மீந்து போன சப்பாத்தியில் சுவையான லட்டு இப்படி கூட தயாரிக்கலாமா? இது தெரிஞ்சா இனிமே சப்பாத்தி வேஸ்ட்டே ஆகாதே!

chappathi-luddu_tamil
- Advertisement -

எப்பொழுதும் சாதம் சாப்பிட்டு போர் அடித்து போனவர்கள் அவ்வப்பொழுது சப்பாத்தி செய்வது வழக்கம். இப்படி செய்யும் சப்பாத்தி மீந்து போனால் அதை வைத்து என்ன செய்வது? என்றே பலருக்கும் தெரிவது கிடையாது. சப்பாத்தியை வைத்து கொத்து சப்பாத்தி, சில்லி சப்பாத்தி என்று விதவிதமாக செய்து அசத்தலாம். அந்த வகையில் மீந்து போன சப்பாத்தியை வைத்து சுவையான லட்டு தயாரிப்பது எப்படி? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி தொடர்ந்து காண இருக்கிறோம்.

சப்பாத்தியில் தான் இந்த லட்டு செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை! கோதுமை மாவு இருந்தாலும் ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொண்டு அதில் தேவையான அளவிற்கு தண்ணீர் தெளித்து ஃபுட் கலர் சேர்த்து நன்கு பிசைந்து உருண்டைகளாக்கிக் கொள்ளலாம். பின்னர் இந்த உருண்டைகளை சப்பாத்தி போல தட்டி இரண்டு புறமும் வேக வைத்து எடுத்து அரைத்து பின்னர் இதே போலவும் செய்யலாம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

மீந்து போன சப்பாத்தி – 6, சர்க்கரை – 100 கிராம், ஏலக்காய் – 2, எல்லோ ஃபுட் கலர் – 3 சொட்டு, நெய் – ஒரு டீஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு – 10.

செய்முறை

மீந்து போன சப்பாத்தியில் லட்டு செய்வதற்கு முதலில் தேவையான அளவிற்கு சப்பாத்திகளை எடுத்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி போட்டுக் கொள்ளுங்கள். இதை ஒரு மிக்ஸர் ஜாரில் சேர்த்து நன்கு நைசாக கொரகொரவென்று அரைத்து எடுத்து வாருங்கள். பின்னர் அதே மிக்ஸி ஜாரில் 100 கிராம் அளவிற்கு வெள்ளை சர்க்கரையை சேர்த்து அதனுடன் ரெண்டு ஏலக்காய்களை போட்டு நைசாக பவுடர் போல அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் அரைத்து வைத்துள்ள சப்பாத்தி பவுடர் மற்றும் சுகர் பவுடருடன் கொஞ்சம் போல எல்லோ ஃபுட் கலரை தண்ணீரில் கலந்து தெளித்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு டீஸ்பூன் அளவிற்கு நெய் சேர்த்து நன்கு கட்டிகள் இல்லாமல் எல்லா இடங்களிலும் படும்படி கைகளால் பிசைந்து விடுங்கள். தேவையான அளவிற்கு நெய்யை ஒரு தாளிப்பு கரண்டியில் ஊற்றி அடுப்பை பற்ற வைத்து அதில் வையுங்கள்.

நெய் லேசாக சூடேறியதும் 10 முந்திரி பருப்புகளை குட்டி குட்டியாக பொடித்து போட்டு வறுத்துக் கொள்ளுங்கள். வறுத்த இந்த முந்திரி பருப்புகளையும் சேர்த்து எல்லா இடங்களிலும் நன்கு உதிர்த்து கலந்து விட்டுக் கொள்ளுங்கள். தண்ணீர் எதுவும் சேர்க்கக்கூடாது. நெய் பயன்படுத்தி லட்டு பிடிக்கும் அளவிற்கு ஈரப்பதமாக செய்து கொள்ளுங்கள். பின்னர் சிறு சிறு உருண்டைகளாக லட்டு போல அழுத்தம் கொடுத்து உருண்டை பிடித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
ஆரோக்கியம் நிறைந்த சிறுதானிய ராகி லட்டு உருண்டை எப்படி சுலபமாக செய்வது? பழங்கால முறையில் ராகி சிமிலி ரெசிபி செய்முறை இதோ!

நெய் இல்லை என்றால் அதற்கு பதிலாக நீங்கள் டால்டாவும் பயன்படுத்தலாம். அவ்வளவுதான், இப்பொழுது சூப்பரான, சுவையான கோதுமை சப்பாத்தி லட்டு தயார்! எல்லோருமே விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் எளிதாக செய்யக்கூடிய இந்த சப்பாத்தி லட்டுவை நீங்களும் வீட்டில் சப்பாத்தி இருக்கும் பொழுது செய்து பார்த்து அசத்துங்க, எல்லோரும் நிச்சயம் உங்களை பாராட்டுவாங்க.

- Advertisement -