சாய் பாபாவிற்கு எப்படி சீரடியில் உருவச் சிலை வந்தது தெரியுமா?

saibaba2
- Advertisement -

சாய்பாபா தன் வாழ்நாள் முழுவதும் பல அதிசயங்களை நிகழ்த்தி தன் பக்தர்களை பரவசப்படுத்தினார். பின் கடந்த 1918 ஆம் ஆண்டு விஜய தசமி அன்று அவர் சமாதியடைந்தார். அதன் பின்னர் கிட்டதட்ட 36 ஆண்டுகள் அவருடைய புகைபடத்தை வைத்தே சீரடியில் பூஜைகள் நடந்தது. அதன் பின் ஒரு நாள் இத்தாலியில் இருந்து அற்புதமான பளிங்குக்கல் ஒன்று பம்பாய் துறைமுகத்திற்கு வந்திறங்கியது. விலை உயர்ந்த அந்த பளிங்கு கல் ஏன் வந்தது, எதற்கு வந்தது என்று யாருக்கும் அப்போது தெரியாது.

saibaba

அந்த கல்லை வரவைத்தவரும் அதை வாங்க வரவில்லை. இதன் காரணமாக அந்த பளிங்குக்கல்லை ஏலம் விட முடிவு செய்யப்பட்டது. இந்த செய்தியை அறிந்த சாய் சமஸ்தான அதிகாரிகள் அந்த கல்லை ஏலத்தில் எடுக்க முடிவு செய்தனர். சாய்பாபாவின் சிலையை செய்வதற்காக அந்த கல்லை சாய் சமஸ்தான அதிகாரிகள் ஏலத்தில் எடுக்கவிருக்கின்றனர் என்ற செய்தி அறிந்து பலர் அந்த ஏலத்தில் இருந்து விலகினார்.

- Advertisement -

இறுதியாக அந்த கல் சாய் சமஸ்தான அதிகாரிகளால் ஏலத்தில் எடுக்கப்பட்டது. பின் அதை சிற்பமாக வடிக்க பம்பாயை சேர்ந்த பாலாஜி வஸந்த் தாலிம் என்னும் சிற்பியிடம் கொடுக்கப்பட்டது. ஒரே ஒரு கருப்பு வெள்ளை நிற புகைப்படத்தை சிற்பியிடம் கொடுத்து, இதுபோல தான் சிலை வர வேண்டும் என்று கூறினர். அந்த புகை படத்தில் பாபாவின் முகம் தெளிவாக இல்லாததால் அந்த சிற்பி மிகவும் சிரமப்பட்டார். என்ன செய்வதென்று அவருக்கு புரியவில்லை.

Sai baba

அன்று இரவு, சிற்பியின் கனவில் தோன்றிய பாபா, தன் முகத்தை வெவ்வேறு கோணங்களில் சிற்பியிடம் காட்டி அவருடைய ஆழ் மனதில் பதியவைத்தார். அடுத்தநாள் காலையில் எழுந்த சிற்பியின் ஆழ்மனதில் பாபாவின் முகம் தெள்ள தெளிவாக பதிந்திருந்தது. அவர் தன் வேலையே துவங்க, சிற்பம் அற்புதமாக வடிவமைக்கப்பட்டது.

- Advertisement -

sai-baba

சிற்பத்தை பார்த்த அனைவரும், அச்சு பிசகாமல் சிற்பம் பாபாவை போலவே உள்ளது என்று கூறினார்.

இதையும் படிக்கலாமே
சாய் பாபாவே நேரில் வந்து ஒரு பெண்ணிற்கு உதவிய உண்மை சம்பவம்

அதன் பிறகு 1954 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், 7-ம் தேதி பாபாவின் சமாதிக்கு முன்னால் அந்த சிற்பம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அற்புதமான அந்த சிலையையே தினமும் பல லட்சம் பக்தர்கள் வணங்கி வருகின்றனர்.

சாய் பாபாவின் அற்புதங்கள் மற்றும் சாய் பாபா கதைகள் படிக்க தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

- Advertisement -