எப்பவும் போல கத்திரிக்காய் பொரியல் செய்து சாப்பிட்டு போர் அடிக்குதா? கொஞ்சம் வித்தியாசமாக இப்படி கத்திரிக்காய் பொரியல் செய்து பாருங்களேன். நீயா நானா என்று போட்டி போட்டுக் கொண்டு கத்திரிக்காயை சாப்பிடுவாங்க.

kathrikai-varuval
- Advertisement -

கத்திரிக்காய் உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்ப ரொம்ப நல்லது. கத்திரிக்காயை வைத்து சாம்பார் வைப்போம். மிஞ்சிப் போனால், வெங்காயம் தக்காளி போட்டு பொரியல் செய்வோம். இல்லையென்றால் வதக்கல் செய்வோம். ஆனால், கத்திரிக்காயை இப்படி கூட மசாலா சேர்த்து ஹெல்தியாக ஒரு பொரியல் செய்ய முடியுமா என்பதை இன்று நாம் பார்க்கப் போகின்றோம். வித்யாசமான ரெசிபி. நாவிற்கு சுவை தரும் ரெசிபி, மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. சாம்பார் சாதம், ரசம் சாதம், சுட சுட சப்பாத்தி, இவைகளுக்கு இது ஒரு நல்ல சைடு டிஷ். நேரத்தை கடத்தல் ரெசிபியை பார்க்கலாம்.

செய்முறை

முதலில் அந்த ஸ்பெஷல் மசாலா எப்படி அரைப்பது என்று பார்த்து விடுவோம். ஒரு கடாயை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் எதுவும் ஊற்ற வேண்டாம். வேர்க்கடலை 2 ஸ்பூன், கடலைப்பருப்பு 1 ஸ்பூன், உளுந்தம் பருப்பு 1 ஸ்பூன், மிளகு 1/2 ஸ்பூன், சீரகம் 1/2 ஸ்பூன், எள்ளு 1 ஸ்பூன்,  தேங்காய் துருவல் 1 ஸ்பூன், வர மிளகாய் 4, இந்த பொருட்களை எல்லாம் போட்டு மணக்க மணக்க வாசம் வரும்படி வறுத்து அடுப்பை அணைத்து விடுங்கள்.

- Advertisement -

இதில் இருக்கும் சூடு ஆறியதும், இதை அப்படியே மிக்ஸி ஜாரில் போட்டு தோல் உரித்த பூண்டு பல் 6 லிருந்து 8 பல் போட்டு, கொரகொரப்பாக இதை அரைத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். சூப்பரான வாசம் நிறைந்த சத்து நிறைந்த மசாலா பொடி தயார்.

250 லிருந்து 300 கிராம் அளவு கத்திரிக்காயை எடுத்து நீளவாக்கில் கொஞ்சம் தடிமனாக வெட்டிக் கொள்ளுங்கள். கத்திரிக்காய் பொரியல் செய்யும்போது, குழைந்து போகக்கூடாது. முழுசு முழுசாக இருக்க வேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி கடுகு, உளுந்து, கருவாப்பிலை, பெருங்காயம், தாளித்து வெட்டி வைத்திருக்கும் கத்தரிக்காய்களை தண்ணீரில் இல்லாமல் இதில் போட்டு, கத்திரிக்காவுக்கு தேவையான அளவு உப்பை தூவி ஒரு நிமிடம் போல நன்றாக வதக்கி விடுங்கள்.

- Advertisement -

அப்போது கத்திரிக்காயில் லேசாக தண்ணீர் விடும். அடுப்பை மீடியம் ஃப்ளேமில் வைத்து, ஒரு மூடி போட்டு 3 நிமிடங்கள் கத்திரிக்காயை வேக வைக்க வேண்டும். கத்தரிக்காய் வெந்து வந்தவுடன் மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் பொடியை இந்த கத்திரிக்காவில் தூவி விட வேண்டும். இந்த பொடியை சேர்ப்பது என்பது அவரவர் அவருடைய விருப்பம் தான்.

நிறைய மசாலா தேவை என்றால் மொத்த பொடியும் போட்டுக் கொள்ளலாம். மசாலா கம்மியா வேணும் என்றால் இதிலிருந்து தேவையான அளவு மட்டும் போட்டு மீதி பொடியை பாட்டிலில் போட்டு ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்தால் அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு மற்ற பொரியலுக்கு கூட இந்த பொடியை நீங்கள் பயன்படுத்தலாம்.

இதையும் படிக்கலாமே: சுட சுட கார போண்டா செய்ய மீந்து போன இட்லி மாவு இருந்தால் போதுமே! சுவையான கார போண்டா ரெசிபி எப்படி செய்வது?

கத்திரிக்காயில் பொடியை போட்ட பின்பு ஒரு கரண்டியை வைத்து நன்றாக கலந்து விடுங்கள். அடுப்பை ஹை ஃபிளேமில் வைத்துவிட்டு அதில் இருக்கும் தண்ணீர் எல்லாம் சுண்டும்படி இரண்டு நிமிடம் வதக்கி விட்டால் சுருள சுருள சூப்பரான கத்திரிக்காய் பொரியல் தயாராகி இருக்கும். இத டேஸ்ட் பண்ணி பாருங்க. நிச்சயம் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டாங்க.

- Advertisement -