டைம் டிராவல் சாத்தியமா? ஒரு மனிதனால் நிகழ்காலத்தில் இருந்து கொண்டே கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் பார்க்க முடியுமா? முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா?

Time travel
- Advertisement -

‘டைம் ட்ராவல்’ என்பது பலரும் வியக்கும் ஒரு வார்த்தையாக சமீப காலங்களில் மக்களிடையே அதிகரித்து வருகிறது. டைம் ட்ராவல் பற்றிய திரைப்படங்களையும், குறிப்புகளையும் தேடி கண்டுபிடித்து அதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களும் ஏராளம்! டைம் டிராவல் சாத்தியமா? நிகழ்காலத்தில் இருந்து மனிதன் கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் பார்க்க முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா? என்பதை தொடர்ந்து படித்த பின் சொல்லுங்கள்!

டைம் ட்ராவல் என்பது நிகழ்காலத்தில் இருந்து கொண்டே காலத்தை கடந்து சென்று மனிதன் இந்த பூமியின் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் பார்ப்பது ஆகும். டைம் டிராவல் சாத்தியம் என்று பல விஞ்ஞானிகள் கூறியிருந்தாலும் அதை ஏற்க மறுக்கும் நம் மனது அப்படி ஒன்று இருந்தால் எப்படி இருக்கும்? என்று நினைத்து பார்க்க தவறுவதில்லை.

- Advertisement -

டைம் டிராவல் மீது மோகம் கொண்டவர்கள் எல்லா மொழிகளில் இருக்கும் திரைப்படங்களை தேடிப் பிடித்துப் பார்த்து விடுகின்றனர். சிலருடைய அறிவுக்கு எட்டிய படி இது சாத்தியம் என்றும், சிலருக்கு சாத்தியமில்லை என்றும் தோன்றுகிறது. காலத்தைக் கடக்கும் இயந்திரம் என்பதை நிச்சயம் ஏற்க முடியாது! ஒரு இயந்திரத்தில் அமர்ந்து கொண்டு நேரத்தையும், காலத்தையும் குறிப்பிட்டால் அந்த இடத்திற்கு கொண்டு போய் விட்டு விடும் வண்டி போல அது செயல்படாது. ஆனால் கடந்த காலத்தை கண்களால் பார்க்க முடியும் என்று கூறுவதற்கு நிறையவே ஆதாரங்கள் உள்ளன.

பழம்பெரும் புராணங்களின்படி இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத்தில் கூட காலத்தை கடக்க முடியும் என்பது நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக சில இடங்களில் குறிப்பிட்டுள்ளனர். ஏழடி உயரமுள்ள மனிதர்கள் வாழ்ந்ததற்கு பல சான்றுகள் புராணங்களில் உள்ளது. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இடத்தில் ஏழடி மனித உயரம் கொண்டவர்கள் குறைவு! அப்படியிருக்க எப்படி ஏழடி உயரமுள்ள மனிதன் இருக்க முடியும்? அதை எப்படி அந்த காலத்திலேயே அவர்களால் பார்க்க முடிந்தது? பழம்பெரும் சிற்பங்களில் இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பொருட்கள் சிலவை செதுக்கி வைக்கப்பட்டுள்ளதை பார்க்கும் பொழுது அவர்கள் ஏன் காலத்தை கடந்து வந்து இவற்றையெல்லாம் பார்த்திருக்க முடியாது? என்றும் ஆச்சரியப்படும் படியான கேள்விகள் எழுந்து வருகிறது.

- Advertisement -

சூரிய ஒளியானது பூமியை வந்தடையும் காலமானது 8 நிமிடங்கள் தாமதமாக இருக்கிறது. திடீரென சூரியன் வெடித்து சிதறினால் அது நமக்கு 8 மணி நிமிடத்திற்கு பிறகு தான் தெரியவரும். அந்த எட்டு நிமிடம் சூரியன் வெடித்தது என்று நமக்கு தெரிய வாய்ப்பே இல்லை. இதுவே காலத்தை கடந்து ஒரு விஷயத்தை பார்க்க முடியும் என்பதற்கு மிகப் பெரிய ஆதாரமாக இருக்கிறது. பல ஒளியாண்டுகள் தூரம் இருக்கும் ஒரு இடத்தில் இருந்து, பூமியைப் பார்க்கும் படியான சூழ்நிலை உருவாகும் பொழுது, இந்த பூமி பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது? என்பதை நம்மால் நம் கண்களால் பார்க்க முடியும். ஆனால் அந்த இடத்திற்கு செல்வதற்கான சாத்தியக்கூறுகள் இப்போதைய கால கட்டத்தில் இருக்கும் அறிவியலால் முடியவில்லை என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.

எனவே காலத்தை கடந்து ஒரு விஷயத்தை நம் கண்களால் பார்க்க முடியும் என்பது ஓரளவுக்கு நம்பும்படியானது தான், ஆனால் அது எந்த அளவிற்கு சாத்தியம்? என்பது மட்டும் இப்போதைக்கு கணிக்க முடியாது! சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர்களுக்கு இப்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் மொபைல்போன், டிவி, போக்குவரத்து வாகனங்கள் போன்றவற்றை பற்றி கூறி இருந்தால் அவர்கள் நம்பி இருப்பார்களா? இங்கிருந்து கொண்டே வேறு ஒரு நாட்டில் இருக்கும் நபரிடம் சாதாரண கையடக்க கருவியில் இருந்து பேச முடியும் என்று சொன்னால் அவர்கள் நம்பியிருக்க மாட்டார்கள். அதே போல காலத்தை கடக்க முடியும் என்று சொன்னால் இப்போது நாம் நம்ப முடியாது ஆனால் அது சாத்தியமாகும் பொழுது பெரிய விஷயமாக தெரியாது! வருங்காலம் அதற்கு பதில் சொல்லும்.

- Advertisement -