எந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு எது அதிஷ்டம் தெரியுமா ?

astrology

ஜோதிட நீதியாக எப்படி ஒருவரின் பிறந்த நேரம் மற்றும் தேதியை வைத்து ஒருவரின் குணத்தை கண்டறிய முடிகிறதோ அதே போல ஒருவர் பிறந்த மாதத்தை வைத்து அவருக்கு அதிஷ்டம் தரக்கூடிய எண் மற்றும் பொதுவான சில குணங்களை கணிக்க முடியும்.

ஜனவரி:

januaryஜனவரி மாதத்தில் பிறந்தவர்கள் எப்போதும் சுறுசுறுப்போடு காணப்படுவார்கள். இவர்களுக்கு ஆர்வமும் லட்சியமும் இருக்கும். இவர்கள் எந்த விடயத்தையும் எளிதாக முடிப்பார்கள். எதையும் கணக்கு போட்டு செலவு செய்வார்கள். இவர்களுக்குரிய அதிர்ஷ்ட எண் 1.

பிப்ரவரி:

Februaryபிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்களுக்கு பொதுவாகவே கற்பனை திறன் அதிகமாக இருக்கும் ஆகையால் கலை துறைக்கும் இவர்கள் சென்றால் வெற்றிபெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இந்த மாதத்தில் பிறந்தவர்களை புரிந்துகொள்வது சற்று சிரமம் என்றாலும் கூட இவர்களுக்கு பிடித்தவர்களிடம் இவர்கள் மிகுந்த அன்பு செலுத்துவார்கள். இவர்களுக்குரிய அதிஷ்ட எண் 2.

மார்ச்:

- Advertisement -

MARCHமார்ச் மாதத்தில் பிறந்தவர்கள் எதிலும் நேர்மையோடு இருக்கவேண்டும் என்று எண்ணுவார்கள். மற்றவர்களுக்கு அடிபணிந்து செல்லும் குணம் இவர்களிடம் குறைவாக இருக்கும். மற்றவர்களை எளிதில் கவரும் ஏதோ ஒரு விஷயம் இவர்களிடம் இருக்கும். அது இவர்களின் அழகாக இருக்கலாம் அல்லது பேச்சு திறமையாக இருக்கலாம் அல்லது வேறு ஏதாவதாக இருக்கலாம். இவர்கள் நிர்வாகத்தில் சிறந்து விளங்குவார்கள். இவர்களுக்குரிய அதிஷ்ட எண் 3.

ஏப்ரல்:

APRILஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக செயல்படுவார்கள். இவர்களுக்கு பிடிவாத குணம் சற்று அதிகமாக இருக்கும். இவர்கள் மற்றவர்களிடம் மிக எளிதாக பேசி பழகி விடுவார்கள். ஆனால் இவர்கள் எந்த ரகசியத்தையும் அவ்வளவு எளிதில் யாரிடமும் கூற மாட்டார்கள். சொந்த தொழில் செய்தால் இவர்கள் அதிக லாபம் பெறலாம். இவர்களுக்குரிய அதிஷ்ட எண் 4.

மே:

MAYமே மாதத்தில் பிறந்தவர்கள் தனிமை விரும்பிகளாக இருப்பார்கள். இவர்கள் தனக்கென ஒரு நியதியை வகுத்துக்கொண்டு அதன் படி செயல்படுவார்கள். இவர்களிடம் நிர்வாக திறமை இருக்கும். எதிலும் விடாமுயற்சியோடு போராடும் குணம் இவர்களிடம் இருக்கும். இவர்களுக்குரிய அதிஷ்ட எண் 5.

ஜூன்:

JUNEஜூன் மாதத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களிடம் ஒளிவு மறைவின்றி பேசுவார்கள். அதோடு அனைவரிடமும் எளிதாக பழகி விடுவார்கள். இவர்களுக்கு கற்பனை திறன் சற்று அதிகமாக இருக்கும். இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் இவர்கள் சமமாக கருதுவார்கள். ஆராய்ச்சி, மருத்துவம் போன்ற துறைகளில் இவர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும். இவர்களுக்குரிய அதிஷ்ட எண் 6.

ஜூலை:

JULYஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் எதிலும் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். அறிவும் நேர்மையும் இவர்களிடம் இருக்கும். யார் வம்பு தும்பிற்கும் போகாமல் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற குணம் கொண்டவர்களாக இவர்கள் இருப்பார்கள். ஆனால் இவர்களை பார்த்தால் சிலருக்கு பயம் இருக்கும். இவர்களுக்குரிய அதிஷ்ட எண் 7.

ஆகஸ்ட்:

augustஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்களுக்கு நிறைய நண்பர்கள் இருப்பார்கள் ஆனாலும் இவர்களுக்கு தனிமை என்பது மிக பிடித்தமான ஒன்றாக இருக்கும். இவர்களிடம் தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். அதோடு இவர்கள் நகைச்சுவையை விரும்புபவர்களாக இருப்பார்கள். இவர்களுக்குரிய அதிஷ்ட எண் 8.

செப்டம்பர்:

SEPTEMBERசெப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் எந்த தொழிலை செய்தாலும் வெற்றிபெறுவார்கள். இவர்கள் உறவுகளை மதிப்பார்கள். ஒருவரோடு பழகிவிட்டால் அந்த உறவு நீண்ட நாட்கள் நீடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். தவறு செய்பவர்களை இவர்கள் அவளவு எளிதில் மன்னிக்க மாட்டார்கள். இவர்களுக்குரிய அதிஷ்ட எண் 9.

அக்டோபர்:

OCTOBERஅக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு அதிக நண்பர்கள் இருப்பார்கள். உறவினர்கள் மீது அதிக பாசம் கொண்டவர்களாக இவர்கள் இருப்பார்கள். எல்லோரிடம் வெளிப்படையாக பேசும் குணம் கொண்ட இவர்கள் யாரையும் எளிதில் வெறுக்க மாட்டார்கள். இவர்களுக்குரிய அதிஷ்ட எண் 1.

நவம்பர்:

NOVEMBERநவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் எதையும் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். உண்மையோ பொய்யோ எதையும் அடித்து பேசுவார்கள். இவர்கள் பொதுவாகவே நண்பர்கள் மீது நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களை காட்டிலும் நாம் ஒரு படி முன்னே இருக்க வேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் இருக்கும். இவர்களுக்குரிய அதிஷ்ட எண் 2.

டிசம்பர்:

DECEMBERடிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் சற்று ஆடம்பரமாக வாழ நினைப்பார்கள். இவர்களுக்கு கோவம் வந்தால் யாராலும் கட்டுப்படுத்த முடியாது. நினைத்ததை எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற குணம் இவர்களிடம் இயல்பாகவே இருக்கும். எதிலும் கடினமாக உழைப்பார்கள். இவர்களுக்குரிய அதிஷ்ட எண் 3.

ஜோதிடம் மற்றும் ஜாதக ரீதியான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் பெற தெய்வீகம் மொபைல் APP-ஐ டவுன்லோட் செய்யுங்கள்.