இப்படி ஒரு முறை காலிஃப்ளவர் பேப்பர் ரோஸ்ட் செய்து குடுத்து பாருங்கள், இந்த ரோஸ்ட்க்கு நீங்க வெறும் தயிர் சாதம் தாளித்து வைத்தால் கூட, சத்தம் இல்லாம சாப்ட்டு போய்டுவாங்க.

- Advertisement -

இந்த காலிஃப்ளவரை பொறுத்தவரையில் அசைவம், சைவம் இரண்டும் செய்யலாம். இதை சேர்த்து எந்த உணவை செய்தாலும் அதற்கென தனி சுவை இருக்கத் தான் செய்யும். இந்த காலிஃப்ளவரை வைத்து பல வகை உணவுகளை செய்யலாம், சாதாரணமாக வைக்கும் குழம்பு, பொரியலில் இருந்து ஒரு நல்ல ரெஸ்டாரன்ட் உணவு என அனைத்தும் இந்த காலிஃப்ளவரை வைத்து செய்து விடலாம். குழந்தைகள் கூட காலிஃப்ளவரை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் இன்று இந்த சமையல் குறிப்பு பதிவில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய காலிஃப்ளவர் பெப்பர் ரோஸ்ட் எப்படி செய்வது என்பதை சமையல் குறிப்பு பதிவில் பார்க்கலாம்.

காலிஃபிளார் மிளகு வறுவல் செய்முறை:
காலிஃப்ளவர் ரோஸ்ட் செய்வதற்கு ஒரு காலிஃப்ளவரை மீடியம் சைஸில் நறுக்கி கொள்ளுங்கள். அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து தண்ணீர் வைத்து கொதித்த உடன் இந்த காலிஃப்ளவரை அதில் சேர்த்து அடுப்பை அணைத்து விடுங்கள். பத்து நிமிடம் இந்த காலிஃப்ளவர் அந்த சூடு தண்ணீரில் இருக்க வேண்டும். அதன் பிறகு தண்ணீர் வடித்து காலிஃப்ளவரை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பை பற்ற வைத்து ஒரு பேனை வைத்து பேன் சூடானவுடன் 1 டேபிள் ஸ்பூன் மிளகு, 1 டேபிள் ஸ்பூன் சோம்பு ,1 சிறிய துண்டு பட்டை, 3 கிராம்பு, 2 ஏலக்காய், 3 காய்ந்த மிளகாய்,கொஞ்சம் கருவேப்பிலை எல்லாம் சேர்த்து லேசாக வாசம் வரும் வரை வறுத்து ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல பைன் பவுடராக அரைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் பேனை வைத்து 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி, சிறிய துண்டு பட்டை, 2 ஏலக்காய், 2 கிராம்பு, கறிவேப்பிலை, சோம்பு எல்லாம் சேர்த்த பிறகு, 2 வெங்காயத்தை நீளவாக்கில் அறிந்து அதையும் இதில் சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். வெங்காயம் பாதி அளவு வெந்தவுடன் 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து அதையும் பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு காலிஃப்ளவரை வெங்காயத்துடன் சேர்த்து மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன், உப்பு 1/4 டீஸ்பூன், சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்து விடுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து காலிஃப்ளவரை வேக விட வேண்டும். காலிஃப்ளவர் முழுவதுமாக வெந்து விடக் கூடாது. முக்கால் பாகம் வெந்தவுடன் அரைத்து வைத்திருக்கும் மிளகு, மிளகாய் தூள் சேர்த்து ஐந்து நிமிடம் வரை அடுப்பிலே வைத்து லோ ஃபிளேமில் ரோஸ்ட் செய்து இறக்கி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: இதுவரை கேள்விப்படாத வித்தியாசமான ரெசிபி முட்டைகோஸ் கோதுமை சப்பாத்தி. இந்த சப்பாத்திக்கு பக்க சைட் டிஷ் தேங்காய் சட்னி ரெண்டையும் சேர்த்து எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

காலிஃப்ளவர் ரோஸ்ட் சுவையாக தயாராகி விட்டது. இது எல்லா வகை சாதத்துடனும் வைத்து சாப்பிடலாம் வெறும் ரசம் சாதம் இருந்தால் கூட போதும். நீங்களும் இந்த காலிஃப்ளவர் பெப்பர் ரோஸ்ட் செய்து சாப்பிட்டு பாருங்கள்.

- Advertisement -