ஜோதிடம் : 12 வீடுகளில் சந்திரன் இருப்பதால் ஏற்படும் பலன்கள் என்ன தெரியுமா?

chandran

12 கட்டங்கள் அல்லது வீடுகள் இருக்கும் ஒரு ஜாதகத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் இருக்கும் கிரகங்களை பொறுத்து பலன்கள் மறுபாடுகின்றன. அப்படியான பலன்கள் ஒரு நன்மை தருவதாகவும் அல்லது பாதகங்களை ஏற்படுவதாகவும் இருக்கலாம். அந்த வகையில் ஜாதகத்தில் இருக்கும் 12 வீடுகளில் சந்திரன் இருந்தால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சூரியனுக்கு அடுத்த நிலையில் இருக்கும் கிரகம் சந்திரன் கிரகமாகும். மனிதனின் கவர்ச்சி தன்மை, சிறந்த ஞாபகத்திறன், தாயார், மனோபலம் ஆகியவற்றிற்கு சந்திரன் காரகனாக இருக்கிறார். சந்திரன் தேய்பிறை காலத்தில் பாதக பலன்களையும், வளர்பிறை காலத்தில் சுப பலன்களையும் தருபவராக இருக்கிறார். எனவே ஒருவர் பிறக்கும் போது சந்திரன் வளர்பிறை அல்லது தேய்பிறை சந்திரனாக இருந்ததை பொறுத்தே அவர்களுக்கான பலன்கள் ஏற்படும்.

சந்திரன் முதல் வீடு அல்லது லக்கினத்தில் இருப்பது நல்லது. அதே நேரம் சந்திரனுக்கு அது சொந்த வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோ இருந்தால் அல்லது நல்லது நட்பு வீடாக இருந்தால் ஜாதகர் அவரது வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலையை அடைய சந்திரன் உதவி புரிவார். சிற்றின்ப சுக போகங்கள் சிறப்பாக அமையும். போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறுவதும், திடீர் பணவரவு போன்றவையும் ஏற்படும்.

chandra bagavan

2 ஆம் வீட்டில் சந்திரன் ஜாதகருக்கு நிறைவான செல்வம் தருவார். சிறந்த பேச்சாற்றல் இருக்கும். அரசாங்கத்தினரிடம் நல்ல மதிப்பு இருக்கும். அதிக சொத்து சுகங்கள் கிடைக்க பெறுவார்கள். பெயரும் புகழும் உண்டாகும். நல்ல கல்வி கிடைக்கும். 3 ஆம் வீட்டில் சந்திரன் இருந்தால் மிகுந்த உடல் வலிமையையும், ஆற்றலையும் தருவார். சகோதர சகோதரிகளை ஆதரிக்கும் நிலையை ஏற்படுத்தும். மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். மூன்றாவது வீடாக இருப்பதால் சந்திரன் ஜாதகரை அடிக்கடி குறுகிய பயணங்கள் செய்ய வைப்பார். நல்ல வாகன வசதி ஏற்படும்.

- Advertisement -

4 ஆம் வீட்டில் சந்திரன் இருந்தால் மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும். ஜாதகத்தில் 4 ஆம் வீடு ஒருவர் வசிக்கும் வீட்டை குறிப்பதால் இங்கு சந்திரன் இருக்க பெற்ற ராசியினர் ஆறு, குளம், கடற்கரை போன்ற பகுதிகளுக்கருகில் வீடு அமையும். ஜாதகரின் தாய்வழிச் சொத்துகள் அவருக்கே கிடைக்கும். பிறருக்கு கொடுத்து உதவும் குணம் இருக்கும்.

chandra bagawan

ஒரு ஜாதகத்தில் 5 ஆம் வீட்டில் சந்திரன் பலம் பெற்று இருந்தால் பணம் வந்து கொண்டே இருக்கும். நற்பண்புகள் மிகுந்த நண்பர்கள் கிடைப்பார்கள். சிறந்தத அறிவாற்றல் பெற்றிருப்பார்கள். சந்திரன் இவர்களை வாழ்க்கையில் உயர்ந்த நிலைய அடைய வைப்பார். அழகான குழந்தை பாக்கியம் அமையும். ஆனால் பெண் குழந்தைகளே அதிகம் பிறக்கும்.

