ஜாதக பொருத்தம் இல்லாத காதலர்களுக்கு திருமணம் செய்யலாமா?

astrology

இந்த பதிவிற்கான விளக்கத்தை ஒரு கதைபோல எழுதியுள்ளோம். வாருங்கள் கதைக்குள் செல்வோம்.

”அம்மா, உன்னிடம் ஒன்று சொல்லவேண்டும். சொல்லலாமா?” என்று கேட்டபடி வந்த மகள் வசந்தியை வியப்புடன் பார்த்த லட்சுமி, ”எதற்கு இந்த பீடிகை? தயங்காமல் சொல்ல வந்ததைச் சொல்” என்றாள்.

astrology

“அம்மா, போன வருஷம் ஒரு காதலர் தினத்தன்றுதான் நான் ஒருவரை நேசிக்க ஆரம்பித்தேன். அவரும் என்னுடைய அலுவலகத்தில் பணிபுரிபவர்தான். அவர் பெயர் கௌதம். அவர்தான் தன்னுடைய காதலை முதலில் என்னிடம் தெரிவித்தார். அவருடைய நல்ல பண்புகளால் கவரப்பட்டிருந்த நான், அவருடைய காதலை ஏற்றுக்கொண்டேன். ஆனால், முதலில் அவருடைய வீட்டில் சம்மதம் கேட்கச் சொன்னேன்.

ஒருவழியாக நேற்றுதான் அவருடைய காதலுக்கு விட்டில் சம்மதம் தெரிவித்துவிட்டதாகக் கூறினார். இப்போது நாம்தான் அவர்களுக்கு பதில் சொல்லவேண்டும்” என்றாள்.

”அவ்வளவுதானே, இதற்கு ஏன் இவ்வளவு தயக்கம்? நானும்  உன் அப்பாவுமே காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள்தானே. அப்பா வந்ததும் இதுபற்றிப் பேசுவோம்” என்றாள் லட்சுமி.

- Advertisement -

astrology-wheel

அப்பாவின் சம்மதமும் அவர்களுக்குக் கிடைத்துவிட்டது. ஆனால், ஜாதகம் பார்த்து பொருத்தம் இருந்தால், திருமணத்தைப் பற்றி பேசலாம் என்று ஒரு நிபந்தனை விதித்தார். லட்சுமியும் கணவர் சொன்னதே சரி என்று சொல்லிவிட்டார்.

 

ஆனால், ஜாதகம் பொருந்தவில்லை என்று பெற்றோர் சொன்னதும் வசந்திக்கு மிகுந்த வருத்தம் ஏற்பட்டது. அப்படியே நொறுங்கிப் போனாள். இரண்டு நாள்களாக அவளுக்கு எதிலும் பிடிப்பே இல்லை. எதையோ பறிகொடுத்தவள்போல் காணப்பட்டாள்.
மகளின் நிலை பெற்றோர்க்கும் பெரும் துன்பத்தைத் தந்தது. அவர்களுடைய துன்பத்தை அடியோடு போக்குவதுபோல் மறுநாள் அவர்களுடைய குடும்ப நண்பர் வந்தார். அவர் ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் நிபுணத்துவம் பெற்றிருந்தவர். ஆனாலும், அதை தன்னுடைய தொழிலாகக் கொள்ளவில்லை. அவரிடம் விஷயத்தைப் பகிர்ந்துகொண்டார்கள்.

astrology wheel

அதைக் கேட்டதுமே, அந்த நண்பர் வசந்தியிடம் அவளுடைய காதல் உண்மையானதுதானா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டார். அவளுடைய ஜாதக அமைப்பும் காதலில் அவளுடைய மன உறுதியை வெளிப்படுத்தியது. அந்த ஜோதிட நண்பர் அவர்களுடைய கலக்கம் தீருவதுபோல் பேசத் தொடங்கினார்.

”திருமணம் என்பது இரு மனங்களின் இசைவான சேர்க்கையாகும். திருமணப் பொருத்தம் பார்க்கும்போது முக்கியமாகப் பார்க்கவேண்டியது மனப் பொருத்தம். அதாவது ஒருவரை ஒருவர் விரும்புகிறார்களா என்பதைத்தான் முதலில் பார்க்கவேண்டும். பத்து பொருத்தங்கள் இருந்தாலும் மனப் பொருத்தம் இல்லை என்றால், திருமணத்தின் மூலம் அவர்களை இணைப்பது துன்பம் தருவதாக அமைவதுடன் பாவமும் ஆகும். அதைவிட பாவம், மனமொத்த காதலர்களை, ஜாதகம் பொருந்தவில்லை என்று சொல்லி பிரிப்பது.

astrology

மேலும் ஜாதகம் பொருந்தவில்லை என்று மனமொத்த காதலர்களைப் பிரித்து, அதனால் அவர்கள் ஏதேனும் விபரீத முடிவுக்கு வந்துவிட்டால், அதைவிடப் பெரிய பாவம் சேரும்” என்று அவர் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே, குறுக்கிட்ட லட்சுமி, ”அப்படியானால் ஏதேனும் பரிகாரம் இருக்கிறதா?” என்று கேட்டாள்.

”நான் பரிகாரமெல்லாம் சொல்லப்போவதில்லை. மிகவும் சுலபமான வழியை உங்களுக்குச் சொல்கிறேன். நவகிரகங்களில் குருபகவான் முழுமையான சுபகிரகம் ஆவார். அவர் ஒரு ராசியில் இருக்கும்போது கொடுக்கும் பலன்களை விடவும், அவர் பார்க்கும் இடங்களுக்கு மேலும் சிறப்பான பலன்களைத் தருவார். அவரே உங்கள் பிரச்னைக்கு ஒரு அருமையான தீர்வாக இருப்பார். எப்படி?

guru

பிள்ளை அல்லது பெண்ணின் ஜாதகத்தில் ஏதேனும் தோஷம் இருந்தாலும், ஜாதகப் பொருத்தம் இல்லையென்றாலும் அவர்களுக்கு தாராளமாக திருமணம் செய்து வைக்கலாம். அதாவது திருமணத்தின்போது முக்கியச் சடங்கு திருமாங்கல்யதாரணம். மணப்பெண்ணின் கழுத்தில் மணமகன் திருமாங்கல்யதாரணம் செய்யும் லக்கினத்துக்கு குருபகவானின் பார்வை இருந்தால் போதும். எல்லா தோஷங்களும் நீங்கி, அந்தத் தம்பதியர் மன மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்.

guru

உதாரணமாக குரு பகவான் மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருடைய 5,7,9 ஆகிய பார்வைகள் சிம்மம், துலாம், தனுசு ஆகிய லக்கினங்களில் ஒன்றில் திருமாங்கல்யதாரணம் செய்யும் நேரம் அமைந்திருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். திருமாங்கல்யதாரணத்தின்போது லக்கினத்துக்கு குரு பார்வை படாமல் நிகழ்ந்த பல திருமணங்கள், அனைத்து பொருத்தங்களும் இருந்தும்கூட, பல்வேறு பிரச்னைகள் மற்றும் சிக்கல்களினால் விவாகரத்துவரை போய்விட்டிருக்கின்றன” என்றார்.

astro vinayagar

மகளின் மன வருத்தத்தைப் போக்கும் விதத்தில் நண்பர் சொன்னதைக் கேட்டதும் பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். வசந்தியும்தான். உடனே பிள்ளை வீட்டுக்குப் போய் பேசி முடித்து, ஜோதிட நண்பர் குறித்துக் கொடுத்த நேரத்தில் திருமணம் நடத்தி வைத்தனர்