சித்து விளையாட்டு மூலம் இறைவனை காண முடியுமா?

linagm

ஒரு முனிவர் காட்டில் கடுந்தவம் புரிந்து பல அற்புத சக்திகளை பெற்றார். அதோடு தவத்தின் காரணமாக அவருக்கு சில சித்து விளையாட்டுகளையும் அறிந்தார். தன்னுடைய அற்புத சக்தி மக்களுக்கு உதவ வேண்டும் என்ற என்ன கொண்ட அவர் ஒரு ஊருக்கு அருகில் உள்ள காட்டில் குடிசை போட்டு தங்கி சித்துவிளையாட்டுகள் மூலம் பல அற்புதங்களை நிகழ்த்திக்காட்டினார்.

munivar

முனிவரின் புகழ் விரைவில் நாடெங்கும் பரவ ஆரமித்தது. பலரும் வந்து அவரை வணங்க ஆரமித்தனர்.

ஒரு நாள் வெளிநாட்டை சேர்ந்த ஒரு இளைஞன் அவரிடம் வந்தான். சுவாமி உங்களை பற்றி நான் நிறைய கேள்வி பட்டிருக்கிறேன். நீங்கள் சித்து விளையாட்டில் வல்லவராமே என்றான். முனிவர் சிரித்தபடியே இருந்தார். அந்த சமயம் திடீரென அங்கு ஒரு யானை வந்ததது அதை பார்த்து மிரண்ட அந்த இளைஞன், சுவாமி அந்த யானையை உங்களால் இப்போது கொள்ளமுடியும் என்றான்.

munivar

இதோ இப்போதே கொன்றுவிடுகிறேன் என்று கூறிய முனிவர், தன் கமண்டலத்தில் இருந்த நீரை யானை வரும் திசை நோக்கி தெளித்தார். உடனே யானை சுருண்டு கீழே விழுந்தது.

- Advertisement -

ஆஹா அற்புதம் என்று அந்த இளைஞன் முனிவரை பாராட்டினான். அவன் பாராட்ட பாராட்ட முனிவருக்கு கர்வம் அதிகமானது. பிறகு அந்த இளைஞன், சுவாமி இறந்த அந்த யானையை மீண்டும் உயிர்பெற வைக்க முடியுமா என்றான்.

நிச்சயம் முடியும் என்று கூறி மீண்டும் தன் கமண்டலத்தில் இருந்து சிறிது நீர் எடுத்து ஒரு மந்திரத்தை கூறி அந்த யானை மீது தெளித்தார். மீண்டும் அந்த யானை உயிர்பெற்று எழுந்து ஓடியது.

இதை கண்ட இளைஞன், முனிவரே, நீங்கள் முதலில் யானையை கொன்றீர்கள் பிறகு அதைப் பிழைக்க வைத்தீர்கள். இதனால் நீங்கள் பெற்ற பலன் என்ன? இதனால் நீங்கள் எந்த வகையில் ஆன்மிக வளர்ச்சியை அடைந்தீர்கள்?

இந்த சித்து விளையாட்டு மூலம் உங்களால் இறைவனை காண முடியுமா? கடும் தவம் மூலம் இறைவனின் விலைமதிப்பில்லா அருளை பெற்று அதை வைத்து சித்துவிளையாட்டுகள் செய்வது தவறில்லையா?

இது உங்கள் இறைப்பணியை பாதிக்காதா? நீங்கள் இறைவனை அடைய இது ஒரு பெரிய தடையாக இருக்காதா? மேலும் இது போன்ற செயல்கள் இறைவனுக்கு பிடிக்குமா? என பல கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனான் அந்த இளைஞன்.

munivar

இதை கேட்டு அதிர்ந்து போன முனிவர் அந்த இளைஞனை நிமிர்ந்து பார்த்தார். அந்த கணமே அந்த இளைஞன் மறைந்தான். தன்னை சோதிக்கவந்தது இறைவன் தான் என்பதை உணர்ந்த முனிவர் அன்று முதல் சித்து விளையாட்டுகள் செய்வதை நிறுத்திவிட்டு ஆன்மீக பணியில் தன்னை முழுவதுமாக அர்பணித்துக்கொண்டார்.