6 ஆம் வீட்டில் சந்திரன் இருந்தால் ஜாதகர் சுகபோக வாழ்வு வாழ்பவராக இருப்பார். அதே சமயம் அவருக்கு எதிரிகளை ஏற்படுத்துவார். இளம் வயதில் ஜாதகர் கஷ்டப்படும் சூழல் இருக்கும். சந்திரன் அசுப பலன் பெற்று இருந்தால் அடுத்தவருக்கு அடங்கி நடக்கக்கூடிய நிலை இருக்கும். 7 ஆம் வீட்டில் சந்திரன் இருந்தால் ஜாதகர் ஆணாக இருந்தால் அவர் பெண்களுக்கு அடங்கி நடக்க கூடியவராக இருப்பார்.அழகிய முகம் மற்றும் உடல் தோற்றம் கொண்டிருப்பார். ஜாதகருக்கு அழகான வாழ்க்கை துணை அமையும். வியாபாரத்தில் மிகுதியான லாபங்களை ஈட்டுவார்.

Chandra Baghavan

8 ஆம் வீட்டில் சந்திரன் ஒருவரின் ஜாதகத்தில் இருந்தால் அந்த நபர் சிறந்த அறிவாற்றல் மிகுந்தவராக இருப்பார். ஆனால் அவர் அடிக்கடி நோய்கள் பாதிக்கும் வகையில் பலவீனமான உடல் பெற்றிருப்பார். பெருந்தன்மை குணம் அதிகம் பெற்றவராக இருப்பார்கள், நாட்டியம் போன்ற

9 ஆம் வீட்டில் உள்ள சந்திரன் இருக்கப் பெற்ற ஜாதகர்கள் நல்ல பாக்கியசாலியாக இருப்பார்கள். சிறந்த புத்திர பாக்கியம் உண்டாகும். இவர்களின் உறவினர்கள் இவர்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். செல்வம் குவியும். சங்கீதம், நாடகம், நாட்டியம் போன்ற கலைகளில் ஈடுபாடு அதிகமிருக்கும். தாயின் அரவணைப்பு இறுதி வரை இருக்கும்.

chandhiran

10 ஆம் வீட்டில் சந்திரன் இருந்தால் ஜாதகர் தன் மதத்தின் மீது பற்று அதிகம் ஏற்பட்டு அந்த மதத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவர். ஜாதகருக்கு சிறப்பான செல்வ வளத்தை 10 ஆம் இடத்து சந்திரன் தருவார். தொழில், வியாபாரங்களில் பகைவர்களை வெற்றிக்கொள்ளும் தைரியத்தை இந்த சந்திரன் கொடுப்பார். தொழில்நுட்பத்துறையில் நல்ல அறிவு வளர செய்வார். சிலருக்கு அரசாங்கத்தில் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்.

11 ஆம் வீட்டில் சந்திரன் இருந்தால் ஜாதகருக்கு மூத்த சகோதர்கள் மூலம் தனலாபத்தை தருவார். எந்த வேலையை எடுத்தாலும் எளிதில் முடிக்க கூடிய திறமை உண்டாகும். தீர்க்காயுள் ஏற்படும். வேலையாட்கள் மூலம் வருமானம் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்கள் மீது ஆர்வம் ஏற்படும். அரசாங்கத்தின் மூலம் பெயரும் புகழும் கிடைக்கும்.

12 ஆம் வீட்டில் சந்திரன் இருந்தால் ஜாதகருக்கு பாதங்களில் வலி உண்டாகும். வாழ்க்கையில் மதிப்பு இழக்க செய்வான். கண் பார்வை கோளாறுகள் ஏற்படும்.அறிவாற்றல் குறையும். குறுகிய மனப்பான்மை இருக்கும். மனஉளைச்சல் இருக்கும். ஒரு சிலருக்கு வெளிநாடு சென்று தங்கும் சூழல் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
12 ராசிகளில் சூரியன் இருப்பதால் ஏற்படும் பலன்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have 12 rasi chandran palan in Tamil. It is also called as Jothidam chandran palangal in Tamil or 12 veedu in jathagam in Tamil or Jathagathil chandran in Tamil or Chandran palangal in Tamil.