- Advertisement -
Homeஜோதிடம்ராசிப்படி நீங்கள் மாற்ற வேண்டிய ஒரு குணம்

ராசிப்படி நீங்கள் மாற்ற வேண்டிய ஒரு குணம்

- Advertisement -

ஜோதிடத்தில் 12 ராசியில் ஒவ்வொரு ராசிக்காரர்களும், ஒவ்வொரு குணாதிசயம் கொண்டவர்களாக இருப்பார்கள். நல்லது, கெட்டது ரெண்டும் கலந்து தான் ஒருவரிடம் இருக்கும். அவற்றில் சில மோசமான குணங்களும் அடங்கும். இந்த ஒரு குணத்தை மாற்றிக் கொள்வதன் மூலம் உங்கள் ராசியின் படி இனி வெற்றி மேல் வெற்றி வரும். அது என்ன குணம்? எந்தெந்த ராசிக்கு என்னென்ன பலன்கள்? என்பதைத் தான் ஜோதிடம் சார்ந்த இப்பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் விட்டுக் கொடுப்பது கிடையாது. தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்கிற கர்வம் சற்றே மேலோங்கி காணப்படுவீர்கள். உங்கள் ராசிப்படி நீங்கள் சற்று வளைந்து கொடுத்துப் போகும் குணத்தை வளர்த்துக் கொண்டால் நிச்சயம் வெற்றி மேல் வெற்றியை காணக்கூடிய அம்சம் காணப்படுகிறது.

- Advertisement -

ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் தேவையானதை பெறுவதற்கு சற்று தயக்கத்தை தளர்த்தித் தான் ஆக வேண்டும். எப்போதும் கூச்சப்பட்டு கொண்டே இல்லாமல், கேட்க வேண்டியதை கேட்கும் குணத்தை வளர்த்துக் கொண்டால் வெற்றி மேல் வெற்றி கிட்டும்.

மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்கள் எளிதில் எல்லோரையும் நம்பிவிடும் குணம் கொண்டவர்கள். எந்த முடிவையும் உடனடியாக எடுக்காமல் சிந்தித்து எடுப்பது நல்லது. எவரையும் எளிதில் நம்பும் குணத்தை நீங்கள் மாற்றிக் கொண்டால் வெற்றி மேல் வெற்றியை காணலாம்.

- Advertisement -

கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்கள் தலைமை பண்பு அதிகம் கொண்டுள்ளவர்கள். எந்த ஒரு விஷயத்தையும் ஆர்வமாக கற்றுக் கொள்வீர்கள். நீங்கள் தலைகனத்தை சற்று மாற்றிக் கொண்டால் வெற்றி காணலாம்.

சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் அடிக்கடி உங்கள் மீதே நீங்கள் நம்பிக்கை இழந்து போவீர்கள். கோபம் தான் உங்களுக்கு முதல் எதிரி. கோபத்தை குறைத்து, தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டால் வெற்றி மேல் வெற்றியை நீங்கள் அடைவீர்கள்.

- Advertisement -

கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்கள் தனியாக ஒரு விஷயத்தை செய்வதை விட, குழு சேர்த்து கூட்டமாக ஒரு விஷயத்தை செய்யும் பொழுது எளிதில் வெற்றி காணக்கூடிய அமைப்பாக இருக்கிறது.

துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் எதிலும் நிதானத்தை தவறவிடுவார்கள். அவசர குணத்தை மாற்றி சிந்தித்து திட்டம் தீட்டி செயல்பட்டால் வெற்றி உங்கள் வசமாகும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் எதையும் அலசி ஆராய்ந்து முடிவெடுப்பீர்கள் ஆனாலும் அதில் அதிக நேரத்தை கடத்துவீர்கள். துரிதமாக செயல்பட்டால் வெற்றி உங்கள் வசமாகும்.

தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்கள் அசட்டு தைரியத்தில் செயல்படுவீர்கள். இந்த குணத்தை மாற்றி அலட்சியம் இல்லாமல் பொறுப்புணர்வோடு இருப்பது நல்லது. எதற்கெடுத்தாலும் எரிந்து விழும் குணம் உங்களிடம் இருந்தால் அதை கண்டிப்பாக மாற்றிக் கொள்ளுங்கள், வெற்றி உங்கள் காலடி தேடி வரும்.

மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்கள் அவசர குடுக்கை போல் செயல்படுவீர்கள். எந்த ஒரு கேள்விக்கும் நிதானமாக யோசித்து பின்னர் பதில் சொல்லி பாருங்கள், வெற்றி உங்களை தேடி வரும்.

கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்கள் தற்பெருமை அதிகம் கொண்டவர்கள். வாய்ச்சவடால் விடாமல் செயலில் உங்கள் திறமைகளை காண்பியுங்கள், வெற்றி உங்களை தேடி தானாகவே வந்து சேரும்.

இதையும் படிக்கலாமே:
இந்த வார ராசிபலன் 23/09/2024 முதல் 29/09/2024 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்கள் நீங்கள் உழைக்கும் உழைப்பை ரகசியமாக வைத்திருக்காமல் மற்றவர்களுக்கு தெரியும் படி வெளிச்சம் போட்டு காட்டுங்கள். உங்கள் திறமைக்கு நீங்கள் வெற்றியை வசமாக்கி விடுவீர்கள்.

சற்று முன்