இன்று சந்திர கிரகணம் சரியாக எப்போது நிகழும் தெரியுமா ?

Chandra grahanam
- Advertisement -

2019 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் இந்த நூற்றாண்டின் நீண்ட நேர சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளது. சந்திர கிரஹணம் என்றால் என்ன. இன்று சரியாக எத்தனை மணிக்கு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இப்படி பல்வேறு தகவல்களை இந்த பதிவில் காணப்போம் வாருங்கள்.

sunny

சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வந்து, அச்சூரியனை முழுமையாக மறைத்து சில மணிநேரங்களுக்கு பூமியில் ஒரு இருண்ட நிலையை உண்டாகும் நிகழ்வு சூரிய கிரகணம் எனப்படும். இந்த சூரிய கிரகணத்தை மனிதர்கள் தங்களின் வெறும் கண்களால் காண்பது கண்களுக்கு தீங்கை ஏற்படுத்தும்.

- Advertisement -

சந்திர கிரகணம் என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வருவதால் இந்த பூமியின் நிழல் சந்திரனின் மீது விழும் நிலையே சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது. வானில் இரவு நேரத்தில் சந்திரன் தோன்றுவதால், அதன் ஒளி மனிதர்களின் கண்களுக்கு குளுமையை தருவதாலும் சந்திர கிரகணத்தை மனிதர்கள் வெறும் கண்களால் காண்பதால் தீங்கேதுமில்லை. வானில் நிகழும் அதிசய நிகழ்வான இந்த சந்திர கிரகணம் இன்று இந்தியாவில் சரியாக நள்ளிரவு 12.13 மணிக்கு சந்திர கிரகணம் ஆரம்பமாகிறது. பின்பு, 1.31 மணிக்கு உச்சம் அடைந்து, மத்திய காலமாக இரவு 3 மணி வரை நீடித்து, பின்னர் அதிகாலை 4.30 மணிக்கு முடிகிறது. ஒட்டு மொத்தமாக சுமார் 5 மணி நேரம் வரையில் சந்திரகிரகணம் நீடிக்க உள்ளது.

chandra grahanam

இதை இந்திய நாட்டில் அனைவரும் காண முடியும். இந்த சந்திர கிரகணத்தை தரிசிக்க கூடியவர்கள் அந்த கிரகணத்திற்குரிய மந்திரங்களை அந்நேரத்தில் மனதிற்குள் ஜெபிபிப்பது அந்த கிரகணத்தால் ஏற்படும் எதிர்மறையான அதிர்வுகளை நீக்கும்.

English Overview:
Here we described Chandra grahanam 2019 date and Timing in Tamil and also few others things related to Grahanam in Tamil.

- Advertisement -