முகத்தை தங்கம் போல ஜொலிக்க வைக்கவும், தலைமுடியை காடு போல வளரச் செய்யவும், இந்த ஒரு எண்ணெய் போதுமே. ஒரே எண்ணெய்! இரண்டு நன்மைகள்!

carrot-oil
- Advertisement -

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க போகின்றோம். இந்த ஒரு எண்ணெயை தயார் செய்து வைத்துக்கொண்டால் 2 மாதத்தில் உங்களுடைய முகம் தங்கம் போல ஜொலிக்க ஆரம்பிக்கும். தலையில் முடி உதிர்வு அதிகமாக இருந்தால், முடி உதிர்வு உடனடியாக நிறுத்தப்பட்டு, விழுந்த முடிகள் சீக்கிரமே வளரத் தொடங்கும். அந்த அளவிற்கு அதி அற்புதம் வாய்ந்த ஒரு எண்ணெயை எப்படி தயாரிப்பது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த எண்ணெயை கடையில் காசு கொடுத்து வாங்கினால் இதனுடைய விலை மிக மிக அதிகம். அதுமட்டுமல்லாமல் அதில் செயற்கைப் பொருட்கள் கலக்கப்பட்டு இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

carrot

சரி, இந்த எண்ணெயைத் தயாரிக்க நமக்கு தேவையான பொருட்கள் என்னென்ன? இரும்பு கடாய் அல்லது எவர்சில்வர் கடாய், 75ml – மரச்செக்கு தேங்காய் எண்ணெய், 100 கிராம் – கேரட் துருவல் அவ்வளவு தான். நான் ஸ்டிக் கடாய் அலுமினிய கடையை இந்த குறிப்புக்கு பயன்படுத்தக்கூடாது.

- Advertisement -

கடாயை அடுப்பில் வைத்து விடுங்கள். துருவிய கேரட் கடாயில் முதலில் போட்டுவிட்டு. சுத்தமான மரச்செக்கு தேங்காய் எண்ணெயை கேரட்டுடன் ஊற்றி விட வேண்டும். அடுப்பை பற்ற வைத்து சிம்மில் வைத்து விடுங்கள். இந்த எண்ணெய் மெதுவாக சூடு ஏறி கொதிக்க ஆரம்பித்தவுடன், 20 நிமிடங்கள் நன்றாக எண்ணெயில் கேரட் துருவல் வேக வேண்டும்.

coconut oil 2

அடுப்பை சிம்மில் தான் வைத்திருக்க வேண்டும். கேரட்டில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் 20 நிமிடங்களில் எண்ணெயில் இறங்கி விடும். அடுப்பை அணைத்து விட்டு, அடுப்பிலிருந்து கடாயை மெல்லமாக கீழே இறக்கி வைத்து விடுங்கள். கேரட்டில் இருக்கும் நிறம் எண்ணெயில் நன்றாக இறங்கி இருக்கும். மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் இந்த எண்ணெய் நன்றாக ஆறிய பின்பு, ஒரு வடிகட்டியில் மூலம் வடிகட்டி எடுத்து, கேரட் எண்ணெயை கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம். 2 மாதங்களுக்கு இது கெட்டுப்போகாது. எண்ணெயை ஸ்பூனால் எடுத்து பயன்படுத்த வேண்டும். கையை எண்ணெய் பாட்டிலுக்குள் விடக்கூடாது.

- Advertisement -

இரவு தூங்கும் போது இரண்டு சொட்டு எண்ணெயை தொட்டு உங்களுடைய முகம் முழுவதும் ஆங்காங்கே பொட்டு பொட்டாக வைத்து லேசாக கண்ணுக்கு தெரியாமல் தேய்த்து விட வேண்டும். அவ்வளவு தான். மறுநாள் காலை வரை அது உங்களுடைய முகத்திலேயே இருக்கட்டும். நீங்கள் எண்ணெய் போட்டது போல எல்லாம் தெரியாது.

carrot-oil2

மறு நாள் காலை எப்பவும் போல சோப்பு போட்டு உங்களுடைய முகத்தை கழுவிக் கொள்ளலாம். தினமும் இரவு நேரத்தில் இப்படி செய்யலாம். இல்லையென்றால் இந்த எண்ணெயை முகத்தில் நன்றாக தடவி, வட்ட வடிவத்தில் மசாஜ் செய்து 1 மணி நேரம் கழித்தும் கழுவிக் கொள்ளலாம். அது உங்களுடைய இஷ்டம்.

- Advertisement -

carrot-oil1

இதேபோல் இந்த எண்ணெயை தலை முடிக்கு எப்படி பயன்படுத்துவது? தினம்தோறும் எண்ணெய் தேய்ப்பது போல, இந்த எண்ணெயை தலை முடியில் தடவி பயன்படுத்திக் கொண்டாலும் சரி, அப்படி இல்லை என்றால் வாரத்தில் மூன்று நாட்கள் இந்த எண்ணெயை நன்றாக தலையில் தடவி 1 மணி நேரம் ஊற வைத்து மசாஜ் செய்து அதன் பின்பு தலைக்கு குளித்து விட்டாலும் பரவாயில்லை.

உங்களுடைய முடிக்கு தேவையான ஊட்டச்சத்து இந்த கேரட் ஆயிலில் அதிகமாகவே உள்ளது. மற்ற எண்ணெய்களைப் போல இந்த எண்ணெய் பிசுபிசுப்பாக இருக்காது. சாதாரணமாக தலையில் தடவிக் கொண்டு வெளியே சென்றாலும் எந்த ஒரு வாசமும் வீசாது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

தலைக்கு மசாஜ் செய்து குளிப்பதாக இருந்தால், வாரத்தில் மூன்று நாட்கள் கட்டாயம் இந்த எண்ணெயை பயன்படுத்த வேண்டும். இரண்டே மாதங்களில் இந்த எண்ணெயை உங்களுடைய முகத்திற்கும் தலைமுடிக்கும் பயன்படுத்தி வந்தால், நிச்சயமாக நல்ல பலனை பெற முடியும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் உங்களுடைய வீட்டில் முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -