சபரிமலைக்கு பெண்கள் ஏன் செல்லக்கூடாது – விஞ்ஞான ரீதியான விளக்கம்

Ayyappan

சமீபத்தில் சபரிமலை கோவிலுக்குள் 10 வயதிற்குள்ளும் 55 வயதிற்கு மேலும் வயதுகளில் உள்ள பெண்கள் மட்டுமே சென்று வழிபட அனுமதி என்கிற பல ஆண்டுகளாக பின்பற்றி வந்த பாரம்பரியத்தை மீறும் விதமாக உச்ச நீதிமன்றம் அனைத்து வயது பெண்களும் கோவிலுக்குள் சென்று வழிபடலாம் என்று தீர்ப்பளித்தது. தங்களின் மதம் சார்ந்த பாரம்பரியத்தில் தலையிட உச்ச நீதிமன்றத்திற்கோ, கேரளாவை ஆளும் இடது சாரி அரசுக்கோ உரிமையில்லை எனக்கூறி கேரளா முழுவதும் போராட்டங்கள் வலுப்பெற ஆரம்பித்துள்ளது. பல இடங்களில் இப்போராட்டத்தில் பெருமளவு பெண்கள் பங்கேற்றுள்ளனர் என்பது கவனிக்க தக்கது.

ayyapan

இந்நிலையில் சபரி மலை கோவிலுக்குள் பருவமடைந்த, நடுத்தர வயதுடைய பெண்கள் ஏன் அனுமதிக்கப்படுவதில்லை என்பதை குறித்த விஞ்ஞான ரீதியான விளக்கத்தை அமெரிக்காவில் வசிக்கும் இந்தியாவின் கேரளாவை பூர்வீகமாக கொண்ட பெண் மருத்துவர் ஒருவர். அவரது கருத்துப்படி பாரத நாட்டில் கட்டப்பட்டிருக்கும் அனைத்து கோவில்களுமே “புவியியல், இயற்பியல் மற்றும் தாந்திரீக” விஞ்ஞான முறையில் கட்டப்பட்டவை ஆகும். இந்த கோவில்கள் எல்லாம் மக்கள் அனைவரும் சாதாரணமாக வந்து வழிபட்டு செல்வதற்காக மட்டுமல்லாமல், கோவில்களுக்குள் இருக்கும் வரை அங்கிருக்கும் நேர்மறையான சக்திகள், வழிபட வரும் பக்தர்களுக்கு சென்று நன்மைகள் ஏற்பட வேண்டும் என்பதற்காக அறிவியல் ரீதியாக கட்டப்பட்டிருக்கிறது.

மேலும் மனித உடலின் தத்துவ படி உடலில் “மூலாதாரம் தொடங்கி சஹஸ்ராரம்” வரை உள்ள “ஏழு சக்கிரங்கள்” நன்றாக இயங்கி, நேர்மையான ஆக்கபூர்வமான சக்தி நமது உடலில் இறங்குவதற்கு குறிப்பிட்ட மந்திரங்கள், தாந்திரீக முறைககளை கொண்டு கோவில் வளாகங்களில் எல்லா காலங்களிலும் கோவில் வளாகத்தில் மக்களின் உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றிற்கும் நன்மை பயக்கும் வகையான சக்தி வெளிப்பாடு இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சக்தியை நாம் பெறுவதற்கு ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் புலால் உணவுகளை உண்ணாமல் இருப்பது, போதை பொருட்கள், உடலின்பம், கெட்ட விடயங்களை பார்த்தால், கேட்டல், பேசுதல், கோபம், பொறாமை போன்ற தீய விடயங்கள் நம்மை அண்டாமல் பாதுகாப்பதற்கு “மண்டல விரதம்” அனுஷ்டிக்கப்படுகிறது.

ayyappan

சபரிமலையில் வீற்றிருக்கும் ஐயப்பன் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு தெய்வம் என்பது அவரது கோடான கோடி பக்தர்களின் நம்பிக்கை. அவரை வழிபட 48 நாட்கள் “உடல், மனம், ஆன்மா” என்கிற திரிகரண சுத்தியுடன் வழிபடுவது ஐயப்பன் மீது பக்தர்கள் வைத்திருக்கும் மரியாதையை காட்டுகிறது. 48 நாட்கள் விரதமிருந்து “சக்தி” பீடமான இத்தகைய கோவில்களில் நாம் இறைவனை வழிபடும் போது விரதம் மேற்கொள்ளாத மனிதர்களை காட்டிலும், விரதம் இருந்து அனைத்திலும் தூய்மையாக இருக்கும் பக்தர்களால் இந்த சக்தியை சுலபத்தில் தங்களின் உடல், மனம், ஆன்மாவில் கிரகித்து கொள்ள முடியும்.

- Advertisement -

பெண்களாலும் 48 நாட்கள் உண்மையான பக்தியுடன் விரதம் இருக்க முடியும் என்றாலும் அவர்களின் உடலமைப்பில் இயற்கை தாய்மை அடைய தந்த வரமான மாதந்தோறும் அதாவது 28 நாட்களுக்கு ஒரு முறை ஏற்படும் “மாதவிடாய்” ஏற்பட்டு, அவர்களின் உடல் சுத்தியை போக்கிவிடுகிறது. மேலும் இந்த மாதவிடாய் எப்போது எந்த நேரத்தில் ஏற்படும் என்பது அந்த பெண்களுக்கே தெரியாது. ஒரு வேளை அவர்கள் கோவிலுக்குள் இருக்கும் நேரத்தில் மாதவிடாய் ஏற்பட்டால் அப்பெண்களே ஒரு தெய்வீக காரியத்தின் போது இவ்வாறு ஏற்பட்டு விட்டதாக கருதி குற்ற உணர்வு கொள்வார்கள்.இந்த மாதவிடாய் காலத்தில் பெண்களின் உடல் மற்றும் மனதில் பல விதமான மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பது அறிவியல் உண்மை. எனவே அவர்களால் முழுமன ஈடுபாட்டுடன் இந்த 48 நாட்கள் விரதத்தை மேற்கொள்ள முடியாது என்ற காரணத்தினால் பருவ வயதில் இருக்கும் பெண்களை சபரி மலையில் அனுமதிப்பதில்லை என்ற விதி சபரிமலையில் பின்பற்றப்படுகிறது.

ayyappan

மற்ற மதங்களை தவிர்த்து, பெண்களை இறைவனின் வடிவமாக வழிபடும் மதம் அனேகமாக இந்து மதமாக தான் இருக்கும். எதையுமே மேற்கத்திய தத்துவம் எனப்படும் “கண்ணால் காண்பது மட்டுமே உண்மை, மனித உடல் சார்ந்தது மட்டுமே உண்மை” என்று சிந்தனை ஓட்டம் கொண்ட மனிதர்களால் இத்தகைய நுணுக்கமான விடயங்களை அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியாது. பிறர் அவர்களுக்கு புரிய வைக்கவும் முடியாது. இறைவழிபாடு, கோவில் சடங்குகள், மத சடங்குகள் போன்றவற்றில் விஞ்ஞானம், உடற்கூறு அறிவியல் அடிப்படையில் பெண்களுக்கு தற்காலிக தடை விதிப்பது, அனுமதி மறுப்பது போன்றவற்றை ஆண் – பெண் சம உரிமை சார்ந்த பிரச்சனையாக கருதும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே:
“விளம்பி” ஆண்டு மழைப்பொழிவு குறித்து பஞ்சாங்கம் கூறுவது என்ன?

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள் மற்றும் குறிப்புகளை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.