கேரட் வச்சு ஒரு சூப்பரான மில்க் ஷேக்! இதை வாரத்தில் 2 நாள் குடித்தால் கூட போதும். உங்களது சருமம் தங்கம் போல ஜொலிக்க ஆரம்பிக்கும்.

carrot-milkshake

பொதுவாக கேரட்டை சிலருக்கும் பொரியல் செய்து சாப்பிட பிடிக்காது. ஆனால், கேரட்டை நாம் அதிகமாக உட்கொண்டால் நம்முடைய சருமம் பளபளப்பாகும். சுருக்கம் இல்லாமலும் ஜொலிக்க ஆரம்பித்து விடும். இதோடு சேர்த்து கண் பார்வைக்கும் கேரட் மிகவும் நல்லது. இந்த கேரட்டை வைத்து சுவையாக, ரிச்சான டேஸ்டில் ஒரு மில்க் ஷேக் எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

carrot

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து ருசித்து குடிக்கும் அளவிற்கு சுவையான இந்த கேரட் மில்க் எப்படி செய்வது? இப்பவே தெரிஞ்சுக்கலாம் வாங்க! இதில் சர்க்கரையின் சுவை கொஞ்சம் கூடுதலாக இருக்கும் என்பதால், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் மட்டும் குடிக்கக் கூடாது.

கேரட் மில்க் ஷேக் செய்ய தேவையான பொருட்கள்:
கேரட் – 150 கிராம், முந்திரிப்பருப்பு – 10 லிருந்து 15, தண்ணீர் ஊற்றாமல் காய்ச்சிய பால் – 2 டம்ளர், ஏலக்காய் பொடி – 1/2 ஸ்பூன், நாட்டு சர்க்கரை – 1 ஸ்பூன்.

carrot

முதலில் 150 கிராம் அளவு கேரட்டை எடுத்து நன்றாக தோலை சீவி கொள்ளுங்கள். அதன்பின்பு ஒரு துருவலை எடுத்து கேரட்டை பொடியாக துருவிக் கொள்ள வேண்டும். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் துருவிய கேரட்டை போட்டு கொள்ள வேண்டும். அதன்பின்பு முந்திரி பருப்புகளை போட வேண்டும். (முந்திரி பருப்பு சேர்த்தால்தான் மில்க்ஷேக் அதிக சுவையாக கிடைக்கும். முந்திரிப்பருப்பு போடாமலும் மில்க்ஷேக் செய்யலாம்.)

- Advertisement -

1/4 கப் அளவு கொஞ்சமாக பாலை ஊற்றி, மிக்ஸியை ஓட விடுங்கள். கேரட், பால், முந்திரி பருப்பு மைய அரைபட வேண்டும். இதை நாம் வடிகட்டி குடிக்க போவது கிடையாது. கேரட்டுடன் குடிக்கவேண்டும் என்பதால் நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய வீட்டில் ஜூஸர் இருந்தால் அதில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் மிக்ஸி ஜாரிலேயே, மிக்ஸியை சிறிது நேரம் ஓட விட்டால் மைய அரைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

carrot1

1/4 கப் பாலை ஊற்றி, முந்திரி பருப்பையும் கேரட்டையும் நைஸாக அரைத்த பின்பு, மீதம் இருக்கும் பாலையும் மிக்ஸியில் சேர்த்து ஏலக்காய் பொடி சேர்த்து, நாட்டு சர்க்கரையை சேர்த்து ஒரே ஒரு ஓட்டு ஓட்டி கொள்ள வேண்டும். அவ்வளவு தான். இரண்டு டம்ளரில் இந்த கேரட் ஜூஸை பரிமாறி, தேவைப்பட்டால் மேலே குங்குமப்பூ பாதாம் இவைகளை தூவி, ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து பரிமாறுங்கள்.

Carrot juice benefits in Tamil

இதன் சுவை அலாதியாக இருக்கும். குழந்தைகளும் இதை விருப்பமாக சாப்பிடுவார்கள். புதுவிதமான இந்த கேரட் மில்க் ஷேக் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் உங்களுடைய வீட்டில் முயற்சி செய்து பாருங்கள். நிச்சயமா நீங்கள் தங்கம் போல சீக்கிரமே ஜொலிக்க ஆரம்பித்து விடுவீர்கள். டிரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே
அட! இப்படி கூட தக்காளியை வைத்து, காரச் சட்னி அரைக்கலாமா? கொஞ்சம் வித்தியாசமாக ‘பச்சைமிளகாய் தக்காளி கார சட்னி’ ரெசிபி உங்களுக்காக!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.