உங்களுக்கு ஏற்படும் திடீர் ஆபத்துகள், துரதிர்ஷ்டங்கள் நீக்குவதற்கான மந்திரம்

Sivan

எல்லா மனிதர்களுக்கு வாழ்வில் பல வித இன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்கிற ஆசை இருப்பதில் தவறில்லை. ஆனால் அவை நியாயமான வழிகளில் பெற கூடியதாக இருக்க வேண்டும். ஆசைகள் பல இருந்தாலும் அதை அனுபவிக்கும் அதிர்ஷ்டங்கள் வெகு சிலருக்கே கிட்டுகின்றன. பலருக்கு பெரும்பாலான சமயங்கள் துரதிர்ஷ்டங்கள் மட்டுமே ஏற்படுகின்றன. மேலும் துஷ்ட சக்திகளின் தாக்கமும் அதனால் திடீர் ஆபத்துகளும் இவர்களுக்கு ஏற்படுகிறது.இவற்றை எல்லாம் நீக்கும் “சந்திரசேகரர் மந்திரம்” இதோ.

Sivan and Karaikal ammayar

சந்திரசேகரர் மந்திரம்

ஆபத்துத்தரணாய வடுக பைரவாய
சங்கவர்ணாய சந்திரசேகராய நமோநம

சந்திரசேகரரான சிவபெருமானை போற்றும் மந்திரம் இது. மிகவும் சக்தி வாய்ந்த இம்மந்திரத்தை தினமும் 27 முறை பாராயணம் செய்வது நல்லது. சிவபெருமானின் அம்சமாக ராமாவதாரத்தில் ஸ்ரீ ராமருக்கு சேவகனாக தோன்றியவராக கருதப்படுபவர் ஸ்ரீ ஆஞ்சநேயர். ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று ஆஞ்சநேயரை வழிபடும் போது இம்மந்திரத்தை துதித்து ஆஞ்சநேயரை வணங்கினால் துஷ்ட சக்திகளின் தாக்கம் நீங்கும். துரதிர்ஷ்டங்கள் நீங்கும். திடீரென்று நமக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளிலிருந்து நம்மை காக்கும்.

hanuman

பல ரூபங்கள் கொண்ட தெய்வம் சிவபெருமான் ஆவார். பார்வதி, கங்கை என இரு மனைவிகள் இருந்தாலும் இல்லற வாழ்விற்குரிய தோற்றம் பெறாமல், எப்போதும் யோகி போன்று காட்சி தருபவர் சிவபெருமான். ராவணனை வதம் புரிய மகாவிஷ்ணு ராமர் அவதாரம் எடுக்கவிருப்பதை அறிந்து, அவருக்கு உறுதுணையாக ஏக பிரம்மச்சாரியான சேவகனாக தானும் சேவை புரிய போவதாக கூறி சிவனின் அம்சமாக தோன்றியவர் ஸ்ரீ ஆஞ்சநேயர் மேற்கண்ட மந்திரம் கூறி துதிப்பதால் சிவபெருமான் ஆஞ்சநேயர் ஆகிய இருவரின் அருளும் உங்களுக்கு கிட்டும்.

இதையும் படிக்கலாமே:
திருமண தாமதம் நீங்க, செல்வம் சேகரம் ஏற்பட மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Chandrasekar mantra in Tamil. It is also called as Chandrasekara slogam in Tamil or Aabathu neenga manthiram in Tamil or Shiva stuti in Tamil or Sivanin manthirangal.