோடு சுவையான ஒரு ஸ்நாக்ஸ் பத்தே நிமிடத்தில் தயாராக இருக்கும். தேவைப்பட்டால் டொமேடோ சாஸ் உடன் இதை பரிமாறலாம் உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -