ஜோதிடம் : 12 லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் சந்திரன் தரும் பலன்கள் என்ன தெரியமா?

12-lagnam
- Advertisement -

நவகிரகங்களில் ஒவ்வொரு கிரகமும் ஒரு மனிதனின் வாழ்வில் அந்த கிரகத்திற்குரிய காலம் வரை ஆதிக்கம் செலுத்தும் நிலை திசை எனப்படும். நமது ஜாதகத்தில் இருக்கின்ற ஒன்பது கிரகங்களுக்கும் அதற்குரிய திசை காலங்கள் வரும் போது நம் வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதில் சூரியனுக்கு அடுத்து இரண்டாவதாகவே வரும் கிரகமான சந்திரன் திசை காலத்தில் 12 லக்கினத்தார்களுக்கும் எத்தகைய பலன்கள் ஏற்படும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

astro wheel 1

சந்திரனுக்கு நட்பு கிரகமாக செவ்வாய் இருக்கிறது. எனவே செவ்வாயின் லக்னமான மேஷத்தில் பிறந்தவர்களுக்கு 4ம் இடமாக கடக ராசி வருகிறது இந்த ராசிக்குரிய அதிபதி சந்திரன் எனவே மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சந்திர திசை நடக்கும் காலத்தில் சந்திரன் இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு நன்மையான பலன்களை அதிகம் வழங்குவார்.

- Advertisement -

சுக்கிரன் அசுர குரு எனப்படுகிறார். எனவே சுக்கிரனுக்குரிய ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு 3ம் அதிபதியாக சந்திரன் அமைவதால், ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் அவ்வளவாக நற்பலன்களை தருவது இல்லை. சந்திரனின் நட்பு மற்றும் சம கிரகமான புதனுக்குரிய மிதுன லக்னத்திற்கு சந்திரன் இரண்டாம் அதிபதி என்பதால் மிதமான அளவில் ஜாதகருக்கு நற்பலன்களை வழங்குவார். கடக லக்னத்திற்கு சந்திரன் லக்னாதிபதி என்பதால் சந்திர திசை காலத்தில் கடக லக்கினத்தில் பிறந்தவர்கள் ஏற்றமிகு வாழ்க்கை அமைய பெறுவார்கள்.

jathagam astro

சிம்ம லக்னத்திற்கு சந்திரன் பன்னிரெண்டாம் அதிபதியாகவும், லக்னாதிபதி சூரியனுக்கு சந்திரன் நட்பு கிரகமாக வருவதாலும் சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் ஓரளவுக்கு நன்மையான பலன்களை சந்திரன் திசை காலத்தில் பெற முடியும். புதனுக்குரிய கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பதினோராம் அதிபதி மற்றும்
லாபாதிபதியாகவும் சந்திரன் வருவதால் சந்திர திசை சாதகமான பலன்களையே தரும்.

- Advertisement -

Chandra Baghavan

சுக்கிரனுக்குரிய துலாம் லக்னத்திற்கு பத்தாம் அதிபதியாக சந்திரன் இருப்பதால், சந்திர திசை நடைபெறும் போது உத்தியோகம், தொழில், வியாபாரங்கள் போன்றவற்றில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். செவ்வாய்க்குரிய விருச்சிக லக்னத்திற்கு ஒன்பதாம் அதிபதி மற்றும் பாதகாதிபதியாகவும் சந்திரன் வருவதால் அவ்வளவு சிறப்பான நன்மைகள் சந்திர திசை காலத்தில் ஏற்படாது.

chandra bagawan

குரு பகவானுக்குரிய தனுசு லக்னத்திற்கு எட்டாம் அதிபதி சந்திரன் என்பதால், வளர்பிறை சந்திரனாக ஜாதகத்தில் அமையப் பெற்றால் மட்டுமே நற்பலனை கொடுப்பார். சனிக்குரிய மகர லக்னத்திற்கு சந்திரன் ஏழாம் அதிபதி என்பதால் சந்திர திசை காலத்தில் ஏற்ற இறக்கமான பலன்களே ஜாதகருக்கு ஏற்படும்.

- Advertisement -

chandhiran

சனி பகவானுக்குரிய கும்ப லக்னத்திற்கு சந்திரன் ஆறாம் அதிபதி என்பதால் ஜாதகருக்கு சந்திர திசை நடைபெறும் காலத்தில் மறைமுக எதிரிகளின் எதிர்ப்புகள், சதிகளுக்கு ஆளாக வேண்டியிருக்கும். குருவுக்குரிய மீன லக்னத்திற்கு சந்திரன் ஐந்தாம் அதிபதி என்பதால் சந்திர திசை நடைபெறும் காலத்தில் ஜாதகருக்கு மிகவும் சாதகமான பலன்கள் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
12 வீடுகளில் சந்திரன் இருப்பதால் ஏற்படும் பலன்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Chandra thisai lagna palan in Tamil. It is also called as 12 lagnas in Tamil or Jathagam lagnangal in Tamil or Jothidam thisai palan in Tamil or 12 lagna palangal in Tamil.

- Advertisement -