இன்று இந்த சந்திர மூல மந்திரம் துதித்தால் பலன்கள் அதிகம் உண்டு

chandran
- Advertisement -

மனிதர்களுக்கே உரிதான மனம் மிக சக்தி ஒரு அம்சமாகும். மனம் நன்றாக இருந்தாலே நமது உடல்நலம் சிறப்பாக இருக்கும். 90 சதவீத ஆரோக்கிய குறைபாடுகள் மனதில் ஏற்படும் பாதிப்புகளாலேயே ஏற்படுகின்றன என நவீன விஞ்ஞானம் கூறுகிறது. நமது பண்டைய ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒன்பது கோள்களில் சந்திரன் ஒரு மனிதனின் மனதிற்கு காரகனாகிறார் என கூறப்பட்டுள்ளது. ஜாதகத்தில் இந்த சந்திரனின் நிலை சரியில்லாத போதோ கோட்சார ரீதியாக கெட்டிருக்கும் போதோ சந்திர கிரக தோஷம் ஏற்பட்டு வாழ்வில் பல சங்கடங்களை சந்திக்க நேர்கிறது. அந்த சந்திர பகவானின் தோஷங்கள் நீங்கி, நன்மையான பலன்கள் அதிகரிக்க உதவும் சந்திரன் மூல மந்திரம் இதோ.

chandra bagavan

சந்திரன் மூல மந்திரம் :

ஓம் ஸ்ரீம் க்ரீம் ஹம் ரம் சம் சந்த்ராய நம

- Advertisement -

மனித மனங்களை கட்டுப்படுத்தும் சந்திர பகவானின் சக்தி வாய்ந்த மூல மந்திரம் இது. இந்த துதியை தினமும் காலையில் குளித்து முடித்ததும் 11 முறை துதிப்பது நல்லது. திங்கட்கிழமைகள், மாதத்தில் உங்கள் நட்சத்திரத்திற்கான சந்திராஷ்டம தினங்கள், பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் இந்த துதியை துதித்து வழிபடுவதால் சந்திராஷ்டம தோஷங்கள் நீங்கும். ஜன வசீகரம் உண்டாகும். அதீத கோபம், மன அழுத்தம் போன்றவை குறையும். மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். தாயாரின் உடல் நிலை சீராக இருக்கும். திருமணமான தம்பதிகளிடையே ஏற்படும் பிரச்சனைகள் தீர்ந்து ஒற்றுமை அதிகரிக்கும். சந்திர பகவானின் அருள் கிடைக்கும்.

chandra bagawan

சந்திர பரிகாரங்கள்:

- Advertisement -

சந்திர பகவானுக்குரிய சிறந்த பரிகாரத் தலமாக தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் திங்களூர் சந்திரன் கோவில் இருக்கிறது. ஏதேனும் ஒரு வளர்பிறை திங்கட்கிழமை தினத்தில் காலை 9 மணிக்குள்ளாக திங்களூர் சந்திர பகவான் கோவிலுக்கு, சென்று சந்திர பகவானுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து, வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி வழிபடுவதால் ஜாதகத்தில் சந்திர பகவானால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும். இந்த பரிகாரத்தை ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது வருடத்திற்கு ஒருமுறையோ செய்வது சிறப்பு.

திங்களூர் சந்திர பகவான் கோவிலுக்கு சென்று வழிபட முடியாதவர்கள் வளர்பிறை திங்கட்கிழமை மற்றும் பௌர்ணமி தினங்களில் அருகில் உள்ள கோவிலில் இருக்கும் நவக்கிரக சந்நிதியில் சந்திரனுக்கு மல்லிகை பூ சாற்றி, நிறமி சேர்க்கப்படாத கேசரி அல்லது தயிர் சாதம் நைவேத்தியம் வைத்து, சந்திர காயத்ரி மந்திரத்தை 108 அல்லது 1008 முறை வரை துதித்து வழிபாடு செய்வதால் சந்திர பகவானின் அருளால் வாழ்வில் மங்களமான பலன்கள் அதிகம் ஏற்படும்.

- Advertisement -

Chandra Baghavan

மேற்கூறிய இரண்டு பரிகாரங்களையும் செய்ய முடியாதவர்கள் திங்கட்கிழமைகள் மற்றும் பௌர்ணமி தினங்களில் அருகில் உள்ள சிவ பெருமான் கோவிலில், சிவபெருமான் அபிஷேகத்திற்கு தரமான பசும்பாலை தானமாக கொடுக்க வேண்டும். தினமும் காலையில் எழுந்ததும் பெற்ற தாயாரிடம் காலை தொட்டு, ஆசிர்வாதம் வாங்குவது சந்திரனின் அருளை உங்களுக்கு தரும். வெள்ளியில் சந்திரகாந்தக்கல் பதித்த மோதிரத்தை எப்போதும் உங்கள் வலது கை மோதிர விரலில் அணிந்து கொள்வது சிறந்தது.

chandra grahanam

மேலும் உங்கள் சக்திக்கு ஏற்ப திங்கட்கிழமைகளில் மனநலம் குன்றியவர்கள் மற்றும் ஏழைகளுக்கு தயிர்சாதம், நீர்மோர் போன்றவற்றை தானம் வழங்க வேண்டும். கோடைக்காலங்களில் மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் பந்தல் அமைப்பது, சாலையில் திரிகின்ற விலங்குகள் தாகம் தணிப்பதற்கு வீட்டிற்கு வெளியே தண்ணீர் தொட்டியில் நீர் ஊற்றி வைப்பதும் சந்திர பகவானின் அருளைப் பெறுவதற்கான சிறந்த பரிகாரங்களாக இருக்கிறது.

இதையும் படிக்கலாமே:
கஷ்டங்களை போக்கும் பைரவர் காயத்ரி மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we Chandran Moola mantra in Tamil. This mantra is also called as Chandra manthiram in Tamil or Chandra bhagavan mantra in Tamil or Moola mantras in Tamil or Chandran manthiram in Tamil.

- Advertisement -