மன குழப்பம் தீர கூறவேண்டிய சந்திர பகவான் ஸ்லோகம்

temple-1-1

மனிதன் என்று அழைக்கப்படுவதற்கு காரணமே அவனின் மனித இனத்திற்கேயுரிய மனம் தான். ஒரு மனிதனின் வாழ்விற்கும், தாழ்விற்கும் காரணம் அவனுடைய மனம். ஆனால் ஒரு சிலருக்கு பல்வேறு காரணங்களால் மனம் பாதிப்படைந்து, அதனால் சரியாக செயல்பட முடியாமல் அவதிப்படுகின்றார். அப்படிப்பட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அருளப் பட்டது தான் “சந்திர பகவான் துதி”.

chandra bagavan

சந்திர பகவான் துதி
“அலைகடல் அமுதந்
தன்னோ டன்றுவந் துதித்து மிக்க
களைவளர் திங்க ளாகிக்
கடவுளோர்க்கு அமுதம் ஈயும்
சிலைநுதல் உமையாள் பாகன்
செஞ்சடைப் பிறை மயாய்
மேரு மலைவல மாக வந்த
மதியமே போற்றி போற்றி”

என்கிற இந்த சந்திரத் துதியை திங்கள் கிழமைகளில், நவகிரகங்கள் சந்நிதிக்குச் சென்று சந்திர பகவானுக்கு நெல்லை நிவேதனமாக வைத்து, மல்லிப்பூக்களைக் கொண்டு அர்சித்து, 3 முறை துதித்து வர மனக்குழப்பங்கள் அனைத்தும் நீங்கி சித்தம் தெளிவுபெற்று நீங்கள் விரும்பிய அனைத்தும் அடையப்பெறுவீர்கள்.

இதையும் படிக்கலாமே:
நீண்ட நாள் வியாதிகள் நீங்க சித்தர் அருளிய மந்திரம்

இது போன்று மேலும் பல தமிழ் மந்திரங்கள், துதி பாடல்கள், ஜோதிட குறிப்புகள் என பலவற்றை அறிய தெய்வீகம் மொபைல் APP – ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.