கோவிலுக்கு வெறும்கையுடன் செல்லலாமா?

archanai-kudai
- Advertisement -

கோயிலிற்கு செல்லும்போது சிலர் அர்ச்சனைக்கு தேவையான அனைத்தையும் வாங்கிக்கொண்டு செல்வர். சிலர் வெறும் கையுடன் செல்வர். அனால் அப்படி வெறும் கையுடன் செல்வது சரியா என்று கேட்டால் நிச்சயம் இல்லை.

சலம் பூவொடு தூபம் மறந்தறியேன் என்கிறது தேவாரம். அப்படியானால் அபிஷேகத்திற்கு தேவையான நீரையும், அர்ச்சனைக்கு தேவையான பூக்களையும், தீபராதனைக்கு தேவையான சம்பிராணியையும் கோயிலிற்கு கொண்டு செல்வதே சிறந்தது என்று தேவாரத்தில் அப்பர் கூறுகிறார்.

- Advertisement -

நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றி தரும் இறைவனுக்கு, அவனால் படைக்க பட்ட சிலவற்றை அவனுக்கு நாம் அர்பணிப்பதே சிறந்தது. இதை தத்துவரீதியாக கூறவேண்டும் என்றால் அன்பு என்னும் அபிஷேக நீரையும், மனம் என்னும் மலரையும், மனத்தூய்மை என்னும் தூபத்தையும் இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும். அதுவே சிறந்தது.

- Advertisement -