உங்க வீட்டில, சென்னா மசாலாவை இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க! திரும்பத் திரும்ப செஞ்சிட்டே இருப்பீங்க!

masala
- Advertisement -

சென்னா மசாலா என்றாலே அது, கடையிலிருந்து வாங்கி சாப்பிட்டால்தான் நன்றாக இருக்கும் என்று நினைப்பார்கள். நம் வீட்டிலேயும் சுவையான சென்னா மசாலாவை செய்து அசத்த முடியும். சுலபமான முறையில், கொஞ்சம் வித்தியாசமாக, இந்த மசாலாவை எப்படி செய்வது, என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இது சுவையானது. ஆரோக்கியமானது. இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, இவைகளுக்கு காரசாரமான குழம்பு என்று கூட சொல்லலாம்! சரி சூப்பர் சென்னா மசாலா எப்படி செய்வது? பார்த்து விடலாமா!

Kondai kadalai masala

Step 1:
100 கிராம் வெள்ளை கொண்டைக் கடலைக்கு, தேவையான செய்முறையை பார்க்கலாம். 100 கிராம் வெள்ளை கொண்டைக்கடலையை, முந்தைய நாள் இரவே, ஊற வைத்துவிட வேண்டும். அதாவது கொண்டைக்கடலை 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வேண்டும். உங்களுக்கு சென்னா மசாலா, இரவு தேவைப்பட்டால், காலை எழுந்தவுடன் கொண்டைக்கடலையை தண்ணீரில் போட்டு ஊற வைத்துக் கொள்ளலாம். ஊற வைத்த கொண்டைக்கடலையை குக்கரில் போட்டு, கொஞ்சம் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி நான்கிலிருந்து ஐந்து விசில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.

- Advertisement -

Step 2:
இதற்கு 3 வகையான விழுதுகளை அரைத்து தனித்தனியாக, எடுத்து வைக்கப் போகின்றோம். அது என்னவென்று ஒவ்வொன்றாக பார்த்து விடுவோம். முதலில் மிக்ஸியில் 1/2 கப் அளவு தேங்காய் துருவல் சேர்த்து, 10 முந்திரிப்பருப்பு சேர்த்து, 2 பச்சை மிளகாய் போட்டு, பேஸ்ட் போல் அரைத்து வைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் முந்திரிப்பருப்பை குறைவாகவும் சேர்த்துக்கொள்ளலாம். முந்திரிப்பருப்பை அதிகமாக சேர்க்கும் பட்சத்தில் கிரேவி ரிச்சாக இருக்கும். இரண்டாவதாக, 2 பழுத்த மீடியம் சைஸ் தக்காளியை மிக்ஸியில் போட்டு, விழுதாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். மூன்றாவதாக, ஒரு இருபது கொண்டைக்கடலை அளவு எடுத்து, மிக்ஸி ஜாரில் போட்டு, அதையும் அரைத்து வைத்து கொள்ளுங்கள். மூன்று விழுதையும், தனித்தனி கப்பில், தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

Step 3:
இப்போது கடாயில் 4 டேபிள்ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, 2 பெரிய வெங்காயத்தை மிகவும் பொடியாக நறுக்கி, சேர்த்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் பாதியளவு வதங்கியதும், 1 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, பச்சை வாடை போகும் அளவிற்கு வதக்கவேண்டும். வெங்காயம் சிவப்பு நிறமாக மாறும் வரை வதக்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வெங்காயம் சிவக்க ஆரம்பித்ததும், மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், மல்லித் தூள் – 1 ஸ்பூன், மிளகாய்தூள் – 1 ஸ்பூன், சீரக தூள் – 1 ஸ்பூன், கரம் மசாலா – 1 ஸ்பூன், தேவையான அளவு உப்பு சேர்த்து, எண்ணெயில் நன்றாக வதக்க வேண்டும். இரண்டு நிமிடங்கள் வரை வதக்கி, மசாலா அனைத்தும் சேர்ந்து, இந்த விழுது சிவப்பு நிறத்துக்கு வந்துவிடும். அந்த சமயத்தில், முதலில் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை ஊற்றி, 30 வினாடிகள் கொதிக்க விட வேண்டும். இரண்டாவது, அரைத்து வைத்திருக்கும் தக்காளி விழுதை சேர்த்து 30 வினாடிகள் கொதிக்க விட வேண்டும். அதன் பின்பாக மசித்து வைத்திருக்கும் கொண்டைகடலை விழுதையும் சேர்த்து, உங்களுக்கு கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீரையும் சேர்த்து, நன்றாக கலந்து விட்டு 30 வினாடிகள் கொதிக்க விட்ட பின்பு, வேக வைத்திருக்கும் கொண்டைக்கடலையை கடாயில் சேர்த்து விடுங்கள்.

Kondai kadalai masala

எல்லா மசாலாவும் ஒன்றாக கலந்து கொதிக்க ஆரம்பித்த பின்பு, உப்பு காரத்தை சரிபார்த்துக் கொள்ளவும். அதன்பின்பு மூடி போட்டு 5 நிமிடங்கள் வரை, மிதமான தீயில் சென்னா மசாலாவை கொதிக்க விட வேண்டும். இறுதியாக, சென்னா மசாலா என்று ஒரு பவுடர் கடைகளில் விற்கும். அதை 1 ஸ்பூன் சேர்த்து, கிளறி, ஒரு நிமிடம் கழித்து, கறிவேப்பிலை கொத்தமல்லி தழை தூவி இறக்கினால், சூப்பர் சென்னா மசாலா தயார். உங்களுக்கு புளிப்புச்சுவை தேவைப்பட்டால், கொஞ்சம் எலுமிச்சைச்சாறு இதில் இறுதியாக பிழிந்து கொள்ளலாம்.

Kondai kadalai masala

பின்குறிப்பு: சிலபேருக்கு பட்டை, லவங்கம், ஏலக்காய் இதனுடைய வாசனை தூக்கலாக இருந்தால் மிகவும் பிடிக்கும். உங்களுக்கு இந்த மசாலா பொருட்களின் வாசனை பிடித்திருந்தால், கடாயில் 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றிய பின்பு, முதலில் கரம் மசாலா பொருட்களை தாளித்த பின்பு, பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து கொள்ளலாம். அது உங்களுடைய இஷ்டம் தான்.

- Advertisement -