ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் கேரட்டை மில்க் ஷேக் போடுவது எப்படி? இப்படி ஜூஸ் போட்டுக் கொடுத்தா குழந்தைகள் சமத்தா குடிச்சிடுவாங்களே!

carrot-milk-shake1
- Advertisement -

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் காபி, டீ அருந்தும் பழக்கத்தை நிறுத்திவிட்டு ஏதாவது ஒரு காய்கறி ஜூஸ் அல்லது பழ வகைகளில் ஆன ஜூஸ் வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கும். அந்த வகையில் நம் ஆரோக்கியத்திற்கு அற்புதக் கொடையாக இருக்கக்கூடிய கேரட்டை வைத்து எப்படி அருமையான சுவையில் மில்க் ஷேக் போடுவது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

கேரட் ஜூஸில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. நம்முடைய நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்து, கேன்சருக்கு எதிராக போராடுகிறது. மேலும் இது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை சீர் செய்கிறது. இதில் இனிப்பு எதுவும் சேர்க்காமல் குடித்தால் நல்லது. மேலும் இது சரும ஆரோக்கியம், இருதய ஆரோக்கியம், லிவர், கண்கள் போன்றவற்றையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறது. விட்டமின் ஏ, விட்டமின் சி, விட்டமின் ஈ மற்றும் விட்டமின் பி ஆகியவை அதிகம் நிறைந்துள்ள கேரட்டில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள், மினரல்கள் போன்றவையும் உள்ளன.

- Advertisement -

தேவையான பொருட்கள்

கேரட் – 150 கிராம், பால் – இரண்டு கப், ஏலக்காய் தூள் – ரெண்டு சிட்டிகை, பொடித்த வெல்லம் – 2 டேபிள் ஸ்பூன், முந்திரிப் பருப்பு – 12.

செய்முறை

கேரட் மில்க் ஷேக் செய்வதற்கு முதலில் 150 கிராம் அளவிற்கு கேரட்டை எடுத்துக் கொள்ளுங்கள். தோல் சீவி விட்டு நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள். அதன் அடிப்பகுதி மற்றும் நுனிப் பகுதியை வெட்டி வீசி விட்டு மீதம் இருக்கும் பகுதியை கேரட் துருவலில் போட்டு நன்கு பூ போல துருவி வைத்துக் கொள்ளுங்கள். துருவி வைத்துள்ள கேரட் துருவலை ஒரு மிக்ஸர் ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். மில்க் ஷேக் தயாரிக்க பயன்படுத்தும் பாலில் தண்ணீர் எதுவும் சேர்க்காமல் நன்கு காய்ச்சி ஆற வைத்து ஃப்ரிட்ஜில் வைத்து குளிர வைக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

கேரட் துருவலுடன் தேவையான அளவிற்கு முந்திரி பருப்புகளை பொடி பொடியாக ஒடித்து சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அரைப்பதற்கு முன்னர் கால் டம்ளர் அளவிற்கு பாலை சேர்த்து கெட்டியாக முதலில் அரைத்துக் கொள்ளுங்கள். நன்கு நைசாக அரைபட்டவுடன் மீதம் இருக்கும் பாலையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்பொழுது தேவையான அளவிற்கு பொடித்த வெல்லம் சேர்க்க வேண்டும். வெல்லத்திற்கு பதிலாக நாட்டு சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்க்கலாம்.

இதையும் படிக்கலாமே: சுவையான கத்திரிக்காய் பொரியல் செய்வது எப்படி?

பின்னர் இதனுடன் இரண்டு சிட்டிகை அளவிற்கு ஏலக்காய் தூள் சேர்த்து மீண்டும் மிக்ஸியை இயக்கி நைசாக கிரீமி டெக்சர் வருவதற்கு ஏற்ப கொஞ்ச நேரம் அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அதை அப்படியே ஒரு டம்ளரில் ஊற்றி மேலே பொடித்த முந்திரி பருப்புகளை தூவி பருக வேண்டியதுதான். ரொம்ப சுவையாக இருக்கக்கூடிய இந்த கேரட் மில்க் ஷேக்கில் ஏராளமான சத்துக்கள் ஒளிந்து கொண்டிருக்கிறது. இதை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம் அல்லது உணவு எடுத்துக் கொள்வதற்கு இரண்டு மணி நேரம் முன்னர் காலை வேளையில் பருகலாம்.

- Advertisement -