குங்குமம் இந்த திசையில் நின்று வைத்துக் கொண்டால் கணவன்-மனைவி வாழ்வில் சந்தோஷம் அதிகரிக்கும் தெரியுமா?

kungumam-kumkum

குங்குமம் வைக்கும் பெண்களிடம் எந்த துஷ்ட சக்திகளும் அணுகாது என்பது அதில் மறைக்கப்பட்டிருக்கும் உண்மை. அதனால் தான் நம் முன்னோர்கள் திருமணமான பெண்களை நெற்றியின் வகிட்டில் குங்குமம் வைக்க அறிவுறுத்தினார்கள். எந்த ஒரு பெண்ணிடம் நெற்றியில் குங்கும திலகம் இருக்கிறதோ! அந்த பெண்ணை பார்க்கும் ஆணுக்கு மரியாதை உணர்வு ஏற்படுவதாக ஆன்மீகம் கூறுகிறது. திருமணமாகாத பெண்களும் தினமும் நெற்றியில் பொட்டிற்கு கீழே குங்குமம் இட்டுக் கொண்டு வேலைக்கோ அல்லது படிக்கவோ சென்று வந்தால் மிகவும் நல்லதாம். அப்படியான இந்த குங்குமத்தை மனைவியாக பட்டவள் இந்த திசையை பார்த்து வைத்துக் கொண்டால் கணவன்-மனைவிக்குள் பிரச்சனையே வராது என்கிறது ஆன்மீக சாஸ்திரம். அதைப் பற்றிய தகவல்களை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

kungumam

ஒவ்வொரு பெண்ணும் திருமணம் ஆன நாள் முதல் தினந்தோறும் நெற்றி வகிட்டில் சுத்தமான குங்குமத்தை தவறாமல் வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி வைக்கும் பொழுது கணவனுடைய அன்பும், அரவணைப்பும் நீடிப்பதாக கூறப்படுகிறது. நெற்றி வகிட்டில் குங்குமம் வைக்காத பெண்களுக்கு வாழ்க்கையில் பிரச்சினைகளும் அதிகமாக காணப்படுகிறது என்பது தான் உண்மை. அதுபோல் நெற்றியின் இரு புருவ மத்தியில் சிவப்பு நிற பொட்டை வைப்பது மிகவும் நல்லது. திருமணம் ஆன பெண்களாக இருந்தாலும் சரி, திருமணமாகாத பெண்களாக இருந்தாலும் சரி எப்போதும் கருப்பு பொட்டு வைப்பதை தவிர்க்க வேண்டும். மாதவிடாய் சமயங்களை தவிர மற்ற நாட்களில் கருப்பு பொட்டு வைப்பது அவ்வளவு நல்லதல்ல.

கணவனை இழந்த பெண்கள் பொட்டு வைக்கக்கூடாது என்று சொல்வதற்கு மிக முக்கிய காரணம் ஒன்று தான். பொட்டு வைக்கும் இடமானது சூட்சமமான வர்ம புள்ளிகளை கொண்டுள்ள இடமாக இருந்து வருகிறது. அந்த இடத்தில் பாலின தூண்டுதல்கள் இருக்கும் என்பதாலேயே கணவனை இழந்த பெண்களை பொட்டு வைக்க வேண்டாம் என்பது அந்த காலத்தில் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் மறுமணம் செய்து கொள்ள நினைக்கும் பெண்கள் தாராளமாக வைத்துக் கொள்ளலாம். அதில் எந்த தவறும் இல்லை.

bindi

குங்குமம் ஆரோக்கியமான சிந்தனைகளைத் தோற்றுவிக்கும் அற்புதமான மாமருந்தாக இருக்கிறது. குங்குமம் வைத்துக் கொள்பவர்கள் உடைய நினைவுகள் ஆரோக்கியமானவையாக இருக்கும். தீய வழிகளில் மனம் ஆட்படுவதை தடுத்து நிறுத்தும் பேராற்றலாக இந்த குங்குமம் நிச்சயம் செயல்படுகிறது என்பது முற்றிலுமான உண்மையாகும். குங்குமம் வைத்துக் கொள்பவர்கள் எளிதில் யாருக்கும் வசியமாக மாட்டார்கள். வசியம் செய்ய நினைக்கும் நபர் தோல்வியைத் தழுவுவார். அந்த அளவிற்கு மகா சக்தி நிறைந்த இந்த குங்குமத்தை தினமும் வைத்துக் கொள்வதால் நிறைய பலன்கள் உண்டு.

- Advertisement -

குங்குமம் கிழக்கு நோக்கிய திசையில் திருமணமான பெண்கள் இட்டுக் கொள்வது மிகவும் நல்லது. இப்படி கிழக்கு நோக்கி திருமணமான பெண்கள் நெற்றி வகிட்டில் குங்குமம் தினமும் இட்டுக் கொண்டால் கணவன்-மனைவிக்குள் பிரச்சினைகள் குறையும் என்பது நம்பிக்கை. சந்தோஷமான வாழ்வும், நிம்மதியான சூழலும் உண்டாகும். கணவன் மனைவிக்குள் எத்தகைய கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இப்படி தினமும் செய்வதால் நிச்சயம் அவைகள் மாறும் என்பது நம்பிக்கை.

kungumam

முந்தைய காலங்களில் நம்முடைய முன்னோர்கள் குங்குமம் வைத்துக் கொள்வதற்காக முகம் பார்க்கும் கண்ணாடியை கிழக்குத் திசையில் மாட்டி வைப்பது வழக்கமாக கொண்டுள்ளார்கள். கண்ணாடி கிழக்கு திசையில் இருந்தால் இயற்கையாகவே நாம் கிழக்கு திசையை பார்த்து வைத்துக் கொள்வோம். எனவே இனி குங்குமம் வைத்துக் கொள்பவர்கள் கிழக்கு திசையை நோக்கி வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயம் கணவன் மனைவிக்குள் பிணக்குகள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே
நாளை, இந்த ஒரு தீபத்தை ஏற்றினால் போதுமே! உங்களுடைய பாவங்களில் பாதி குறைந்து விடும். புரட்டாசி சனி மட்டுமல்ல, புரட்டாசி புதனுக்கு எத்தனை மகத்துவம் என்று நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.