சந்திர பகவான் ஸ்தோத்திரம்

Baby-and-sivan

மனம் என்ற ஒன்று இருப்பதால் தான் அவன் மனிதன் என அழைக்கப்படுகிறான். அகத்தில் உள்ளது முகத்தில் தெரியும் என்பது பழமொழி. நமது மனம் எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறதோ அதையே நமது முகம் பிரதிபலிக்கும். மனம் அழகாக இருந்தால் நமது முகமும் அழகாக இருக்கும். மேலும் இந்த மனம் தான் நம் பல விதமான புதுமைகளை படைப்பதற்கு காரணமாக இருக்கும் கற்பனை சக்தியை கொடுக்கிறது. இவையெல்லாவற்றிற்கும் காரகனாக இருக்கும் சந்திர பகவானை போற்று ஸ்தோத்திரம் இதோ.

Chandra Baghavan

சந்திர ஸ்தோத்திரம்

ஸஸீ பாது ஸிரோதேஸம் பாலம் பாது கலானிதி
சக்ஷுஷீ சம்த்ரமாஃ பாது ஸ்ருதீ பாது னிஸாபதி

ப்ராணம் க்ஷபகரஃ பாது முகம் குமுதபாம்தவ
பாது கம்டம் ச மே ஸோமஃ ஸ்கம்தே ஜைவாத்றுகஸ்ததா

கரௌ ஸுதாகரஃ பாது வக்ஷஃ பாது னிஸாகர
ஹ்றுதயம் பாது மே சம்த்ரோ னாபிம் ஸம்கரபூஷண

மத்யம் பாது ஸுரஸ்ரேஷ்டஃ கடிம் பாது ஸுதாகர
ஊரூ தாராபதிஃ பாது ம்றுகாம்கோ ஜானுனீ ஸதா

- Advertisement -

அப்திஜஃ பாது மே ஜம்கே பாது பாதௌ விதுஃ ஸதா
ஸர்வாண்யன்யானி சாம்கானி பாது சம்த்ரோகிலம் வபு

ஏதத்தி கவசம் திவ்யம் புக்தி முக்தி ப்ரதாயகம்
யஃ படேச்ச்றுணுயாத்வாபி ஸர்வத்ர விஜயீ பவேத்
இதி ஸ்ரீசம்த்ர கவசம் ஸம்பூர்ணம்

அழகுக்கு இலக்கணமாக இருக்கும் சந்திர பகவானை போற்றும் ஸ்தோத்திரம் இது. இந்த ஸ்தோத்திரத்தை சந்திர பகவானுக்குரிய திங்கட்கிழமைகள் அன்று காலை அல்லது மாலையிலும், பௌர்ணமி தின இரவு வேளைகளில் சந்திரனை தரிசித்த வாறு 11 முறை துதித்து வர உங்களின் முகத்தில் அழகு மேம்பட்டு முகவசீகரம் உண்டாகும். ஞாபக சக்தி அதிகரிக்கும். உங்களின் மனம் தெளிவு பெற்று உங்களின் கற்பனை சக்தி மேம்பாட்டு உங்களின் படைப்பாற்றல் திறன் சிறப்பாகும்.

chandra bagavan

மனிதன் மனிதனாக இருப்பதற்கு அடிப்படையே அவனது மனது தான். மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் மனிதர்கள் உயிருடன் இருந்தாலும், இறந்தவர்களுக்கு சமமாகவே கருதப்படுவர். எனவே எந்த நிலையிலும் நமது மன நலம் குன்றாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கோள்களில் மனோகரகனாக சந்திர பகவான் கருதப்படுகிறார். மூன்றாம் பிறைச்சந்திரன், பௌர்ணமி சந்திரனின் தரிசனத்தின் போது சந்திரனுக்குரிய மந்திரங்களை துதிப்பவர்களுக்கு அழகு, சிறந்த ஞாபக சக்தி, கற்பனை வளம் மற்றும் படைப்பாற்றல் திறன் போன்றவை ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
அறிவில் சிறக்க சரஸ்வதி ஸ்தோத்திரம்

இது போன்ற மேலும் பல மந்திரங்கள் பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Chandra stotram in Tamil. It is alos called as Chandran mantra in Tamil or Chandran manthiram in Tamil or Chandran Slogam in Tamil.