ரொம்ப ரொம்ப ஸ்பெஷலான கேப்ஸிகம் கிரேவி ரெசிபி இது. குடைமிளகாயை பார்த்தாலே பிடிக்காது என்பவர்கள் கூட, இந்த கிரேவியை விரும்பி விரும்பி சாப்பிடுவாங்க.

capcicum-gravy
- Advertisement -

குடைமிளகாய் என்றாலே சிலருக்கு சுத்தமாக பிடிக்கவே பிடிக்காது. சமையலில் அதை சேர்த்துக் கொள்ளவே மாட்டார்கள். ஆனால் ஆரோக்கியம் கொடுக்கக்கூடிய இந்தக் குடைமிளகாயை வைத்து சப்பாத்திக்கு சூப்பரான ஒரு கிரேவியை எப்படி செய்வது என்பதை பற்றித்தான் இன்றைக்கு நாம் பார்க்கப் போகின்றோம். இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப ஸ்பெஷலான ரெசிபி. செய்வது ரொம்ப ரொம்ப சுலபம். சுவை ரொம்ப ரொம்ப கூடுதலாக இருக்கும். லஞ்ச் பாக்ஸில் சப்பாத்தி கூட இந்த கிரேவியை கொடுத்து விட்டால், திரும்ப வரும்போது லஞ்ச் பாக்ஸ் காலியாக தான் வரும். தேவை என்றால் இரவு டின்னருக்கு கூட இந்த கிரேவி ரெசிபியை ட்ரை பண்ணலாம். வாங்க அந்த இன்ட்ரஸ்டிங்கான உருளைக்கிழங்கு கேப்ஸிகம் கிரேவி ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.

செய்முறை

முதலில் இதற்கு மீடியம் சைஸில் இருக்கும் குடைமிளகாயை கொஞ்சம் பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதன் உள்ளே இருக்கும் விதைகளை நீக்கி விடுங்கள். பிறகு மீடியம் சைஸில் இருக்கும் ஒரு பெரிய வெங்காயத்தை, கொஞ்சம் பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கி, அதையும் தனியாக வைத்துக் கொள்ளுங்கள். 1 மீடியம் சைஸ் உருளைக்கிழங்குகளை தோல் சீவி கியூப் வடிவத்தில் வெட்டி அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வெட்டி வைத்திருக்கும் உருளைக்கிழங்கு, குடைமிளகாய், வெங்காயம் இந்த 3 பொருட்களையும் எண்ணெயிலேயே வதக்கி வேகவைத்து தனியாக எடுத்து வைக்க வேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு முதலில் குடைமிளகாயை போட்டு முக்கால் பாகம் வேகம் வரை வதக்கி எடுங்கள்.

அதன் பிறகு நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் லேசாக வதங்கி வந்த உடன் எடுத்து விடுங்கள். மூன்றாவதாக உருளைக்கிழங்கை போட்டு உருளைக்கிழங்கு முக்கால் பாகம் சிவந்து வெந்து வந்தவுடன் அதையும் எண்ணெயை வடித்து எடுத்து வைத்து விடுங்கள். இப்ப இந்த மூன்று பொருட்களும் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்து இதற்கு ஒரு மசாலா பொடி தயார் செய்ய வேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 டேபிள்ஸ்பூன் வேர்க்கடலை, சோம்பு 1/2 ஸ்பூன், சீரகம் 1/2 ஸ்பூன், போட்டு வறுத்து ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்து அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். அந்த பொடி அப்படியே இருக்கட்டும்.

ஏற்கனவே நாம் காய்கறிகளை வறுத்த கடாயில் எண்ணெய் மீதும் இருக்கும் அல்லவா. அந்த எண்ணெயில் மிகப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

- Advertisement -

வெங்காயம் நன்றாக வதங்கி வந்தவுடன் மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், கரம் மசாலா – 1/4 ஸ்பூன், மல்லித்தூள் – 1 ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன், மிக்ஸியில் அரைத்த மசாலா பொடி போட்டு, 1 நிமிடம் வதக்கி, மிக்ஸி ஜாரில் அரைத்த – 1 தக்காளி பழத்தை ஊற்றி, மீண்டும் நன்றாக வதக்க வேண்டும்.

அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு இதை வதக்கினால் லேசாக எண்ணெய் பிரிந்து வரும். அந்த சமயத்தில் கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு, ஒரு மூடியை போட்டு இந்த கிரேவியை நன்றாக கொதிக்க வையுங்கள்.

இதையும் படிக்கலாமே: பொங்கல் பண்டிகையின் சிறப்பான இந்த பாரம்பரிய சர்க்கரை பொங்கலை இப்படி செய்தால், உங்க வீட்டு பொங்கலின் மணம் வீதி வரை வீசும். புதுசா சமைகிறவங்களும் ஈஸியா செய்ய நிறைய டிப்ஸ்சும் கூட இருக்கு

கிரேவியில் இருக்கும் பச்சை வாடை அனைத்தும் நீங்கியதும் வேக வைத்து வைத்திருக்கும் குடைமிளகாய், வெங்காயம், உருளைக்கிழங்கை, கிரேவியோடு சேர்த்து கொத்தமல்லி தழைகளை தூவி, ஒரு மூடி போட்டு மீண்டும் மூன்றில் இருந்து நான்கு நிமிடங்கள் வேக வைத்தால் திக்கான சூப்பரான கிரேவி ரெடி ஆகி இருக்கும். அவ்வளவு தான். இதை சுட சுட சப்பாத்திக்கு பரிமாறுங்கள். வீட்டில் இருப்பவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

- Advertisement -