உங்களுக்கு ஜன வசியம், காரிய வெற்றிகள் உண்டாகச் செய்யும் ஸ்தோத்திரம் இதோ

chandra
- Advertisement -

உலகில் பல வகையான உயிர்கள் இருந்தாலும் சிந்தனைத் திறன் மற்றும் சிறந்த அறிவாற்றல் மனிதர்களுக்கு மட்டுமே உண்டு. ஜோதிட வல்லுநர்களின் கூற்றுப்படி மனிதர்களின் மனதை கட்டுப்படுத்தும் மனோகரகனாக நவகிரகங்களில் சந்திரன் இருக்கிறார். அறிவியலாளர்கள் ஆராய்ந்ததிலும் சந்திரனின் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் மனிதர்களின் மன நிலையில் மாறுபாடுகள் ஏற்படுகின்றன என்பதை கண்டறிந்தனர். அப்படியான மனிதர்களின் மனம் சிறப்பாக இருக்கவும், வாழ்வில் பல நன்மைகளைப் பெறவும் துதிக்க வேண்டிய சந்திரபகவான் ஸ்தோத்திரம் இதோ.

Chandra Baghavan

சந்திரபகவான் ஸ்தோத்திரம்

ஆப்யாயஸ்வ ஸமேதுதே விஸ்வத ஸோமவ்ருஷ்ணியம்
பவா வாஜஸ்ய ஸங்கதே

- Advertisement -

இரவில் உலகிற்கு ஒளி தரும் சந்திர பகவானுக்குரிய ஸ்தோத்திரம் இது. இந்த ஸ்தோத்திரத்தை வேதமறிந்த வேதியர்களிடம் ஸ்வரத்துடன் துதிக்கும் விதம் அறிந்து, தினமும் காலையில் 9 முறை அல்லது 27 முறை துதிப்பது நல்லது. திங்கட்கிழமைகள், பௌர்ணமி தினங்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் 108 முறை துதிப்பதால் வீண் கவலைகள், மன அழுத்தம் போன்றவை நீங்கும். மன உறுதி அதிகரிக்கும். ஜன வசியம் உண்டாகும். நீங்கள் மனதில் நினைத்த நல்ல விடயங்கள் அனைத்தும் நிறைவேறும்.

chandra bagawan

மனநிலை பாதிக்கப்பட்ட நபர்கள் உயிருடன் இருந்தாலும், இறந்தவர்களுக்கு சமமாகவே கருதப்படுவர். எனவே எந்த நிலையிலும் நமது மன நலம் குன்றாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கோள்களில் மனோகரகனாக சந்திர பகவான் கருதப்படுகிறார். சந்திரனுக்குரிய திங்கட்கிழமைகள், அமாவாசை, பௌர்ணமி ஆகிய தினங்களில் சந்திரனுக்குரிய மந்திரங்களை துதிப்பவர்களுக்கு சிறந்த ஞாபக சக்தி, மனோதிடம், எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறும் அமைப்பு போன்றவை ஏற்படும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
நாள் முழுவதும் நன்மைகளை ஏற்படுத்தும் சுலோகம்

இது போன்ற மேலும் பல மந்திரங்கள் பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Chandra bhagavan stotram in Tamil. It is alos called as Chandran mantra in Tamil or Chandran manthiram in Tamil or Manakavalai theera manthiram in Tamil or Chandra bhagavan manthirangal in Tamil.

- Advertisement -