பசங்களுக்கு நீங்க என்ன லஞ்ச் குடுத்தாலும், சைடு டிஷ்ஷா இந்த காலிஃப்ளவர் ஃப்ரையை இப்படி பண்ணி கொடுங்க, கொஞ்சம் கூட சாதம் மிச்சம் வராது. நல்ல மொறு மொறு சைடு டிஷ்.

- Advertisement -

இந்த காலிஃப்ளவரை வைத்து பல உணவுகளை சமைக்கலாம். வறுப்பது, பொரிப்பது குழம்பு என்று எத்தனையோ வகைகளை இதில் செய்யலாம். இதில் இந்த காலிஃப்ளவரை வைத்து செய்யப்படும் பக்கோடா, 65 இவையெல்லாம் குழந்தைகளின் பெரும் விருப்பமான உணவாக இருக்கிறது. அந்த வகையில் இந்த காலிஃப்ளவர் ஃப்ரை சாதம் போன்றவற்றுக்கு நல்ல சைடிஷ் ஆகவும் இருக்கும் அதே நேரத்தில் மாலை நேரத்திற்கு ஒரு ஈவினிங் ஸ்னாக்ஸ் ஆகவும் பயன்படுத்திக் கொள்ளலாம் அந்த அளவிற்கு இரண்டுக்கும் சேர்த்த நல்ல ஒரு டிஷ் தான் இந்த காலிஃப்ளவர் ஃப்ரை. அதை எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்: காலிஃப்ளவர் -1, இஞ்சி பூண்டு விழுது -1 டீஸ்பூன், மைதா -2 டேபிள் ஸ்பூன், கான் பிளவர் -1 டேபிள் ஸ்பூன், காஷ்மீரி சில்லி பவுடர் -1 டீஸ்பூன், தனியாத்தூள் -1 டீஸ்பூன், முந்திரி – 10, மிளகுத்தூள் -1 டீஸ்பூன், சில்லி ஃப்ளக்ஸ் – 1 டீஸ்பூன், கொத்தமல்லி – கைப்பிடி, எலுமிச்சை பழம் -1, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, உப்பு -1/4 டீஸ்பூன், எண்ணெய்- 200 கிராம்.

- Advertisement -

இந்த காலிஃப்ளவர் ஃப்ரை செய்வதற்கு முதலில் காலிஃப்ளவரை ஓரளவிற்கு மீடியம் சைஸில் நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். காலிஃப்ளவரின் கீழ் இருக்கும் தண்டு பகுதியை சேர்க்க வேண்டாம் அதை நீக்கி விடுங்கள்.

இப்பொழுது அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாய் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி தண்ணீரை கொதிக்க விடுங்கள் தண்ணீர் கொதித்ததும் அதில் ஒரு பின்ச் மஞ்சள் தூள், ஒரு பின்ச் உப்பு சேர்த்து அத்துடன் நீங்கள் நறுக்கி வைத்த காலிஃப்ளவரையும் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் காலிபிளவரை தனியாக எடுத்து தண்ணீர் வடித்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்பொழுது ஒரு பவுலில் நீங்கள் வடித்து வைத்த காலிஃப்ளவர் எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், தனியா தூள், முந்திரி, மிளகுத்தூள்,சில்லி ஃப்ளாக்ஸ், கொத்தமல்லி இவையெல்லாம் சேர்த்த பிறகு காலிஃப்ளவர் உடன் இந்த கலவை எல்லாம் சேர்வதற்கு மைதா, கான்பிளவர், உப்பு இத்துடன் ஒரு எலுமிச்சை பழச்சாறு இவையும் சேர்த்து பிறகு கொத்தமல்லி இலைகளை தூவி நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது லேசாக தெளித்து கலந்து கொண்டால் போதும் தண்ணீர் அதிகமாகி விட்டால் இது பஜ்ஜி பதத்திற்கு மாறிவிடும் எனவே பார்த்து தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்றாக காய்ந்தவுடன் நீங்கள் தயார் செய்து வைத்த காலிஃப்ளவரை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுங்கள். எண்ணெய் சூடு குறைவாக இருந்தால் காலிஃப்ளவர் எண்ணெய் குடித்து விடும் நன்றாக இருக்காது எனவே பார்த்து பொறுத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: அசைவம் சாப்பிடுகிறவர்கள் கூட இனி அசைவத்துக்கு பதில் இந்த பன்னீர் கிரேவிய தான் சப்பாத்தி பூரி பரோட்டாவிற்கு எல்லாம் சைடிஷா கேப்பாங்க, அந்த அளவுக்கு செம டேஸ்ட்னா சிம்பிள் கிரேவி ரெசிபி இது.

சுவையான காலிஃப்ளவர் ஃப்ரை தயார் இதை தனியாக சாப்பிடலாம் இல்லை. சாதத்திற்கு சைட் டிஷ் ஆகவும் வைத்துக் கொள்ளலாம். எந்த வகை சாதத்திற்கும் இந்த ஒரு சைடு டிஷ் இருந்தால் போதும் டேஸ்ட் அருமையாக இருக்கும். நீங்களும் உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -