உங்களுக்கு நாள் முழுவதும் நன்மைகள் ஏற்பட இந்த சுலோகம் துதியுங்கள்

krishna

ஒவ்வொரு நாளும் காலை விடிந்தது முதல் இரவு தூங்கப் போகும் வரை பலவிதமான விடயங்களை நமது வாழ்வில் எதிர் கொள்கிறோம். இதில் நமது மனதை சோர்வடைய செய்யும் நிகழ்வுகள், பிற மனிதர்களுடனான உறவுகளில் சிக்கல்கள் போன்றவை பலரின் வாழ்வில் உண்டாகிறது. நமது மனம் மற்றும் சித்தம் தெளிவாக இருந்தால் அன்றாட வாழ்வில் எத்தகைய துன்பங்களும் ஏற்படாது. அத்தகைய மனதை நமக்கு அருள்பவர் ஸ்ரீகிருஷ்ண பகவான் ஆவார். ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு உரிய ஸ்லோகம் இது.

Lord krishnar

ஸ்ரீ கிருஷ்ண ஸ்லோகம்

ஓம் ஸ்ரீ கிருஷ்ண சரணம் மமஹ்

மகாவிஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரமான ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்குரிய ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, பூஜை அறையில் இருக்கும் கிருஷ்ண பகவானுக்கு வாசமுள்ள மலர்களை சமர்ப்பித்து, இனிப்பு அல்லது பழம் போன்றவற்றை நைவேத்தியம் செய்து இந்த மந்திரத்தை 108 முறை 1008 முறை வருகை துதிப்பவர்களுக்கு அன்றைய நாள் முழுவதும் நன்மையான பலன்கள் ஏற்படும். பிறருடனான மனஸ்தாபங்கள், கருத்து வேறுபாடுகள் போன்ற நீங்கி உறவு மேம்படும். திருமணமான தம்பதிகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும். நோய்கள் வறுமை போன்றவை நீங்கும்.

“அனைத்துமாக இருக்கும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவே, நான் முழுவதுமாக உங்களிடம் சரணாகதி அடைகிறேன் என்னை எப்போதும் நீங்கள் காத்து அருள்வீராக” என்பதே மேற்கண்ட ஸ்லோகத்தின் பொதுவான பொருள் ஆகும். எப்படியான இறுக்கமான மனம் கொண்டவர்களும் ஸ்ரீகிருஷ்ண பகவானின் உருவத்தை பார்ப்பதாலும், அவரின் நாமத்தை ஜெபிப்பதாலும் ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சி மனதில் உண்டாகும். மேற்கூறிய கிருஷ்ண பகவான் ஸ்லோகத்தைத் இருப்பவர்களுக்கு வாழ்வில் எல்லா நன்மைகளும் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
வீடு, சொத்துகள் பாதுகாப்பாக இருக்க மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Sri krishna slokam in Tamil. It is also called as Krishna mantras in Tamil or Vishnu mantras in Tamil or Krishna manthirangal in Tamil or Kanavan manaivi otrumaiku manthiram in Tamil.