அறிவில் சிறக்க சரஸ்வதி ஸ்தோத்திரம்

saraswathi-manthiram
- Advertisement -

கல்வி என்பது எல்லா காலத்திலும் உயர்வாக மதிக்கப்படும் ஒரு விடயமாகும். தங்களின் அறிவாற்றலை பெருக்கி கொள்ளவும், வாழ்வை மேம்படுத்திகொள்ளவும் பலரும் கல்வி பயில்கின்றனர். இக்காலங்களில் புத்தக படிப்பறிவு மட்டுமின்றி ஏதேனும் ஒரு பயனுள்ள கலையில் தேர்ச்சி, எழுத்தாற்றல், பேச்சாற்றல் என அனைத்திலும் திறன் கொண்டவர்களுக்கு மட்டுமே சிறந்த வாய்ப்புகள் கிடைக்கின்றன. மேலும் இன்று மேற்படிப்புகளுக்கும், வேலைவாய்ப்புகளுக்கும் பல வித தேர்வுகளை எழுத வேண்டியிருக்கிறது. இவர்கள் அனைவருக்குமான ஸ்ரீ சரஸ்வதி தேவியின் ஸ்தோத்திரம் இதோ.

saraswathi

சரஸ்வதி ஸ்தோத்திரம்

அன்னமதில் அமர்ந்திருந்து அருள்புரிபவளே
அருங்கலைகள் அனைத்திற்கும் அன்னை நீயே
அன்னமதாய் வடிவெடுத்தோன் அருள் நாயகியே
அன்னையே அம்பிகையே சரஸ்வதி தேவி

- Advertisement -

பாரதியைப் பாமாலை புனைந்திடச்செய்தாய்
பாரதியே உன் பாதம் சரணடைந்தேனே
பக்தியுடன் பரவசமாய்ப் பாடிடுவோரைப்
பல்லாண்டு வாழ்ந்திடவே செய்திடுவாயே

Goddess Saraswathi

வெள்ளைத் தாமரையில் கொலு வீற்றிருப்பாய்
வெள்ளை உள்ளம் கொள்ளவே செய்திடும் தாயே
கூத்தனூர் உறைகின்ற வீணா வாணியே
கூடிக்கூடி உன் பாதம் பணிந்திடச்செய்வாய்

- Advertisement -

வீணையில் கானத்தை எழுப்பியே எந்தன்
வீணான சஞ்சலத்தைப போக்கிடும் தாயே
வித்தைகளைக் கற்றிடவே விழைந்திடுவோரை
விதம் விதமாய் அத்தனையும் கற்றிடச்செய்வாய்

கண்ணிமைக்கும் நேரத்திலும் காட்சி தரும் தாயே
பண்ணிசைக்கும் திறம் தனையே எனக்களித்திடுவாய்
உண்மையாய் உன்னையே நம்பிடுவோரின்
எண்ணங்களை உளமார நிறைவேற்றிடுவாய்

- Advertisement -

saraswathi

கல்வி கடவுளான சரஸ்வதி தேவியை போற்றும் ஸ்தோத்திரம் இது. இந்த ஸ்தோத்திரத்தை தினந்தோறும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும், வீட்டில் பூஜையறையில் இருக்கும் சரஸ்வதி தேவையின் படத்திற்கு முன்பு பஞ்சதீப எண்ணெய் தீபம் ஏற்றி, தூபங்கள் கொளுத்தி, இந்த ஸ்தோத்திரத்தை 9 முறை படித்து வருவதால் ஞாபக திறன் அதிகரிக்கும். எதையும் சுலபத்தில் புரிந்து கொள்ளும் திறன் உண்டாகும். எழுத்தாற்றல், பேச்சாற்றல் மேம்படும். கலைகளில் சிறந்த தேர்ச்சி ஏற்படும். எழுதும் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற முடியும்.

Goddess Saraswathi

கல்வியறிவு பெற வேண்டியது எல்லோருக்கும் அவசியமாகும். இன்றைய காலத்தில் கல்வி என்பது நமது வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானதாக இருக்கிறது. புத்தகத்தை மட்டுமே படித்து பெற்ற அறிவாக இல்லாமல் பேச்சு, எழுத்து மற்றும் இதர கலைகளில் ஞானம் போன்றவற்றிலும் சிறந்தவர்களாக இருந்தால் தான் ஒருவரை இந்த உலகம் போற்றும். மனிதர்களுக்கு கல்வி மற்றும் கலைகளில் தேர்ச்சியை தருபவள் கல்வி கடவுளான சரஸ்வதி தேவி. அவளை போற்றும் இந்த ஸ்தோத்திரத்தை படிப்பதால் கல்வி கலைகளில் சிறக்கலாம்.

இதையும் படிக்கலாமே:
ஹயக்ரீவ ஸ்தோத்திரம்

இது போன்று மேலும் பல மந்திரங்கள், ஜோதிட குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைதிருங்கள்.

English overview:
Here we have Saraswati stotram in Tamil. It is also called as Saraswati slokam in Tamil or Saraswati slogam in Tamil or Saraswati mantra in Tamil.

- Advertisement -