வாழ்க்கையில் நாய் படாதபாடு படுபவர்கள்! சனிக்கிழமையில் நாய்களுக்கு இந்த உணவை மட்டும் கொடுத்து பாருங்கள்.

வாழ்க்கையில் ஒவ்வொருவரும் பல கஷ்டங்களை அனுபவித்து கொண்டிருப்போம். எல்லோருக்கும் கஷ்டங்கள் வந்து தான் போகும். ஆனால் ஒரு சிலருக்கு கஷ்டமே வாழ்க்கையாக அமைந்து விடுகிறது. ஒரு பிரச்சனை போனால் இன்னொரு பிரச்சினை என்று லைன் கட்டி நிற்கும். இது போன்றவர்கள் தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அழுத பிள்ளைக்கு தான் பால் கிடைக்கும் என்பது போல், துன்பங்கள் வரும் பொழுது இறைவனுக்கு வேண்டியதை செய்தால் தான் துன்பமில்லாத வாழ்க்கையும் அமையும்.

praying-god1

ஒருவருடைய வாழ்க்கையில் தொடர்ந்து துன்பங்களே வந்து கொண்டிருந்தால் நிச்சயம் அவர்களுடைய கிரகநிலைகள் நல்ல நிலையில் இருக்காது. அதிலும் குறிப்பாக சனி கிரகம் நீசம் பெற்றிருந்தால் அல்லது உச்சம் பெற்று இருந்தால் நாய் படாதபாடு பட வேண்டியிருக்கும். இதை கூறுவதற்கு வேடிக்கையாக இருந்தாலும், உண்மையில் இது போன்ற கஷ்டங்களை அனுபவிப்பவர்கள் மிகவும் பாவம் தான். கர்ம வினை பயன் எப்படி இருக்கிறது? என்பதைப் பொறுத்து தான் சனி கிரகமானது நம்மை ஆட்கொள்ளும் பொழுது துன்பங்களை தருவார்.

ஒரு உதாரணமாக ஒருவருடைய ஜாதகத்தில் அவர்கள் செய்த கர்ம வினை பயன்கள் என்ற ஒன்று இருக்கும். அதாவது முன் ஜென்மத்தில் அவர்கள் செய்த பாவங்களை அவை குறிக்கும். இதைப் பொறுத்து தான் சனி கிரகமானது தக்க சமயத்தில் உங்களுடைய ஜாதகத்தில் சரியான அமைப்பில் வந்து உட்காரும். அப்படி உட்காரும் பொழுது நீங்கள் செய்த பாவத்தின் அளவின்படி உங்களை ஆட்டி படைப்பார்.

sani-baghavan

நீங்கள் குறைவாக பாவம் செய்திருந்தால் குறைவாகவும், அதிகமாக பாவம் செய்திருந்தால் அதிகமாகவும் கஷ்டங்களையும், துன்பங்களையும் கொடுப்பார். இதில் இருந்து தப்பிப்பதற்கு கடவுளாக இருந்தாலும் கூட நிச்சயம் முடியாது. இதற்கு சான்றாக பல புராணங்கள் இருக்கிறது. அந்த புராணங்கள் சனிபகவான் கடவுளையே விட்டு வைப்பதில்லை என்பதை வலியுறுத்துகிறது. அப்படியிருக்க மனிதனாகிய நம்மால் என்ன செய்ய முடியும்? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

சனி பகவானுடைய தாக்கங்களை குறைக்க பைரவர் நமக்கு துணை புரிகிறார் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. பைரவர் சனிபகவானின் அம்சமாகவே காட்சி தருகின்றார். பைரவரை வழிபடுபவர்களுக்கு எந்தத் துன்பமும் வராது என்பது நியதி. பைரவர் உடைய வாகனமாக கூறப்பட்டிருக்கும் நாய்களுக்கு குறிப்பிட்ட சில உணவுகளை வழங்குவதன் மூலம் சனி கிரக தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. அப்படியான ஒரு உணவு வகை தான் சப்பாத்தி.சப்பாத்தி மட்டுமல்ல.. பொதுவாகவே சாதாரண நாய்களுக்கு உணவு வைப்பதன் மூலம் நிறைய நன்மைகள் நடைபெறும். ஆனால் சனி தோஷம் நீங்க இது சிறந்த பரிகாரமாக இருக்கும்.

chappathi

சனிக் கிழமை அன்று கருப்பு நிற நாய்களுக்கு சப்பாத்தியை போடுவதன் மூலம் சனி கிரக தோஷம் நீங்கும். சனி கிரக தோஷம் மட்டுமல்லாமல் நாய் என்பது பைரவர் உடைய வாகனமாக இருப்பதால் அனைத்து விதமான கிரகங்களின் தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். எனவே சனிக் கிழமையில் கருப்பு நிற நாய்களுக்கு சப்பாத்தி வைத்துப் பாருங்கள். வாழ்க்கையில் நிச்சயம் எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் அவைகள் விலகி நன்மைகள் நடக்கும்.

இதையும் படிக்கலாமே
குங்குமம் இந்த திசையில் நின்று வைத்துக் கொண்டால் கணவன்-மனைவி வாழ்வில் சந்தோஷம் அதிகரிக்கும் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.