புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணர் படத்தை வீட்டில் வைக்கலாமா?

krishnar

அருளை வாரி வழங்கும் கடவுளின் படங்களை நம் வீட்டின் பூஜை அறையில் வைப்பது வழக்கம். அனால் இவுலகையே காத்து ரட்சிக்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் புல்லாங்குழலோடு இருக்கும் படத்தை வீட்டில் வைக்கலாமா வேண்டாமா என்ற எண்ணம் பலரது மனத்திலும் உள்ளது.  அது போன்ற ஒரு படத்தையோ இல்லை சிலையையோ வீட்டில் வைத்தால் கிருஷ்ணர் அனைத்தையும் ஊதி தள்ளிவிடுவார் என்ற அச்சம் பரவலாக உள்ளது. வாருங்கள் இந்த சந்தேகத்திற்கான விடையை இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

பொதுவாக கிருஷ்ணரை வழிபட நினைப்பவர்கள் கிருஷ்ணரை கிருஷ்ணராக வழிபடவேண்டும் அப்போது தான் அவரின் அருள் நமக்கு கிடைக்கும். கிருஷ்ணரின் திருவுருவம் எப்படி இருக்கவேண்டும் என்று சாஸ்திரங்களில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.  அதன் படி கிருஷ்ணரின் திருவுவதை அமைத்து வழிபடுவதே சிறந்தது.

பிரம்மதேவர் கிருஷ்ணரின் திருமேனியை பின்வருமாறு வர்ணிக்கிறார்.

வேணும் க்வணந்தம் அரவிந்த-தலாயதாக்ஷம்-
பர்ஹாவதம்ஸம் அஸிதாம்புத-ஸுந்தராங்கம்
கந்தர்ப-கோடி-கமனீய-விஷேஷ-ஷோபம்
கோவிந்தம் ஆதி-புருஷம் தம் அஹம் பஜாமி

இதன் பொருள் யாதெனில் கார்மேக நிற மேனி கொண்டவரும், மயில் இறகை தலையில் அணிதிருப்பவரும், கையில் புல்லாங்குழலை வைத்து வாசிப்பவருக்கு, கோடிக்கணக்கான மக்களின் மனதை வசீகரிக்கும் பேரழகு கொண்டவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நான் வழிபடுகிறேன் என்று பிரம்மதேவர் கூறுகிறார்.

இதன் முலாம் நாம் தெளிவாக புரிந்துகொள்வது யாதெனில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் புல்லாங்குழலோடு இருக்கும் படத்தை வைத்து வழிபட்டால் எந்த தவறும் இல்லை. இன்னும் தெளிவாக கூறவேண்டுமானால் அப்படி வழிபடுவதே சாலச்சிறந்தது.