கையெழுத்தை வைத்து ஒருவரின் குணத்தை கண்டறிவது எப்படி தெரியுமா ?

astrology

பொதுவாக ஒருவரது குணத்தை ஜாதகம் கொண்டு அறிவது வழக்கம். ஆனால் கை எழுத்தை கொண்டு ஒருவரின் குணத்தை அறியமுடியுமா என்றால் முடியும் என்பதே பதில். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக எழுத்துக்களை எழுதுவதுண்டு அந்த வகையில் எந்த வகை கையெழுத்தை உடையவரின் குணம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம் வாருங்கள்.

handwriting

அதிக இடம் விட்டு எழுதுபவர்கள்:
ஒவ்வொரு வார்த்தைக்கு, எழுத்திற்கும் இடையிலும் அதிக இடம் விட்டு எழுதுபவர்கள் பொதுவாக அனைவரிடத்திலும் அவ்வளவாக உறவாடலாம் பெரும்பாலான நேரங்களின் தனித்து இருப்பார்கள்.

அடிக்கடி அடித்து எழுதுபவர்கள்:
வாக்கியத்தையோ அல்லது சொல்லையோ எழுதிவிட்டு பின் அதை அடித்து அதற்கு மேல் வேறொன்றை எழுதுவது பெரும்பாலானோர் செய்யும் செயலே. ஆனால் இதை சிலர் அடிக்கடி செய்வார்கள். அவர்கள் எப்போதும் ஏதாவது ஒரு குழப்பத்தில் இருக்கும் மனநிலையை கொண்டவர்கள்.

handwriting

நீட்டி நீட்டி எழுதுபவர்கள்:
ஒவ்வொரு எழுத்தையும் நீட்டி நீட்டி எழுதுபவர்கள் பொதுவாக வேகமாக எழுதுவார்கள். இவர்களுக்கு துணிச்சல் சற்று அதிகமாகவே இருக்கும். பிறர் செய்ய அஞ்சும் செயல்களை இவர்கள் செய்து காட்டுவார்கள்.

- Advertisement -

நேராக எழுதுபவர்கள்:
வாக்கியத்தை கோடுபோட்டது போல நேராக எழுதுபர்கள் எந்த ஒரு பிரச்னையையும் சுலபமாக முடிப்பார்கள். அதே போல பிரச்சனைகளை கண்டு இவர்கள் எப்போதும் துவண்டு போகமாட்டார்கள்.

handwriting

 

வலப்பக்கமாக சாய்த்து எழுதுபவர்கள்:
எழுத்துக்களை வலப்பக்கமாக சாய்த்து எழுதுபவர்கள் எதிர்காலத்தை பற்றிய கனவையும் அதை சாதிக்கும் நம்பிக்கையையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இடப்பக்கமாக சாய்த்து எழுதுபவர்கள்:
எழுத்துக்களை இடப்பக்கமாகச் சாய்த்து எழுதுபவர்கள் நடந்ததை நினைத்து அவ்வப்போது கலவை கொள்ளும் சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதோடு இவர்களுக்கு பயமும் சற்று அதிகமாகவே இருக்கும்.

handwriting

 

 

குண்டு குண்டாக எழுதுபவர்கள்:
எழுத்துக்களை குண்டு குண்டாக எழுதுவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். அதோடு இவர்களுக்கு பெரும்பாலான விடயங்களில் ஆர்வம் அதிகமாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
சாய் பாபாவிற்கு சீரடியில் உருவச் சிலை வந்ததன் ரகசியம்

சிறு சிறு எழுத்தாக எழுதுபவர்கள்:
எழுத்துக்களை சிறியதாக எழுதுபவர்கள் எதிலும் நம்பிக்கை இல்லாதவர்கள் போல இருப்பார்கள். ஆனால் செய்யும் வேலையை இவர்கள் ஒழுங்காக செய்வார்கள்.

handwriting

குறுகிய இடைவெளி விட்டு எழுதுபவர்கள்:
வரிகளுக்கு இடையே குறுகிய இடைவெளி விட்டு எழுதுபவர்களின் மனப்பான்மை அவர்கள் விடும் இடைவெளியை போல குறுகியே இருக்கும்.