அட! இப்படி கூட தக்காளியை வைத்து, காரச் சட்னி அரைக்கலாமா? கொஞ்சம் வித்தியாசமாக ‘பச்சைமிளகாய் தக்காளி கார சட்னி’ ரெசிபி உங்களுக்காக!

chutney3
- Advertisement -

தக்காளியை வைத்து சட்னி செய்ய வேண்டும் என்றாலே வர மிளகாய் சேர்த்து தான் செய்வோம். இது கொஞ்சம் வித்தியாசமாக பச்சை மிளகாய், தக்காளி காரசட்னி. எத்தனை நாட்கள்தான் ஒரே சுவையில், ஒரே சட்னியை சாப்பிடுவது? கொஞ்சம் வித்தியாசமாக இந்த சட்னியையும் ட்ரை பண்ணி பார்க்கலாமே! இட்லி தோசை, சப்பாத்திக்கு கூட இந்த சைடிஷ் மிகவும் சுவையாக இருக்கும். பத்திலிருந்து பதினைந்து நிமிடத்திற்குள் இந்த சட்னியை செய்து விடலாம். சரி வாங்க ரெசிபிக்கு போவோம்.

tomato

முதலில் இந்த சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் – 8, பூண்டு தோலுரித்து – 5 பல், புளி – சிறிய நெல்லிக்காய் அளவு, தக்காளி – 5, கருவேப்பிலை ஒரு கொத்து, கொத்தமல்லி தழை இரண்டு இனுக்கு, சீரகம் – 1/2 ஸ்பூன், சின்ன – வெங்காயம் 10 லிருந்து 15.

- Advertisement -

பச்சை மிளகாய் உங்கள் வீட்டில் இருக்கும் மிளகாய்க்கு ஏற்ப எடுத்துக்கொள்ளுங்கள். பெரிய பச்சை மிளகாய் ஆக இருந்தால் 6 லிருந்து 7 கூட குறைத்துக் கொள்ளலாம். தக்காளி பழுத்த தக்காளியாக இருக்க வேண்டும். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து மிகவும் பொடியாக நறுக்கி ஓரமாக வைத்துக் கொள்ளுங்கள்.

tomato

அடுப்பில் கடாயை வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, முதலில் பச்சை மிளகாயை போட்டு பச்சை வாடை போகும் வரை வதக்கி, அதன் பின்பு பூண்டு, புளி, தக்காளி, இந்த பொருட்களை சேர்த்து வதக்கவேண்டும். தக்காளியின் தோல் சுருங்கி பச்சை வாடை போகும் வரை வதக்கி விடுங்கள். அதன் பின்பு கறிவேப்பிலை ஒரு கொத்து, கொத்தமல்லி தழையை போட்டு வதக்கி இறுதியாக சீரகத்தை சேர்த்து ஒரு நிமிடங்கள் வதக்கி நன்றாக ஆற வைத்து விட்டு, மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதோடு தேவையான அளவு உப்பை போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, பக்குவமாக அரைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக சட்னியை ஒரு சிறிய கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். ரொம்பவும் கட்டியாக இருந்தால் இந்த சட்னி சுவை தராது. கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளலாம்.

chutney4

தாளிக்க சிறிய கடாயை அடுப்பில் வைத்து, 1 ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு கறிவேப்பிலை வரமிளகாய் பெருங்காயம் தாளித்து, பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வதக்கி, சட்னியில் சேர்த்து கலக்கி உடனடியாக பரிமாறினால் சூப்பரான காரசாரமான தக்காளி சட்னி புதிய சுவையில் உங்களுக்கு கிடைத்திருக்கும். இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம்.

இதையும் படிக்கலாமே
கடையில் வாங்கும் எதுவும் வேண்டாம்! கண்ணாடி போன்ற முக அழகு பெற இந்த 2 பொருளை மட்டும் அரைத்து வைத்துக் கொண்டால் போதுமே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -